Announcement

Collapse
No announcement yet.

ஆங்கில கவர்னர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோ ராக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆங்கில கவர்னர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோ ராக

    சர் தாமஸ் மன்றோ, சென்னை மாகாணத்தின் கவர்னராக 1820 – 1827 வரை பணியாற்றினார்.
    அப்போதேல்லாம் தமிழ்நாடு ‘சென்னை ராஜாதானி’ என்று அழைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், கர்நாடகத்தின் ஒரு பாதி இவையனைத்தும் சென்னை மாநிலத்தை சேர்ந்தவையாக இருந்தன.
    கோவில்களுக்கு அளிக்கப்பட மானிய நிலங்களை எல்லாம் அரசுடமை ஆக்கும்பொருட்டு பிரிட்டிஷ் அரசாங்கம், ‘Resumption of Inam Lands Regulation’ என்ற சட்டத்தை பிறப்பித்தது. இதன்படி ‘Permanent Settlement’ செய்த போது மந்திராலயம் அமைந்திருக்கும் மாஞ்சாலம் என்கிற ஒட்டுமொத்த கிராமத்தையும் ஆர்ஜிதப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
    ஆனால் இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மந்திராலயம் கிராமத்தை அரசுடமையாக்ககூடாது என்று அரசாங்கத்திற்கு மகஜர் அனுப்பினர்.
    இந்த முழு கிராமமும், அந்த பகுதியை ஆண்ட நவாப் சித்தி மசூத் கான் என்னும் அரசன், ராகவேந்திரருக்கு தானமாக அளித்திருப்பதை விரிவாக விளக்கி எண்ணற்ற கடிதங்களை அனுப்பிய வண்ணமிருந்தனர் பக்தர்கள். இதன் காரணமாக மந்திராலயத்தை அரசுடமையாக்குவதற்கு ஆங்கிலேயே அரசாங்கத்திற்கு தயக்கம் ஏற்பட்டது.
    இருப்பினும் செட்டில்மெண்ட் ஆபீசர் ஒருவரை மந்திராலயத்திற்கு நேரில் அனுப்பி நிலைமையை ஆராய்ந்து வரச் செய்து பின்னர் முடிவெடுக்கலாம் என்று கருதி தாமஸ் மன்றோ என்கிற அதிகாரியை மந்திராலயத்திற்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு.
    தாமஸ் மன்றோ மந்திராலயம் கிளம்புவதற்கு முன்பு, தன்னிடம் பணிபுரியும் குமாஸ்தாவிடம் மந்திராலயத்தை பற்றி முழுமையாக விசாரித்து தெரிந்துகொண்டார். இன்னமும் ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவனோடு இருப்பதையும் தெரிந்துகொள்கிறார்.
    கையில் மந்திராலயத்தை அரசுடமையாக்கும் அரசாணை உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு மந்திராலயம் பயணப்படுகிறார்.
    மந்திராலயம் சென்றவுடன், தனது ஷூவை கழற்றி வெளியே வைத்துவிட்டு சன்னதிக்குள் செல்கிறார். தொப்பியையும் கழற்றிவிடுகிறார்.
    நேரே மந்திராலய மகானின் மூல பிருந்தாவனத்தின் முன் சென்று, நின்று அதை பார்க்கிறார். சற்றைக்கெல்லாம் ஆங்கிலத்தில் எவரிடமோ பேச ஆரம்பித்துவிடுகிறார். அவர் பேசுவதை வைத்து மானிய நிலத்தை பற்றி அவர் பேசுவதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர் எவரிடம் பேசுகிறார் என்பதை எவராலும் அறிந்துகொள்ளமுடியவில்லை. பார்ப்பவர்களுக்கு அவர் தனியாக பேசுவதை போல தெரிகிறது.
    சற்று நேரத்தில் மூல பிருந்தாவனத்தை நோக்கி சாஸ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறார் மன்றோ. பின்னர் பிருந்தாவனத்தை மும்முறை வலம் வந்துவிட்டு புறப்பட ஆயத்தமாகிறார்.



