Announcement

Collapse
No announcement yet.

Somasoothra Pradakshinam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Somasoothra Pradakshinam

    பிரதோஷ தினத்தன்று
    ஆலயத்தில் சோமசூக்த பிரதட்சணம் செய்து இறையருள் பெற்றுய்வீர்!

    அதென்ன சோமசூக்த பிரதட்சணம்?

    ஆலகால விடத்திலிருந்து தப்புவதற்காக, கயிலை நோக்கி ஓடிவந்த தேவர்கள், நந்திதேவரிடமும், சண்டிகேசுவரரிடமும் மாறிமாறி ஓடி, இப்படித் தான் க...ுழப்பத்துடன் வலம்வந்தார்களாம்!


    முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.

    பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிடேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்யவேண்டும்.

    பின்பு, மீண்டும் சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று, பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, மீண்டும் சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னர் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.

    இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும். இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளங்களையும் தரக்கூடியது என்பது ஐதிகம்.See More
    Photo: இன்று பிரதோசம்... ஆலயத்தில் சோமசூக்த பிரதட்சணம் செய்து இறையருள் பெற்றுய்வீர்! அதென்ன சோமசூக்த பிரதட்சணம்? ஆலகால விடத்திலிருந்து தப்புவதற்காக, கயிலை நோக்கி ஓடிவந்த தேவர்கள், நந்திதேவரிடமும், சண்டிகேசுவரரிடமும் மாறிமாறி ஓடி, இப்படித் தான் குழப்பத்துடன் வலம்வந்தார்களாம்! முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும். பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிடேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்யவேண்டும். பின்பு, மீண்டும் சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று, பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, மீண்டும் சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னர் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும். இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளங்களையும் தரக்கூடியது என்பது ஐதிகம்.
    SOURCE;K N RAMESH
Working...
X