Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஆறாவது அத்தியாயம் - தியான யோகம் - 5[2] Continued

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஆறாவது அத்தியாயம் - தியான யோகம் - 5[2] Continued

    கீதை – ஆறாவது அத்தியாயம் - தியான யோகம் - 6[2]

    Continued

    युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु।
    युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा॥१७॥
    யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு|
    யுக்தஸ்வப்நாவபோ³த⁴ஸ்ய யோகோ³ ப⁴வதி து³:க²ஹா ||6-17||
    யுக்த ஆஹார விஹாரஸ்ய= ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
    கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய = வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
    ஸ்வப்ந அவபோ³த⁴ஸ்ய யுக்த = உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
    து³:க²ஹா யோக³: ப⁴வதி = துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது
    ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது. 17
    ________________________________________
    यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते।
    निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा॥१८॥
    யதா³ விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்ட²தே|
    நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்⁴யோ யுக்த இத்யுச்யதே ததா³ ||6-18||
    விநியதம் சித்தம் = தன்வசப் பட்டுள்ள உள்ளம்
    யதா³ ஆத்மநி ஏவ = எப்பொழுது தனதுள்ளேயே
    அவதிஷ்ட²தே = நிலைபெற்றிருகிறதோ
    ததா³ ஸர்வகாமேப்⁴ய: நி:ஸ்ப்ருஹ: = அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன்
    யுக்த: இதி உச்யதே = யோக முற்றான் எனப் படுவான்
    உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.
    ________________________________________
    यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता।
    योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः॥१९॥
    யதா² தீ³போ நிவாதஸ்தோ² நேங்க³தே ஸோபமா ஸ்ம்ருதா|
    யோகி³நோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோக³மாத்மந: ||6-19||
    நிவாதஸ்த²: தீ³ப: = காற்றில்லாத இடத்தில் விளக்கு
    யதா² ந இங்க³தே = எப்படி அசையாமல் இருக்குமோ
    ஸா உபமா = அதே உவமை
    ஆத்மந: யோக³ம் யுஞ்ஜத: யோகி³ந: = ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய
    யதசித்தஸ்ய ஸ்ம்ருதா = வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது
    சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.
    ________________________________________
    यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया।
    यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति॥२०॥
    யத்ரோபரமதே சித்தம் நிருத்³த⁴ம் யோக³ஸேவயா|
    யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்²யந்நாத்மநி துஷ்யதி ||6-20||
    யோக³ஸேவயா = யோகப் பயிற்சியினால்
    நிருத்³த⁴ம் சித்தம் = கட்டுண்ட சித்தம்
    யத்ர உபரமதே = எங்கு ஆறுதல் எய்துமோ
    ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்²யந் = எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து
    ஆத்மநி ஏவ துஷ்யதி = ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ
    எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ
    ________________________________________
    सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम्।
    वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः॥२१॥
    ஸுக²மாத்யந்திகம் யத்தத்³பு³த்³தி⁴க்³ராஹ்யமதீந்த்³ரியம்|
    வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்தி²தஸ்²சலதி தத்த்வத: ||6-21||
    அதீந்த்³ரியம் = புலன்களைக் கடந்து நிற்பதும்
    பு³த்³தி⁴க்³ராஹ்யம் = புத்தியால் தீண்டத்தக்கதும்
    யத் ஆத்யந்திகம் ஸுக²ம் = எந்த முடிவற்ற பேரின்பத்தை
    தத் யத்ர வேத்தி = அதை எங்கு காண்பானோ
    யத்ர ஸ்தி²த = எங்கு நிலைபெறுவதால்
    தத்த்வத: ந ஏவ சலதி = இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ
    புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,
    ________________________________________
    यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः।
    यस्मिन्स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते॥२२॥
