பல்லவி
விளையாட இது நேரமா முருகா-என்
வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது( விளையாட)
அனுபல்லவி
களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து
உளமார உனை நாடி உனை பாடி வரும்போது( விளையாட)
சரணம்
புரியாத புதிரோ நீ அறியாத கலையோ
பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ
விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து
விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது( விளையாட)
Pallavi
vilaiyada idhu nerama muruga - en
vinaiyale padum padu dhanai solla varumbodhu
Anupallavi
kalaithen janmam eduttu ilaitten porutthirundu
ulamara unai nadi unai pada varumbodhu (Vilaiyada)
charanam
puriyadha pudhiro nee ariyadha kalaiyo
parihasamo enmel paridhabamillaiyo
virithogai mayil meedhu varuvay enredhir parttu
vizhi mele vizhi vaitthu vazhi parthu varumbodhu (Vilaiyada)
Varagooran Narayanan