வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோதில்இன் கனியை, நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை, அமுதை என்னை யாளுடை
அப்பனை, ஒப்பவ ரில்லா
மாதவர்கள் வாழும் மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே!
பொருள்: வேதமாக இருப்பவன் எம்பெருமான். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மாக்களின் பயனை, அவரவர் சுவைக்குத் தக்கவாறு அவன் தருகிறான். சிறந்த முனிவர்களால் அனுபவிக்கப்படுகின்ற குற்றமற்ற இனிய கனியாகத் திகழ்கிறான். நந்தகோபனுக்கு ஆண் யானை போல் மகனாகப் பிறந்த அவன், அனைவரும் தொழுது வணங்கும் ஆதிமுதல்வனாக உள்ளான். என்னை அடிமையாகக் கொள்ளும் தந்தையாகிய அப்பெருமானை, ஒப்புவமை இல்லாத மாதவம் செய்தவர்கள் வாழும் மாடமாளிகைகள் சூழ்ந்த திருவல்லிக்கேணி என்னும் திருப்பதியில் கண்டு மகிழ்ந்தேன்.