Announcement

Collapse
No announcement yet.

ஆங்கிலேய ஜெனரலை காக்க நேரில் வந்த சிவபெர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆங்கிலேய ஜெனரலை காக்க நேரில் வந்த சிவபெர

    ஆங்கிலேய ஜெனரலை காக்க நேரில் வந்த சிவபெருமான் – உண்மை சம்பவம்!


    கஜேந்திரன் என்கிற யானை பூஜைக்காக தாமரை மலரை பறிக்க சென்ற போது ஆற்றில் இருந்த முதலை ஒன்று அதன் கால்களை பற்றிக்கொள்ள, உயிர் பயத்தில் பிளிறிய கஜேந்திரன் அந்த ஆதிமூலத்தை அழைக்க, அடுத்த நொடி கருடன் மீதேறி பறந்து வந்த பரந்தாமன் முதலையை தனது சக்ராயுதத்தால் கொன்று தனது பக்தனை காத்து இரட்சித்தான்.
    “நானும் தான் கூப்பிடுறேன்… எங்கே வர்றான்?” என்று அலுத்துக்கொள்ளும் டைப்பா நீங்கள்…? அந்த கஜேந்திரனுக்கு இருந்தது போன்று தூய்மையான பக்தி மற்றும் அந்த ‘சரணாகதி’ பக்குவம் உங்களுக்கும் இருந்தால் இருந்தால்…. நிச்சயம் வருவான்!
    சரி.. விஷயத்துக்கு வருவோம்….
    இணையத்தில் தேடலில் கிடைத்த பொக்கிஷம் இப்போது நான் கூறப்போகும் இந்த உண்மை சம்பவம்.
    சிவனை நேரில் கண்ட ஆங்கில ஜெனரல்
    1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த சமயம். ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.
    கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
    கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது.
    பைஜிநாத் மகாதேவ் கோவில் மத்திய பிரதேசத்தில் பிரதேசத்தில் அகர் என்ற நகரத்திலுள்ள உள்ள ஒரு சிறு கோவில்.


    குதிரை சவாரி வந்த கர்னலின் மனைவிக்கு அந்த கோவில் கண்களில் படுகிறது. ஆலயத்தின் உள்ளிருந்து ஒளித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பூஜையிலிருந்த வேதியர்களை கண்டார். துயருற்ற அவர் முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு, அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு “ஓம் நமசிவாய” எனும் லகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.
    கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுப்பித்து தருவதாக வேண்டிக்கொண்டு வீடு திரும்புகிறார்.
    லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள், தபால்காரர் (Messenger), கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது :
    “போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன், அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூரிய ஆயுதம் கொண்டிருந்தார். மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் அற்புதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய எங்கள் தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை உடைய கூரிய ஆயுதமுமே. அந்த உன்னத துறவி என்னிடம் உன் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க உன்னை காக்க வந்ததாகவும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.”
    இவ்வாறு லெப்டினென்ட் மார்ட்டின் அகர் மால்வா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


    இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.
    சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர். கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.
    1883 ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ரூ.15,000/- ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது. பிரிட்டிஷாரால் , கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும் இது.
    சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை ஒரு நாளும்!

    மேலும் தகவல்களுக்கு : http://newindianexpress.com/lifestyle/article328931.ece
    [END]
    - See more at: http://rightmantra.com/?p=1597#sthash.N2RgBset.dpuf
Working...
X