ஆற்றிலிருந்து விளையாடு வோங்களை
சேற்றால் எறிந்து, வளை துகில் கைக்கொண்டு
காற்றிற் கடியனாய் ஆடி, அகம் புக்கு,
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்
பொருள்: யமுனை ஆற்றங்கரையில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் மேல் சேற்றை வாரி இறைத்து விட்டுச் சென்றான் கண்ணன். எங்களின் வளையல்,சேலைகளை வாரிக்கொண்டு, காற்றைக் காட்டிலும் விரைந்து வீட்டிற்குள் ஓடி விட்டான். அவன் வீட்டு வாசலில் காத்து நிற்கும் எங்களிடம், வாய் திறந்து பதில் பேச மறுக்கிறான். அவன் படுத்தும் பாட்டில் எங்கள் உயிரே போகின்றது.
குறிப்பு: ஆயர்குலப் பெண்கள் யசோதையிடம் கண்ணன் செய்த குறும்புகள் பற்றி புகார் தெரிவிக்கும் பாடல்.