Announcement

Collapse
No announcement yet.

மகா அனுஷத்தன்று ஒரு மகானுபவம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகா அனுஷத்தன்று ஒரு மகானுபவம்

    வேதமந்திரங்களை அதுவும் சதுர்வேத மந்திரங்களை சமீபத்தில் நீங்கள் எப்போது கேட்டிருப்பீர்கள்? அதை கேட்கக்கூடிய பாக்கியம் நமக்கு சமீபத்தில் கிடைத்தது.
    மகா பெரியவாவின் ஜெயந்தியை முன்னிட்டு ஜூன் 12 வியாழன் அன்று மயிலை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவை கேட்க சென்றிருந்தோம். திரு.சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவுகள் சென்னையில் எப்போது எங்கே நடைபெற்றாலும் கூடுமானவரை கலந்துகொள்ள முயற்சிப்போம். அதுவும் மகா அனுஷம் வேறு. குருவின் பெருமையை அவரது ஜெயந்தி அன்று கேட்காமல் விட்டுவிடுவோமா என்ன?



    நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்கு துவங்குவதாக அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது. எனவே அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு சொற்பொழிவு நடக்கும் இடமான பாரதிய வித்யா பவன் விரைந்தோம்.
    சென்னையில் உள்ள வெகு சில அற்புதமான அரங்குகளில் பாரதிய வித்யா பவனும் ஒன்று. அரங்கத்தினுள் ஒரு வித தெய்வீக சாந்நித்யம் இருப்பதை நம்மால் உணரமுடியும். இருக்காதே பின்னே மகா பெரியவா அவர் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி அவர் காலடி பதித்த இடமாயிற்றே



    நாம் செல்லும்போதே கிட்டத்தட்ட ஆடிட்டோரியம் நிரம்பிவிட்டது. மேடையின் ஓரத்தில் மகா பெரியவாவின் மிகப் பெரிய படம் ஒன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு நடுவே காமாட்சியம்மன் படமும் அருகே பெரியவாவின் படமும் வைக்கப்பட்டிருந்தது.
    சரியாக 5.00 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி பூஜையுடன் துவங்கிவிட்டது. தொடர்ந்து சுமார் 20 நிமிடம் கீர்த்தனை நடைபெற்றது.
    அதை தொடர்ந்து வேத பாராயணம். பாரதிய வித்யா பவன் சார்பாக நடத்தப்பட்டு வரும் ‘வேத பாட நிதி ட்ரஸ்ட்’ சார்பாக இந்த வேத பாராயணம் நடைபெற்றது. சதுர வேதங்களையும் அதற்குரிய பண்டிதர்களை வைத்து பாராயாணம் செய்தார்கள். வேதங்களை இப்படி அட்சர சுத்தமாக கேட்டு எவ்வளவு நாளாகிறது.




    இப்போதெல்லாம் நமது இல்லங்களில் நடைபெறும் நாள் கிழமை விஷேடங்களின்போது நடைபெறும் சடங்குகளில் வேதங்களை சம்பந்தப்பட்ட பண்டிதர்கள் முழுமையாக கூறுவதில்லை. இந்த ஃபாஸ்ட்புட் காலத்தில் வேதமும் ஃபாஸ்ட்புட் போல ஆகிவிட்டது பெரும் சோகம்.
    நல்லவேளை ‘வேத பாட நிதி ட்ரஸ்ட்’ போன்ற அமைப்புக்கள் இருப்பதால் தப்பித்தோம். மகா ஸ்வாமிகள் தான் வாழ்ந்த காலத்தில் வேத பாராயணத்துக்கும் வேதங்களின் வளர்ச்சிக்கும் வேதம் ஓதுபவர்களின் நன்மைக்காகவும் பல முயற்சிகள் எடுத்தார். அப்படி அவர் எடுத்த முயற்சியில் துவக்கப்பட்டது தான் இந்த பாரதிய வித்யா பவன்.
    வேதங்கள் இறைவனின் மூச்சுக்காற்று என்பது பெரியவாவின் கருத்து


    பாரதிய வித்யா பவன் அரங்கின் அமைப்பே அற்புதமானது அலாதியானது. கீழே சுமார் 300 பேரும் மேலே சுமார் 150 பேரும் அமரலாம் என்று நினைக்கிறோம்.
    வேத பாராயணம் முடிந்தது நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான கிளாரியன் காஸ்மெடிக்ஸ் சார்பாக வேத பண்டிதர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டார்கள். வேத பண்டிதர்கள் கௌரவிக்கப்படும் அந்த காட்சி… கண்கொள்ளா காட்சி! அத்தனை மனநிறைவு. வேத விற்பன்னர்களின் மனம் குளிர்ந்தால் பூமியும் குளிரும்.
    தொடர்ந்து சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.

