சொல்லில் அரசிப்படுத்தி நங்காய்
சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
நானல்லேன் என்று சிரிக்கிறானே.
பொருள்: யசோதையே! உன் மகன் கண்ணன் செய்யும் குறும்பு பற்றி புகார் சொன்னால் கோபப்படுகிறாய். அவன் வஞ்சனை மிக்கவனாக இருக்கிறான். "" வீடு புகுந்து, என்னைப் பெயர் சொல்லி அழைத்தான். என் மகளின் வளையலைக் கழற்றிச் சென்றான். காட்டில் பறித்த நாவல் பழங்களை விற்கும் பெண்ணிடம் வளையல்களைக் கொடுத்து விட்டு, அதற்கு ஈடாகப் பழங்களை வாங்கினான். இதுபற்றி நான் அவனிடம் ஏதும் கேட்காமலேயே, அவனாக வலிய வந்து "உன் மகளின் வளையலை நான் ஒன்றும் திருடவில்லை' என்று சொல்லி சிரிக்கிறான்.
குறிப்பு: ஆயர் குல பெண் ஒருத்தி யசோதையிடம் புகார் செய்வது போன்ற பாட்டு இது.