    அவரிடம் பிருந்தாவனத்தின் அர்ச்சகர்கள் சுவாமிகளின் பிரசாதமான மந்திராட்சதையை கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், தாமஸ் மன்றோ கையை திறந்து காட்டுகிறார் அங்கே அவர் கையில் ஏற்கனவே அட்சதை காணப்படுகிறது.
    அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுகின்றனர். நாம் அட்சதையை இப்போது தானே கொடுக்கிறோம். அதற்க்கு முன்பாக இவர் கையில் அது வந்தது எப்படி? அப்போது தான் அனைவருக்கும் புரிகிறது. தாமஸ் மன்றோ தனியாக பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர் சாட்சாத் ராகவேந்திர சுவாமியுடன் பேசிக்கொண்டிருந்தார் என்பது.
    தனது அறைக்கு திரும்பியவர், முதல் பணியாக மந்திராலய கிராமத்தை அரசுடமையாக்கும் உத்தரவை ரத்து செய்கிறார். பின்னர் அன்றைய உணவில் அந்த அட்சதையை சேர்ப்பிக்கும்படி கட்டளையிடுகிறார்.
    மந்திராலயத்தில் நடந்தது என்ன?
    தாமஸ் மன்றோ சுவாமிகளின் மூல பிருந்தாவனத்தின் முன்னே சென்று நின்றவுடன், அவர் எதிரே பிரத்யக்ஷமாகும் ராகவேந்திர சுவாமி, கிருத யுகத்தில் தான் பிரகலாதனாக பிறந்ததிலிருந்தே இந்த மாஞ்சாலம் கிராமம் தன் வசம் இருந்ததையும் தற்போது நவாப் சித்தி மசூத் கானிடம் தானம் பெற்றது கூட ஒரு சம்பிரதாயமே தவிர வேறொன்றுமில்லை எனவும் மந்திராலயத்திற்கு உள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் கூறி மன்றோவுக்கு விளக்கமளித்துள்ளார் ராகவேந்திரர்.
    மேற்கொண்டு தாமஸ் மன்றோ கேட்ட சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களும் அளித்திருக்கிறார். இதையடுத்து அவரது சக்தியை உணர்ந்து அவரது கால்களில் விழுந்து ஆசி பெற்றபோது தான் அந்த அட்சதையை அவரின் கைகளில் தந்திருக்கிறார் ராகவேந்திரர். ராகவேந்திரர் அவதார புருஷர் அல்லவா? தாமஸ் மன்றோ செய்த செயல்கள் அனைத்தும் அனைவரின் கண்களுக்கும் தெரிந்தன. ஆனால் சுவாமிகள் மன்றோவின் கண்களுக்கு மட்டுமே -காட்சி தந்துள்ளார். (மந்திராலயத்தில் இன்றும் இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்!)
    நம்ப முடியவில்லையா? இந்த நிகழ்வுக்கு கஜெட் ஆதாரமே இருக்குங்க!
    கீழே பாருங்கள்….

    இந்த நிகழ்வுக்கு பிறகு நடந்தைவை தான் இன்னும் அதிசயம்.
    தாமஸ் மன்றோ செட்டில்மெண்ட் ஆபீசராக பணியாற்றிய அந்த சமயத்தில் சென்னை மாகாண கவர்னராக இருந்த வெள்ளையர் ஒருவருக்கு அவரது மனைவியின் பிரசவத்திற்காக அவசரமாக இங்கிலாந்து செல்லவேண்டியிருந்தது. அவர் இடத்தில் எவரை நியமிப்பது என்று பிரிட்டிஷ் அரசு யோசித்தபோது அவர்களுக்கு சட்டென்று தோன்றிய பெயர் இந்த தாமஸ் மன்றோ தான்.
    உடனே அதற்க்கான ஆணை இங்கிலாந்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.
    சாதாரண செட்டிலேமென்ட் ஆபீசராக பணியாற்றியவர் சுவாமிகளின் தரிசனத்திற்க்கு பிறகு மாகாணத்திற்க்கே கலெக்டராக பதவி உயர்வு பெற்றுவிட்டார் என்றால் அந்த மகானின் தரிசனம் எத்தனை பவித்திரமானது என்று யோசித்துப் பாருங்கள்.
    இதில் விந்தை என்னவென்றால் கலக்டராக பொறுப்பேற்றவுடன், முதல் முறையாக தனது அலுவலகத்துக்கு வருகிறார் தாமஸ் மன்றோ. அவரது மேஜையில் அவரது ஒப்புதலுக்காக பல கோப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதலில் காணப்பட்ட கோப்பு என்ன தெரியுமா?
    மந்திராலயத்தை அரசுடமையாக்கும் திட்டத்ததை இரத்து செய்து செட்டில்மெண்ட் ஆபீசராக இவர் பிறப்பித்த உத்தரவு தான்.
    சுவாமிகளின் கருணையையும் சக்தியையும் எண்ணி உருகும் மன்றோ, அந்த கோப்பில் கையெழுத்திடுகிறார்.
    நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனப் பிரவேசம் செய்தது 16 ஆம் நூற்றாண்டு. இது 1நடைபெறுவது 18 ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கழித்து. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் இன்றும் ஜீவனோடு பிருந்தாவனத்தில் இருந்து அனைவரையும் இரட்சித்து வருகிறார் என்பதற்கு இதைவிட பெரிய சாட்சி தேவையா?
    - See more at: http://rightmantra.com/?p=3592#sthash.NNRMZ99t.dpuf
Working...
X