    யம் லப்³த்⁴வா சாபரம் லாப⁴ம் மந்யதே நாதி⁴கம் தத:|
    யஸ்மிந்ஸ்தி²தோ ந து³:கே²ந கு³ருணாபி விசால்யதே ||6-22||
    யம் லாப⁴ம் லப்³த்⁴வா = எதனை யெய்தியபின்
    தத: அபரம் அதி⁴கம் ந மந்யதே ச = அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ
    யஸ்மிந் ஸ்தி²த: = எங்கு நிலை பெறுவதால்
    கு³ருணா து³:கே²ந அபி = பெரிய துக்கத்தாலும்
    ந விசால்யதே = சலிப்பெய்த மாட்டானோ
    எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,
    ________________________________________
    तं विद्याद्दुःखसंयोगवियोगं योगसंज्ञितम्।
    स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा॥२३॥
    தம் வித்³யாத்³து³:க²ஸம்யோக³வியோக³ம் யோக³ஸம்ஜ்ஞிதம்|
    ஸ நிஸ்²சயேந யோக்தவ்யோ யோகோ³ऽநிர்விண்ணசேதஸா ||6-23||
    து³:க² ஸம்யோக³ வியோக³ம் = துன்பத்துடன் கலத்தலை விடுதலை
    தம் யோக³ஸம்ஜ்ஞிதம் = அந்நிலையே யோக நிலையென்று
    வித்³யாத் = உணர்
    ஸ யோக³: = அந்த யோகத்தை
    அநிர்விண்ணசேதஸா = உள்ளத்தில் ஏக்கமின்றி
    நிஸ்²சயேந யோக்தவ்ய: = உறுதியுடன் பற்றி நிற்கக் கடவான்
    அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.
    ________________________________________
    सङ्कल्पप्रभवान्कामांस्त्यक्त्वा सर्वानशेषतः।
    मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः॥२४॥
    ஸங்கல்பப்ரப⁴வாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸே²ஷத:|
    மநஸைவேந்த்³ரியக்³ராமம் விநியம்ய ஸமந்தத: ||6-24||
    ஸங்கல்பப்ரப⁴வாந் = சங்கல்பத்தினின்றும் எழும்
    ஸர்வாந் காமாந் அஸே²ஷத: த்யக்த்வா = எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு
    மநஸா இந்த்³ரியக்³ராமம் ஸமந்தத: ஏவ விநியம்ய = மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி
    சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,
    ________________________________________
    शनैः शनैरुपरमेद्बुद्ध्या धृतिगृहीतया।
    आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत्॥२५॥
    ஸ²நை: ஸ²நைருபரமேத்³பு³த்³த்⁴யா த்⁴ருதிக்³ருஹீதயா|
    ஆத்மஸம்ஸ்த²ம் மந: க்ருத்வா ந கிஞ்சித³பி சிந்தயேத் ||6-25||
    ஸ²நை: ஸ²நை: உபரமேத்= மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து
    த்⁴ருதி க்³ருஹீதயா பு³த்³த்⁴யா = துணிந்த மதியுடன்
    மந: ஆத்மஸம்ஸ்த²ம் க்ருத்வா = மனதை ஆத்மாவில் நிறுத்தி
    கிஞ்சித் அபி ந சிந்தயேத் = எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்
    துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.
    ________________________________________
    यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम्।
    ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत्॥२६॥
    யதோ யதோ நிஸ்²சரதி மநஸ்²சஞ்சலமஸ்தி²ரம்|
    ததஸ்ததோ நியம்யைததா³த்மந்யேவ வஸ²ம் நயேத் ||6-26||
    யத: யத: = எங்கெங்கே
    எதத் அஸ்தி²ரம் = இந்த நிலையில்லாத
    சஞ்சலம் மந: நிஸ்²சரதி = சஞ்சலமான மனம் அலைகிறதோ
    தத: தத: நியம்ய = அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி
    ஆத்மநி ஏவ வஸ²ம் நயேத் = ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க
    எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.
    ________________________________________
    प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम्।
    उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्॥२७॥
    ப்ரஸா²ந்தமநஸம் ஹ்யேநம் யோகி³நம் ஸுக²முத்தமம்|
    உபைதி ஸா²ந்தரஜஸம் ப்³ரஹ்மபூ⁴தமகல்மஷம் ||6-27||
    ஹி ப்ரஸா²ந்தமநஸம் = ஏனெனில் மனம் சாந்தமாக
    அகல்மஷம் ஸா²ந்தரஜஸம் = மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி
    ப்³ரஹ்மபூ⁴தம் = பிரம்மமேயாகிய
    ஏநம் யோகி³நம் = இந்த யோகிக்கு
    உத்தமம் ஸுக²ம் உபைதி = மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது
    மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.
    ________________________________________
    युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः।
    सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते॥२८॥
    யுஞ்ஜந்நேவம் ஸதா³த்மாநம் யோகீ³ விக³தகல்மஷ:|
    ஸுகே²ந ப்³ரஹ்மஸம்ஸ்பர்ஸ²மத்யந்தம் ஸுக²மஸ்²நுதே ||6-28||
    விக³தகல்மஷ: = குற்றங்களைப் போக்கி
