யஸ்ய தேவே பராபக்திர்-யதா தேவே ததா குரெள
தஸ்யைதே கதிதாஹ்யர்த்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந:
என்று ச்வேதாத்வதர உபநிஷத் சொல்லுகிறது.
நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 5; பக்கம் 89-91
தஸ்யைதே கதிதாஹ்யர்த்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந:
என்று ச்வேதாத்வதர உபநிஷத் சொல்லுகிறது.
அதாவது, ஸாக்ஷாத் ஈச்வரனிடத்தே எவ்வளவு பக்தி வைக்க வேண்டுமோ, அதே அளவுக்கு குருவிடமும் பக்தி வைக்க வேண்டும் என்பதாகச் சொல்கிறது. அவ்வாறு பக்தி வைக்கும் மஹாத்மனான சிஷ்யனுக்கே குரு உபதேசிக்கும் விஷயத்தின் உள்ளர்த்தம் முழுவதும்வெளிப்படும் என்று சொல்கிறது. ஈச்வர பக்திக்கு ஸமானமாக குருபக்தி உள்ள சிஷ்யனை 'மஹாத்மா' என்று உயர்த்திச் சொல்லியிருப்பதால், இந்த பக்தி பாவமே அவனுக்கு ஆத்ம ஞானத்தைக் கொடுத்து மஹாத்மா என்னும்படியான நிலைக்கு ஆக்கிவிடுகிறது என்று தெரிகிறது. மேலே உள்ள ஸ்லோகத்தில் 'யஸ்ய'என்று அதாவது, 'எவனுக்கு' என ஆரம்பித்து , எவனுக்கு ஈச்வரனிடத்து உத்தம பக்தி இருக்கிறதோ, அந்த மஹாத்மாவுக்குத் தத்வார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும் என்று சொல்லியிருக்கிறது.
Notice
பரோக்ஷம், அபரோக்ஷம் என்று இரண்டு. பரோக்ஷம் என்பது நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருப்பது, ரஹஸ்யமாக இருப்பது. அபரோக்ஷம் என்பது பரோக்ஷம் என்பதற்கு ஆப்போஸிட், நமக்கு நன்றாகத் தெரிவது. கேள்வியறிவு பரோக்ஷம், அநுபவ அறிவு என்பது அபரோக்ஷம். அநுபவத்திற்கு வராதவரையில் ஒன்றைப் பற்றியஅறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். ஆத்மாவுக்கான ஸமாசாரங்களை டன் டன்னாக புஸ்தகத்தில் படித்தும், நெட்டுருப் போட்டும், கோட் (quote) பண்ணியும் ப்ரயோஜனமில்லை. குருவே உபதேசம் செய்தாலும், அது காதுக்குள்ளும், காது வழியாகமூளைக்குள்ளும் போனாலுங்கூட, ப்ரயோஜனமில்லை. அதுவரையில் கூட அது பரோக்ஷம்தான். ஆத்மாவிலேயே அது அநுபவமகாக்ப் பேசணும். அப்போதுதான் அது அபரோக்ஷம்.
ஒரு ஸித்தாந்தமென்றால் அது ச்ருதி, யுக்தி, அனுபவம் என்ற மூன்றுக்கும் பொருந்துவதாக, மூன்றுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கருத்தையே எல்லா ஆசார்யர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். ச்ருதி சொல்கிற விஷயங்களை அப்படியே ஏற்க வேண்டும். அதற்கு விரோதமில்லாமலும், அதன் முடிவுக்கே கொண்டு விடுவதாகவும்,அல்லது அதில் குறிப்பு மட்டும் காட்டியிருப்பதை நன்றாக விளக்கியும், அதில் சொல்லாமல் விட்ட் விஷயங்களை நன்றாக ஆராய்ச்சி பண்ணியும் புத்திவாதம் செய்வதுதான் யுக்தி. முடிவிலே ச்ருதியும் யுக்தியும் அநுபவத்தில் கொண்டுவிட்டால்தான் ப்ரயோஜனம். அந்த அநுபவம் ஹ்ருதயம் என்பதான உயிருக்குள்ளேயே ஏற்படுவது. ஆகவே ஈச்வர பக்தி இருப்பவனுக்கே, அதோடுகூட அந்த ஈச்வர பக்திக்கு இணையான குருபக்தி உள்ள்வனுக்கே தத்வார்த்தமெல்லாம் பிரகாசிக்கும் என்று சொல்கிறபோது அந்த ப்ரகாசம் என்பது இந்த அநுபூதிதான். ப்ரகாசம் என்பதை அப்படியே மொழி பெயர்த்த மேல்நாட்டினர் அதை enlightenment என்றும் illumniation என்று சொல்கிறார்கள்.
நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 5; பக்கம் 89-91