Announcement

Collapse
No announcement yet.

Kaasi kaandam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kaasi kaandam

    Courtesy: Sri.Sankar Kuppusamy

    information

    Information

    Found a great article (very large in size) on the net titled "Kasi Kaandam" in Tamil. This is something like Sri Devi Puranam – lot of stories mentioned in this Kasi Kaandam….From this article, I am only sharing the vidhi on how to undertake a Kasi yathra. It is much different/harder than what we do nowadays. It would be great if we are properly guided with information so that we can try to do things right..I didnt know all these when I went there few years back..I hope this information might help any future yatra planners.





    notice

    Notice

    காசியாத்திரை விதி காசீ கண்டத்தில், காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரைவிதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது.





    காசீகண்டம் கூறுகிறது:-

    காசியில் ஒருநாள் கூட யாத்திரையில்லாமல் கழிக்காதே என்றும் அப்படிக் கழித்தால், அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீகண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீயாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ், நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்தசேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு, தன்னுடைய கிராமத்தைவிட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம், முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த காசீ காண்டம் யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ, செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலீமுடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது.

    காசி ரஹஸ்யம் கூறுகிறது:-

    இஷ்டமித்ரபந்துக்களுக்கு தர்ப்பையைப் போட்டு முடிபோட்டு அதில் ஆவாஹனம் பண்ணி தீர்த்தாபிஷேகம் செய்வித்தால் அவர்களுக்கு எட்டில் ஒரு பங்கு பலன் (புண்ணியம்) கிடைக்கும். தனக்கு வரசௌகரியப்படாதவர்கள் கர்மானுஷ்ட ப்ராம்மணனான ஒருவரைக் காசியில் வசிப்பதற்காகப் பொருளுதவி செய்தால் அதைவிடப் புண்ணியம் ஸித்திக்கும். காசியில் வாஸம் செய்பவர்களைவிட அங்கு வசிப்பதற்காக அனுப்பியவர் அவருக்குக் கோடிப் புண்ணியம் அதிகமாகக் கிடைக்கிறது.காசியில் வாஸம் செய்கிறவன், தான் மாத்திரம் கடைத்தேறுகிறான்.ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசிகங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி 'விஷ்ணு தர்மோத்தர' புராணம் 'சௌபரி ஸம்ஹிதை' இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன.

    யாத்ரிகர்கள் தினந்தோறும் நித்ய கர்மங்களை முடித்துக்கொண்டே யாத்திரைக்குச் செல்ல வேண்டும். யாத்திரை செய்யும் பொழுது இஷ்டதேவதையை மனதில் நினைத்துக் கொண்டு (தியானித்து) மௌனமாகச் செல்ல வேண்டும் அல்லது கூட்டமாகச் செல்ல நேர்ந்தால் 'ஹரஹரமஹாதேவ சம்போ, காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும். யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம்.

    யாத்திரையில் எங்கெங்கு ஸ்னானம், ஆசமனம், தர்ப்பணம், தேவபூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா, விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும்.

    இவைகளில் முக்கியமானது இரண்டு யாத்திரை:- முதலாவது கங்காஸ்னானம்; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம்.இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும்.

    ஸனத் குமார ஸம்ஹிதை இதைப்பற்றிக் கூறுகிறது:-

    அதாவது, கங்காதேவியின் இதய ரூபமும் பகவானுடைய முகரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லீ யென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். 'மணிகர்ணிகா குண்டம்' என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே 'மணிகர்ணிகைத் துறை' என்று கூறுகிறோம்; அதைப் போலவே 'தசாஸ்வமேத கட்டத்தில்' தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற் கொப்பாகும் என்று கூறப்படுகிறது. 'காலீயில் பஞ்சகங்கா' கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்' ஸ்னானம் செய்வது மகத்வடைந்தது. அல்லது காலீயில் 'தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் 'மணிகர்ணிகா' கட்டத்திலும் காசீ காண்டம் ஸ்னானம் செய்வது நல்லது. 'மணிகர்ணிகாஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரை யென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை – இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்தயாத்திரை) என்றும் சொல்வார்கள்.கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை.

    'காசீ தர்பணம்' என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை, யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு, விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ருதர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை, மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச் சித்தமாகக் கூறப்படுகிறது. காசீகண்டம் எண்பத்திநாலாவது அத்யாயத்தில் பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது – (தசாஸ்வமேதமும்) ஆகும். வருணைஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னானமாத்திரத்திலேயே பாபச் சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான். யாத்திரை விதி பஞ்சமுகத்தையுடைய சிவபிரானாகவே ஆவான். இந்த பஞ்சகங்கா யாத்திரை – காசியில் மிகவும் உத்தமம். பர்வ காலங்களில் படகுகளில் ஏறிச் சென்று இந்த யாத்திரையை முடித்துக் கொள்கிறார்கள். இத்துடன் 'கேதார காட்' – கௌரி குண்டத்தையும், 'த்ரிலோசனா காட்' டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த – தீர்த்த – யாத்திரை ஆகிறது.


    ஆயதன யாத்திரை என்னவென்றால்:- கங்கையில் ஏதாவது ஒரு துறையில் (காட்) ஸ்னானம் செய்வது, விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை.

    நந்தி புராணத்தில் கூறியிருப்பதுபோல, இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது.

    மூன்றாவது ஆயதன யாத்திரை பற்றி லிங்கபுராணம் கூறுகிறது. ஹே! தேவி:- அவிமுக்தேஸ்வரர், ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும்.

    நான்காவது யாத்திரையைப்பற்றியும், ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்கபுராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஸ்லேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர், மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான்.

    ஐந்தாவது ஆயதன யாத்திரை என்னவென்றால் க்ருத்திவாஸேஸ்வரர், மத்யமேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், கபர்தீஸ்வரர், விஸ்வேஸ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஸ்வரரையும், த்ரிலோசனரையும் காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம்.


    ஆனால் எப்போது ஸ்ரத்தை ஏற்படுகிறதோ அப்பொழுது உடனே யாத்திரை முடிப்பது நல்லது
Working...
X