Announcement

Collapse
No announcement yet.

கனவில் பறந்த காஞ்சி மகானின் உத்தரவு!’ – குர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கனவில் பறந்த காஞ்சி மகானின் உத்தரவு!’ – குர


    “தெளிவு குருவின் திருமேனி காணல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே’
    இந்த வாரம் காஞ்சி மகான் அன்னதானம் செய்வது தொடர்பாக தனது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி அருளிய பரவச நிகழ்வை பார்ப்போம்.
    கனவில் பறந்த உத்தரவு !
    சங்கர மடத்திற்கு சொந்தமான வீடு ஒன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் இருக்கிறது. ஒரு சமயம் வரதராஜருக்கு திருவிழா நடந்தபோது பெரியவா அந்த வீட்டில் தங்கியிருந்தார். மிக முக்கியமான கருட சேவையன்று பெருந்திரளாக பக்தர்கள் கூடுவர். அப்போது வெளியூரில் இருந்து வருவோருக்கு சித்ரான்னங்கள் வழங்கினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பெரியவருக்குத் தோன்றியது.



    மடத்தின் ஸ்ரீ கார்யத்தை (திருப்பணி செய்பவர்) அழைத்து, “கருடசேவை தரிசன் பண்ண வெளியூர் பக்தர் நிறைய வருவா ! அவாளுக்கு ஏதானும் சித்ரான்னம் செய்து விநியோகம் பண்ண நன்னாயிருக்கும். குறைஞ்சது 20 ஆயிரம் பொட்டலத்திற்கு ஏற்பாடு செய்யணும்” என்றார்.
    ஸ்ரீ கார்யம் உணவு தயாரிப்பதில் இருக்கும் சிரமத்தை எல்லாம் எடுத்துச் சொன்னார். உடனடியாக வேலையாட்கள் இடம் எல்லாம் தேடிப் பிடிக்க முடியாது என்று தயங்கினார். இதைக் கேட்ட பெரியவர் , ”சரி பார்க்கலாம்” என்று சொல்லி மௌனமாகி விட்டார்.
    கருட சேவை அன்று சென்னையை சேர்ந்த பணக்காரர் ஒருவர், காலை 11 மணிக்கு காஞ்சி பெரியவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என சித்ரான்னம் கட்டிய பொட்டலங்கள் பார்சலாக அவர் வசம் இருந்தது. இது கண்ட ஸ்ரீ கார்யத்திற்கு மனதில் ஒரே ஆச்சர்யம்!
    அந்த பணக்காரரிடம் “நீங்கள் எதற்காக இந்த பொட்டலங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அவரோ “காஞ்சி பெரியவா கனவில் வந்து இது மாதிரி கொண்டு வரச் சொல்லி உத்தரவு போட்டார்” என்று விளக்கம் அளித்தார்.
    கனவில் அவர் சொன்னபடியே தான் சென்னையில் இருந்து சமையல் கலைஞர்களை காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்ததாகவும் காஞ்சிபுரம் காந்தி ரோட்டிலுள்ள லட்சுமி டாக்கிஸ் மைதானத்தில் சமையல் ஏற்பாடுகளை செய்து உணவு தயாரித்தாகவும் வரதராஜரை கருட சேவையில் தரிசிக்கும் பக்தர்களுக்கு அதை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
    “காஞ்சி பெரியவரின் தெய்வீகத் தன்மையை எடுத்துரைக்க வார்த்தைகள் ஏதுமில்லை!” என சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் வியந்தார்.
    (நன்றி : தினமலர் – ஆன்மீக மலர்
    - See more at: http://rightmantra.com/?p=12123#sthash.hn1OxIUh.dpuf
Working...
X