Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

    தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
    விடும்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
    படம்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
    உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
    உச்சியில் நின்றானால் இன்று முற்றம்.
    பொருள்:
    யசோதையே! அகன்ற தாமரைக் குளத்தைக் கலக்கிய உன் மகன் கண்ணன், அதில் சீறிப் பாய்ந்த விஷப்பாம்பின்(காளிங்கன்) வாலைப் பற்றி இழுத்தான். அதன் தலைமீது பாய்ந்து ஏறி, உடலை அசைத்து நடனமாடினான். இதை நாங்கள் கண்டோம்.
    குறிப்பு: கண்ணன் செய்த குறும்பு பற்றி பெண்கள் யசோதையிடம் கூறுகின்றனர்.
Working...
X