    ஏவம் ஸதா³ ஆத்மாநம் யுஞ்ஜந் = இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்
    ப்³ரஹ்ம ஸம்ஸ்பர்ஸ²ம் = (அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய
    அத்யந்தம் ஸுக²ம் = மிக உயர்ந்த இன்பத்தை
    ஸுகே²ந ஸுக²ம் அஸ்²நுதே = எளிதில் துய்க்கிறான்.
    குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.
    ________________________________________
    सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि।
    ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः॥२९॥
    ஸர்வபூ⁴தஸ்த²மாத்மாநம் ஸர்வபூ⁴தாநி சாத்மநி|
    ஈக்ஷதே யோக³யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந: ||6-29||
    யோக³யுக்தாத்மா = யோகத்தில் கலந்தவன்
    ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந: = எங்கும் சமப் பார்வையுடையவனாய்
    ஸர்வபூ⁴தாநி ஆத்மாநம் = எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும்
    ஆத்மநி ச ஸர்வபூ⁴தாநி = தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும்
    ஈக்ஷதே = காணுகிறான்
    யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.
    यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति।
    तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति॥३०॥
    யோ மாம் பஸ்²யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்²யதி|
    தஸ்யாஹம் ந ப்ரணஸ்²யாமி ஸ ச மே ந ப்ரணஸ்²யதி ||6-30||
    ய: ஸர்வத்ர மாம் பஸ்²யதி = எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ
    ஸர்வம் ச மயி பஸ்²யதி = எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ
    தஸ்ய அஹம் ந ப்ரணஸ்²யாமி = அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை
    ஸ ச மே ந ப்ரணஸ்²யதி = எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை
    எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.
    ________________________________________
    सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः।
    सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते॥३१॥
    ஸர்வபூ⁴தஸ்தி²தம் யோ மாம் ப⁴ஜத்யேகத்வமாஸ்தி²த:|
    ஸர்வதா² வர்தமாநோऽபி ஸ யோகீ³ மயி வர்ததே ||6-31||
    ய: ஏகத்வம் ஆஸ்தித = எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக
    ஸர்வபூ⁴தஸ்தி²தம் = எல்லா உயிர்களிடத்திலுமுள்ள
    மாம் ப⁴ஜதி = என்னைத் தொழுவோன்
    ஸ யோகீ³: = அந்த யோகி
    ஸர்வதா² வர்தமாந அபி = யாங்கணும் சென்றபோதிலும்
    மயி வர்ததே = என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.
    ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.
    ________________________________________
    आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन।
    सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः॥३२॥
    ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்²யதி யோऽர்ஜுந|
    ஸுக²ம் வா யதி³ வா து³:க²ம் ஸ யோகீ³ பரமோ மத: ||6-32||
    அர்ஜுந ய: = அர்ஜுனா! எந்த யோகி
    யதி³ ஸுக²ம் வா து³:க²ம் வா = இன்பமாயினும், துன்பமாயினும்
    ஸர்வத்ர ஆத்ம ஔபம்யேந = எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே
    ஸமம் பஸ்²யதி = சமமாக பார்க்கிறானோ
    ஸ: பரம யோகீ³ மத: = அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்
    இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.
    अर्जुन उवाच
    योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन।
    एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम्॥३३॥
    அர்ஜுந உவாச
    யோऽயம் யோக³ஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மது⁴ஸூத³ந|
    ஏதஸ்யாஹம் ந பஸ்²யாமி சஞ்சலத்வாத்ஸ்தி²திம் ஸ்தி²ராம் ||6-33||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    மது⁴ஸூத³ந! = மதுசூதனா
    அயம் யோக³ ஸாம்யேந = இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று
    ய: த்வயா ப்ரோக்த: = எது உங்களால் சொல்லப் பட்டதோ
    ஏதஸ்ய ஸ்தி²ராம் ஸ்தி²திம் = அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை
    சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்²யாமி = எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை
    அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.


    Continued
    Last edited by soundararajan50; 10-08-14, 08:42.
Working...
X