கீதை – ஆறாவது அத்தியாயம்
தியான யோகம்
கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தி
யடைந்தவன் வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த மாட்டான். அவனுக்குத் தோழன், பகைவன், பந்து, நல்லவன், கெட்டவன் என்று வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரேவிதமான மனப்பான்மை ஏற்படும்.
அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும் தேக சம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி, முடிவில் கடவுளும் அவ்வாத்மாக்களும் ஒருவகைப்பட்டவர்களென்று உணர்வான். இந்நிலை பெற்றவனே யோகிகளில் சிறந்தவன்.
श्रीभगवानुवाच
अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः।
स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः॥१॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
அநாஸ்²ரித: கர்மப²லம் கார்யம் கர்ம கரோதி ய:|
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ³ ச ந நிரக்³நிர்ந சாக்ரிய: ||6-1||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ய: கர்மப²லம் அநாஸ்²ரித: = எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி
கார்யம் கர்ம கரோதி = செய்யத்தக்கது செய்கிறானோ
ஸ ஸந்ந்யாஸீ யோகீ³ ச = அவன் சந்யாசியும் யோகியும் ஆவான்
ச நிரக்³நி ந = மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான்
அக்ரிய: ச ந = செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.
________________________________________
यं सन्न्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव।
न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन॥२॥
யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோக³ம் தம் வித்³தி⁴ பாண்ட³வ|
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ³ ப⁴வதி கஸ்²சந ||6-2||
பாண்ட³வ = பாண்டவா!
யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு = எதனை சந்நியாச மென்கிறார்களோ
யோக³ம் தம் வித்³தி⁴ = அதுவே யோகமென்று அறி
ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப: = ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத
கஸ்²சந யோகீ³ ந ப⁴வதி = எவனும் யோகியாக மாட்டான்
பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते।
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते॥३॥
ஆருருக்ஷோர்முநேர்யோக³ம் கர்ம காரணமுச்யதே|
யோகா³ரூட⁴ஸ்ய தஸ்யைவ ஸ²ம: காரணமுச்யதே ||6-3||
யோக³ம் ஆருருக்ஷோ முநே = யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு
கர்ம காரணம் உச்யதே = தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது
தஸ்ய யோகா³ரூட⁴ஸ்ய = அந்நிலையில் ஏறியபின்
ஸ²ம: ஏவ காரணம் உச்யதே = சாந்தம் கருவியாகிறது
யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते।
सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते॥४॥
யதா³ ஹி நேந்த்³ரியார்தே²ஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே|
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகா³ரூட⁴ஸ்ததோ³ச்யதே ||6-4||
யதா³ இந்த்³ரியார்தே²ஷு ந அநுஷஜ்ஜதே = எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ
கர்மஸு ஹி ந = கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ
ததா³ ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ = அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன்
யோகா³ரூட⁴ உச்யதே = யோகாரூடன் என்று கூறப் படுகிறான்
ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் ‘யோக நிலையில் ஏறியவன்’ என்று சொல்லப்படுகிறான்.

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत्।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः॥५॥
உத்³த⁴ரேதா³த்மநாத்மாநம் நாத்மாநமவஸாத³யேத்|
ஆத்மைவ ஹ்யாத்மநோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மந: ||6-5||
ஆத்மாநம் ஆத்மாநா உத்³த⁴ரேத் = தன்னைத் தான் உயர்த்திக் கொள்க
ஆத்மாநம் ந அவஸாத³யேத் = தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா
ஹி ஆத்மா ஏவ ஆத்மந: ப³ந்து⁴ = தனக்குத்தானே நண்பன்
ஆத்மா ஏவ ஆத்மந: ரிபு: = தனக்குத்தானே பகைவன்
தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.

बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः।
अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्॥६॥
ப³ந்து⁴ராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:|
அநாத்மநஸ்து ஸ²த்ருத்வே வர்தேதாத்மைவ ஸ²த்ருவத் ||6-6||
ஏன ஆத்மநா ஆத்மா ஜித: = எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ
தஸ்ய ஆத்மநா = அந்த ஜீவாத்மாவிற்கு
ஆத்மா ஏவ ப³ந்து⁴ = தனக்குத் தானே நண்பன்
து அநாத்மந: = ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன்
ஆத்மா ஏவ ஸ²த்ருவத் = தனக்குத் தான் பகைவனைப் போல
ஸ²த்ருத்வே வர்தேத = பகைமையாக செயல்படுவான்
தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.

जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः।
शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः॥७॥
ஜிதாத்மந: ப்ரஸா²ந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:|
ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ததா² மாநாபமாநயோ: ||6-7||
ஸீ²தோஷ்ண ஸுக²து³:கே²ஷு = சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்
மாந அபமாநயோ: = மானாபிமானங்களிலும்
ப்ரஸா²ந்தஸ்ய = சமநிலைப்பட்ட
ஜிதாத்மந: = தன்னை வென்ற மனிதனிடத்தில்
பரமாத்மா ஸமாஹித: = பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.
தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः।
युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः॥८॥
ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ² விஜிதேந்த்³ரிய:|
யுக்த இத்யுச்யதே யோகீ³ ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந: ||6-8||
ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா = எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ
கூடஸ்த²: = எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ
விஜிதேந்த்³ரிய: = புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ
ஸம லோஷ்ட அஸ்²ம காஞ்சந: = ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும்
யோகீ³ யுக்த: இதி உச்யதே = அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்
ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु।
साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते॥९॥
ஸுஹ்ருந்மித்ரார்யுதா³ஸீநமத்⁴யஸ்த²த்³வேஷ்யப³ந்து⁴ஷு|
ஸாது⁴ஷ்வபி ச பாபேஷு ஸமபு³த்³தி⁴ர்விஸி²ஷ்யதே ||6-9||
ஸுஹ்ருத் மித்ர உதா³ஸீந மத்⁴யஸ்த² த்³வேஷ்ய ப³ந்து⁴ஷு = அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார்
ஸாது⁴ஷு பாபேஷு ச அபி = சாதுக்கள், பாவிகளிடம் கூட
ஸமபு³த்³தி⁴ = எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன்
விஸி²ஷ்யதே = மேலோனாவான்
ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.

योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः।
एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः॥१०॥
யோகீ³ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி²த:|
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீ²ரபரிக்³ரஹ: ||6-10||
யத சித்தாத்மா நிராஸீ² = உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து
அபரிக்³ரஹ: = ஏற்பது நீக்கிய
யோகீ³ ஏகாகீ = யோகி தனியனாக
ரஹஸி ஸ்தி²த: = மறைவிடத்தில் இருந்துகொண்டு
ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத = எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்
மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः।
नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम्॥११॥
ஸு²சௌ தே³ஸே² ப்ரதிஷ்டா²ப்ய ஸ்தி²ரமாஸநமாத்மந:|
நாத்யுச்ச்²ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோ²த்தரம் ||6-11||
ஸு²சௌ தே³ஸே² = சுத்தமான இடத்தில்
சைல அஜிந குஸ² உத்தரம் = துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது
ந அத்யுச்ச்²ரிதம் ந அதிநீசம் = அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும்
ஆத்மந: ஸ்தி²ரம் ஆஸநம் = தனக்கோர் உறுதியான ஆசனம்
ப்ரதிஷ்டா²ப்ய = அமைத்துக் கொண்டு
சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,

तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियाः।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये॥१२॥
தத்ரைகாக்³ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்³ரியக்ரியா:|
உபவிஸ்²யாஸநே யுஞ்ஜ்யாத்³யோக³மாத்மவிஸு²த்³த⁴யே ||6-12||
தத்ர ஆஸநே உபவிஸ்²ய = அந்த ஆசனத்தில் அமர்ந்து
யதசித்த இந்த்³ரிய க்ரிய: = உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி
மந: ஏகாக்³ரம் க்ருத்வா = மனதை ஒருமுகமாக்கி
ஆத்மவிஸு²த்³த⁴யே = ஆத்மா நன்கு தூய்மையடையும்படி
யோக³ யுஞ்ஜ்யாத்³ = யோகத்திலே பொருந்தக் கடவான்
அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः।
सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन्॥१३॥
ஸமம் காயஸி²ரோக்³ரீவம் தா⁴ரயந்நசலம் ஸ்தி²ர:|
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்³ரம் ஸ்வம் தி³ஸ²ஸ்²சாநவலோகயந் ||6-13||
காய ஸி²ரோ க்³ரீவம் ஸமம் = உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக
ச அசலம் தா⁴ரயந் = அசைவின்றி வைத்துக்கொண்டு
தி³ஸ²: அநவலோகயந் = திசைகளை நோக்காமல்
ஸ்வம் நாஸிகாக்³ரம் = தன்னுடைய மூக்கு நுனியை
ஸம்ப்ரேக்ஷ்ய = பார்த்துக் கொண்டு
உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः।
मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः॥१४॥
ப்ரஸா²ந்தாத்மா விக³தபீ⁴ர்ப்³ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி²த:|
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: ||6-14||
ப்ரஸா²ந்தாத்மா விக³தபீ⁴ = நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி
ப்³ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி²த: = பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு
மந: ஸம்யம்ய = மனதை வசப்படுத்தி
மச்சித்த: மத்பர: = என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு
யுக்த: ஆஸீத = யோகத்திலிருக்கக் கடவான்
நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः।
शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति॥१५॥
யுஞ்ஜந்நேவம் ஸதா³த்மாநம் யோகீ³ நியதமாநஸ:|
ஸா²ந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தா²மதி⁴க³ச்ச²தி ||6-15||
நியதமாநஸ: = மனதைக் கட்டுப்படுத்தி
யோகீ³ ஏவம் = யோகி இவ்விதம்
ஆத்மாநம் ஸதா³ யுஞ்ஜந் = ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு
மத்ஸம்ஸ்தா²ம் நிர்வாணபரமாம் = என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள
ஸா²ந்திம் அதி⁴க³ச்ச²தி = ஆறுதலை அடைவான்
இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन॥१६॥
நாத்யஸ்²நதஸ்து யோகோ³ऽஸ்தி ந சைகாந்தமநஸ்²நத:|
ந சாதிஸ்வப்நஸீ²லஸ்ய ஜாக்³ரதோ நைவ சார்ஜுந ||6-16||
அர்ஜுந! = அர்ஜுனா!
அத்யஸ்²நத து யோக³: ந அஸ்தி = மிகைபட உண்போனுக்கு யோகமில்லை
அநஸ்²நத: ச ஏகாந்தம் ந = உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது
ந ச அதிஸ்வப்நஸீ²லஸ்ய = மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை
ஜாக்³ரத: ஏவ ந = மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை
மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.
Continued