Announcement

Collapse
No announcement yet.

பாவ விமோசனம் தரும் தானம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாவ விமோசனம் தரும் தானம்

    பாவ விமோசனம் தரும் தானம்

    தானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானம் முக்கிய இடம் வகிக்கிறது.



    இந்த பசு தானத்தை செய்வதன் மூலம், ஒருவர் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கிறது. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், பசு தானம் முக்கியத்துவம் பெறுகிறது.

    பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.

    கோ தானத்தை பல காரணங்களுக்காக செய்கிறார்கள். கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக உக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு.

    ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு வைதரணி கோ தானம் என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.
    பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் உள்ள கோ சாலைகளுக்கு பசுவை தானமாகக் கொடுக்கலாம்.

    அவ்வாறு ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள். பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.
Working...
X