Announcement

Collapse
No announcement yet.

சுதீக்ஷணர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சுதீக்ஷணர்

    குருவிற்குப் பகவானைக் காட்டிய சீடர்: குறுமுனிவரான அகஸ்தியரும் அவரது சீடர்களும் ரிக் வேதத்தின் பல மந்திரங்களைக் கண்டு உணர்ந்தவர்கள். அகஸ்தியருடைய ஆசிரமத்தில் பல மாணாக்கர்கள் கல்வி பயின்று வந்தனர். சுதீக்ஷணன் அவர்களுள் ஒருவன். குருவே! தங்களின் பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். சுதீக்ஷணனைப் பாருங்கள், எவ்வளவு சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் இருக்கிறான்! சீடர்களே, ராமநாமம் ஒரு தீபம் போன்றது.. ஆம் குருவே, அது புற இருளையும் அக இருளையும் ஒருங்கே நீக்கும் என்று முன்பு ஒரு முறை கூறினீர்கள். அருமை சுதீக்ஷணா, உனது கிரகிக்கும் சக்தி அபாரம். குரு சுதீக்ஷணனைப் பாராட்டுவதால் மற்ற சீடர்கள் பொறாமை கொண்டார்கள். அவர்கள் அகஸ்தியரிடம். குருவே, நீங்கள் சுதீக்ஷணனை மிகவும் புகழ்கிறீர்கள். அதனால் அவன் எங்களை மதிப்பதே இல்லை. குறும்பாக விளையாடி எங்களைக் கேலி செய்கிறான். உங்களைவிடச் சிறியவனான அவன், ஒரு முறை சொல்வதை அப்படியே கற்பவனாக ஏகசந்த கிராஹியாக இருக்கிறான்! அதைக் கற்றுக் கொள்ளுங்கள். வீண் பொறாமையை விடுங்கள். சுதீக்ஷணன் சிறந்த மாணவனாக இருந்தாலும், இளவயது குறும்பு அவனிடம் இருக்கவே செய்தது.
    ஒருமுறை அகஸ்தியர் ஒரு யாகத்திற்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரது சாளக்கிராமம் உள்ள பூஜைப் பெட்டியை சுதீக்ஷணன் பின்னால் மெல்ல எடுத்து வந்து கொண்டிருந்தான். வழியில் ஒரு நாவல் மரத்தைக் கண்டதும் கற்களால் அடித்துப் பழங்களை எடுத்து உண்டான். சுதீக்ஷணன் மேன்மேலும் பழங்களை அடித்துக் கொண்டே அங்கிருந்த எல்லாக் கற்களையும் நதியில் வீசிவிட்டான். முடிவில் பழத்தின் மீதிருந்த ஆசையால் சிறுவனுக்குரிய குணத்துடன் குருவின் பெட்டியில் இருந்த சாளக்கிராமத்தைக் கூட எடுத்து வீசினான்! அடடா! பழம் விழுந்துவிட்டது. ஆனால் சாளக்கிராமம் நதியில் விழுந்துவிட்டதே! அட ராமா, குரு கோபிப்பாரே என்ன செய்வது? நதியில் எவ்வளவு தேடியும் சாளக்கிராமம் கிடைக்கவில்லை. அதனால் சாளக்கிராமம் போல் இருந்த ஒரு நாவல் பழத்தைப் பூஜைப் பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டான். மறுநாள் அகஸ்தியர் பூஜை செய்தபோது..., இன்று சாளக்கிராமம் மிருதுவாக உள்ளதே. அபிஷேக நீர் பட்டால் தோல் உரிவது போலிருக்கிறதே. என்ன இது? ஆ, அட நாவல் பழம்! யார் இந்தக் குறும்பைச் செய்தது? சுதீக்ஷணா...
    கோபமாக இருந்த அகஸ்தியர் முன்பு சுதீக்ஷணன் பவ்யமாக வந்து நின்றான். மன்னியுங்கள் குருவே. பழம் தின்னும் ஆசையில் நான்தான் பாவம் செய்துவிட்டேன். மூடனே, உன் குறும்புத்தனம் எல்லை மீறிவிட்டது. என் முகத்தில் விழிக்காதே, போய்விடு. பிழை பொறுத்தருளுங்கள், குருவே. உங்களைப் பார்க்காமலும், பணிவிடை செய்யாமலும் என்னால் இருக்க முடியாது. நான் பகவானாகக் கண்டு வழிபட்ட சாளக்கிராமத்தைத் தொலைத்துவிட்டாய். அந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக என் பகவானை என்னிடம் கொண்டு வந்து காட்டு. அதற்கு முன் என் முன்னால் வராதே! வருத்தத்துடன் வெளியேறிய சுதீக்ஷணன் தண்டகாரண்யத்தில் ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு குரு உபதேசித்த ராமநாமத்தை ஜபித்தபடி ராமனைத் தியானித்து வந்தான். ராம்... ராம்... ராம்... ஆண்டுகள் பல கழிந்தன. வனவாசம் வந்திருந்த ஸ்ரீராமர், லட்சுமணரிடம் கூறினார். லட்சுமணா, இந்தப் பகுதியில் ராமநாமம் மிகத் தீவிரமாக ஒலிப்பதை உணர்கிறேன். இங்கு யாரோ ஒருவர் தவம் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. உடனே அவர்கள் மூவரும் சுதீக்ஷணரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அப்போதும் சுதீக்ஷணனின் தியானம் கலையவில்லை. ஸ்ரீராமர் அவர் இருதயத்தில் சதுர்புஜ நாராயணனாக தரிசனம் தந்தார். புறஉலக நினைவு பெற்ற சுதீக்ஷணன்... பரம்பொருளே ஸ்ரீராமா, இந்த எளியவனுக்காக இந்தக் கோர வனத்தில் இவ்வளவு சிரமப்பட்டு வந்தீர்களா..!
    ஸ்ரீராமர் சுதீக்ஷணருக்கு அருள் புரிந்தார். தெய்வமே, தங்களிடம் ஒரு பிரார்த்தனை. தாங்கள் என் குருவின் ஆசிரமத்திற்கு எழுந்தருள வேண்டும். அவர் என் மீது எப்போதும்போல் வாத்சல்யத்துடன் இருக்க வேண்டும். அப்படியே ஆகட்டும்! அகஸ்தியர் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வித்யார்த்திகளே, ஓங்காரத்தின் மகிமை, திவ்ய சக்தி ஆகிய இரண்டும் ராமநாமத்தில் உள்ளன. குருதேவா! வணங்குகிறேன். நீங்கள் ஆணையிட்டபடியே பகவானுடன் வந்துள்ளேன். இதோ நம் ஆசிரமத்திற்கு ஸ்ரீராமர், இளையபெருமாள் மற்றும் சீதாபிராட்டியுடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீராமச்சந்திர பிரபுவா! என்ன சொல்கிறாய் சுதீக்ஷணா? அகஸ்தியர் ஸ்ரீராமரைக் கண்டு மெய்சிலிர்க்க அவரை உள்ளே அழைத்து உரிய மரியாதை செய்தார். பிறகு, மகனே! குருதான் சீடருக்கு பகவானைக் காட்டுவார். ஆனால் நீயோ குருவிற்கே பகவானின் தரிசனம் கிடைக்கச் செய்துள்ளாய். உன் குருபக்தி உத்தமமானது.

    சுடுகாட்டு சித்தன்
Working...
X