Announcement

Collapse
No announcement yet.

வால்மீகி ராமாயணம் நவாஹ பாராயண முறை.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வால்மீகி ராமாயணம் நவாஹ பாராயண முறை.

    ராமாயண நவாஹ பாராயண விதி.

    ஶ்ரீ ராம நவமி புண்ய காலத்தில் ஶ்ரீ மத் ராமாயணத்தை நவாஹ க்ரமத்தில் அதாவது ஒன்பது நாட்கள் , தானோ அல்லது தகுந்த நபர்கள் மூலமாகவோ வீட்டில் பராயணம் செய்யலாம். அல்லது காதால் கேட்கலாம். இதனால் பிறிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

    நல்ல மகன் பிறந்து வம்சம் தழைக்கும்.குடும்பத்தில் அனைத்து நன்மைகளும் நடைபெறும். என்று உமா ஸம்ஹிதை, அகஸ்திய ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் எந்த கட்டம் வரை பாராயனம் செய்ய வேண்டும்.

    முதல் நாள் பாலகாண்டம் ஒன்று முதல் 70 ஸர்க்கம் முடிய.
    2. பாலகாண்டம் 71 முதல் அயோத்யா காண்டம் 64 முடிய.
    3.,அயோத்யா கான்டம் 65 முதல் 119 ஸர்க்கம் முடிய.

    4.ஆரண்ய கான்டம் ஒன்று முதல் 68ஆவது ஸர்க்கம் முடிய.
    5. ஆரண்ய காண்டம் 69 முதல் கிஷ்கிந்தா காண்டம் 49 முடிய.
    6.கிஷ்கிந்தா காண்டம் 50 முதல் சுந்தர காண்டம் 57 முடிய.

    7.சுந்தர காண்டம் 58 முதல் யுத்த காண்டம் 50 முடிய
    8 .யுத்த காண்டம் 51 முதல் 111 ஆவது சர்க்கம் முடிய.
    9.யுத்த காண்டம் 112 முதல் 131 ஸர்க்கம் முடிய.

    இம்மாதிரி பாராயணம் செய்ய வேண்டும்.

    ஶ்ரீ ராம பக்தி கல்பலதா என்னும் நூலில் சிற்சில ஸர்க்க பாரயணத்தின் முடிவில் விசேஷ பொருட்கள் நிவேதனம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
    இதனால் விரும்பிய பலனை உடனே பெறலாம்.

    சர்க்க எண் முடிவில் செய்ய வேண்டிய நிவேதனம். காண்டம். சர்க்க எண்.

    பால காண்டம்.: 1. மூன்று தேங்காய்.; 16. வெல்ல பாயாசம்.; 18. பால்- கல்கண்டு, சுக்கு பொடி போட்டு.; 30. குங்குப்பூ கலந்த திரட்டுப்பால்.
    73. ஏதோ ஒன்று சித்ரான்னத்தில்.

    அயோத்யா காண்டம்;. 40. வெண்ணை,. சக்கரை, கொழுக்கட்டை. 50. பல வித பழங்கள். 56. எள்ளு சாதம்;. 99. நெய் கொழுக்கட்டை.; 112. பலா. மாதுளை, வாழைப்பழம். 117. நெய் பாயஸம்.

    ஆரண்ய காண்டம்;- 30. தேங்காய் சாதத்தில் சக்கரை சேர்த்து;. 68. திராக்ஷை, தேன். 74. வேக வைத்த கிழங்கு, மாதுளம் பழம்.

    கிஷ்கிந்தா காண்டம்:- 3. நெய் வடை.; 16. பானகம்.. 22. பயறு சுண்டல்; 26. மாம்பழம், எண்ணையில் வறுத்த கடலை.

    ஸுந்தர காண்டம்:- 1. தயிரன்னம்;,ஊறுகாய், வெண்ணை;. 15. புளி அன்னம், ஊறுகாய், தாம்பூலம்;. 36, விசேஷ பக்ஷணம், சக்கரை பொங்கல்;. 66. பயத்தம் பருப்பு பால் பாயஸம்.

    யுத்த காண்டம்;- 16. தேங்காய் துருவல் சக்கரை கலந்து.; 19. நெய்யில் செய்த முறுக்கு.; 50 . பசும்பால்;. 67. இளநீர், நாகப்பழம். 74. பால் போளி;. 91. எள்ளு சாதம், தயிர். 94. சித்ரான்னங்கள். 107. கரும்பு, தேங்காய், நெய் பாயசம்.;
    111. நெய்யில் செய்த அதிரசம்;. 121. பால் பாயசம் வெண்ணையுடன்..;

    ஶ்ரீ ராமாவதாரம் கர்போத்சவம், ஜனனோத்சவம் என இரு வகையாக கொண்டாடபடுகிறது.

    கர்போத்சவம்:- அமவாசைக்கு அடுத்த ப்ரதமை முதல் ராம நாமி முடிய கொன்டாடுவது. மஹா விஷ்ணு ஶ்ரீ ராமராக தோன்றி எல்லா அரக்கர்களையும் அழிக்க போகிறார் என அறிந்த ரிஷிகள் கெளசல்யையின் கர்ப வாசத்தை கொண்டாடினார்கள்.

    ஜனனோத்ஸவம்; ஶ்ரீ ராமர் பிறந்த நவமி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடுவது.. ஶ்ரீ ராமாயண பாராயணம், ப்ரவசனத்துடன்.
Working...
X