    சுவாமிநாதன் அவர்களின் ஒவ்வொரு சொற்பொழிவின்போது பெரியவாவின் புதுப் புது பரிமாணத்தை அறிந்துகொள்வோம். இம்முறையும் அப்படியே.
    மகா பெரியவா மகிமை என்றால் அவரை பற்றி மட்டும் சுவாமிநாதன் அவர்கள் பேசுவார் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. பல்வேறு ஆசார்யாள்கள், யோகிகள் மற்றும் ஞானிகள் பற்றியும், அவர்தம் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களையும், இராமாயணம் மாறும் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து பல்வேறு குட்டிக்கதைகளையும், பக்த விஜயம் போன்ற பக்தர்களின் வரலாறுகளில் இருந்தும் பொருத்தமான சம்பவங்களை கூறுவார்.



    சொற்பொழிவின் தொடக்கத்தில் திரு.சுவாமிநாதன் அவர்கள் விளக்கிய கிருபானந்த வாரியார் & நடிகர் எம்.ஆர்.ராதா தொடர்புடைய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை இங்கே சாம்பிளுக்கு சொல்கிறோம்.
    நடிகரின் கிண்டல்; சாதுர்யமாக பதிலளித்த கிருபானந்த வாரியார்!
    நாத்திகம் புரையோடிப்போன ஒரு கால கட்டத்தில் தான் வாரியார் ஸ்வாமிகள் தமிழகத்தை வலம் வந்துகொண்டிருந்தார். எத்தகைய சூழ்நிலையையும் முருகனின் திருவருளாலே சமாளித்து வெற்றிகண்டு விடுவார் வாரியார்.
    நகைச்சுவையோடு சமயோசிதமாக பேசுவதில் வாரியாருக்கு நிகர் வாரியார் தான். வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.



    இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
    கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
    வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
    அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
    வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார். “ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார்.

    சுவாமிநாதன் அவர்கள் இதை சொல்லி முடித்தவுடன் பலத்த கைதட்டல் அரங்கை அதிரவைத்தது.
    தொடர்ந்து மகா பெரியவா தொடர்புடைய சம்பவங்களை கொண்டு சொற்பொழிவு. சொற்பொழிவு முடிந்ததும் மங்கள ஹாரத்தி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் சங்கரானந்தம் என்னும் மகா பெரியவரை பற்றிய பாடல்கள் அடங்கிய சிறிய புத்தகமும், புளியோதரை பிரசாதமும் வழங்கப்பட்டது.




    மொத்தத்தில் மகா அனுஷத்தன்று மகா பெரியவாவின் மகிமைகளை அவர் விரும்பும் வேத பாராயணத்தோடு கேட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
    நிகழ்ச்சி நிறைவுபெற்றவுடன், அரங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுவாமிநாதன் அவர்களின் புதிய நூலான ‘பெரியவா பெரியவாதான்’ நூலை திரு.சுவாமிநாதன் அவர்கள் கைகளால் வாங்கி ஆசிபெற்றுக்கொண்டோம்.
    நிகழ்ச்சியின் பிரதான ஸ்பான்சர்களான கிளாரியான் காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தாருக்கும், வேதங்களை காக்க நடவடிக்கை எடுத்துவரும் பாரதீய வித்யா பவனுக்கும், மகா பெரியவாவின் புகழை பெருமை திக்கெட்டும் பரப்பிவரும் உன்னத பணியை செய்து வரும் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கும் நம் நன்றி.
    ஒரு வேண்டுகோள் : கோடி கொடுத்தாலும் போதாது என்னுமளவுக்கு மகத்துவம் வாய்ந்த இத்தகு நிகழ்ச்சிகள் இலவச அனுமதியுடன் அடிக்கடி நம்மைச் சுற்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன. நமது பொருள் தேடும் வாழ்க்கையின் சில மணித்துளிகளை ஒதுக்கி கொஞ்சம் அருளையும் தேடிக்கொள்வோம். இக்கட்டான தருணங்களில் நம்மை காக்கப்போவது நாம் பாடுபட்டு சேர்க்கும் பொருளல்ல. குருவின் அருளே!
    - See more at: http://rightmantra.com/?p=11897#sthash.KJabnaC4.dpuf
Working...
X