Announcement

Collapse
No announcement yet.

'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம

    'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம்' என்பது பழந்தமிழ் இலக்கியப் பாகுபாடாகும். பின்னாளில் இவை பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கி வருகின்றன.

    உதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர். -கம்பர்

    ஆய கலைகளை அறுபத்து நான்கு என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவை எது என பலருக்கு தெரியாது. அவைகளின் பட்டியல்..

    1. அக்கரவிலக்கணம்
    2. இலிகிதம்
    3. கணிதம்
    4. வேதம்
    5. புராணம்
    6. வியாகரணம்
    7. நீதி சாத்திரம்
    8. சோதிட சாத்திரம்
    9. தர்ம சாத்திரம்
    10. யோக சாத்திரம்
    11. மந்திர சாத்திரம்
    12. சகுன சாத்திரம்
    13. சிற்ப சாத்திரம்
    14. வைத்திய சாத்திரம்
    15. உருவ சாத்திரம்
    16. இதிகாசம்
    17. காவியம்
    18. அலங்காரம்
    19. மதுரபாடனம்
    20. நாடகம்
    21. நிருத்தம்
    22. சத்தப்பிரமம்
    23. வீணை
    24. வேணு
    25. மிருதங்கம்
    26. தாளம்
    27. அத்திரப்பரீட்சை
    28. கனகபரீட்சை
    29. ரத பரீட்சை
    30. கசபரீட்சை
    31. அசுவபரீட்சை
    32. ரத்திரனப்பரீட்சை
    33. பூமிபரீட்சை
    34. சங்ககிராம இலக்கணம்
    35. மல்யுத்தம்
    36. ஆகரூடணம்
    37. உச்சாடணம்
    38. விந்து வேடணம்
    39. மதன சாத்திரம்
    40. மோகனம்
    41. வசீகரணம்
    42. ரசவாதம்
    43. காந்தருவவாதம்
    44. பைபீலவாதம்
    45. கவுத்துக வாதம்
    46. தாது வாதம்
    47. காருடம்
    48. நட்டம்
    49. முட்டி
    50. ஆகாயப் பிரவேசம்
    51. ஆகாய கமணம்
    52. பரகாயப் பிரவேசம்
    53. அதிரிசயம்
    54. இந்திரசாபம்
    55. மகேந்திரசாபம்
    56. அக்கினித்தம்பம்
    57. சலத்தம்பம்
    58. வாயுத்தம்பம்
    59. நிட்டித்தம்பம்
    60. வாக்குத்தம்பம்
    61. சுக்கிலத்தம்பம்
    62. கன்னத்தம்பம்
    63. கட்கத் தம்பம்
    64. அவத்தைப் பிரயோகம்.
Working...
X