Announcement

Collapse
No announcement yet.

சனி சிங்கனாப்பூர்-சனி பகவான் கோயில்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சனி சிங்கனாப்பூர்-சனி பகவான் கோயில்

    ஷிர்டியிளிருந்து 70Km தூரத்தில் சிங்கனாப்பூர் என்ற இடத்தில் சனி பகவானுக்கு கோயில் உள்ளது.
    அவ்விடத்தை பற்றிய சில தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன்.ஆங்கிலத்திலும்இதைப்பற்றிவேறுஒரு முறை கொடுக்கப்படும்.
    வரதராஜன்
    .


    சனி சிங்கனாப்பூர்

    Click image for larger version

Name:	singanapur photo.JPG
Views:	1
Size:	171.9 KB
ID:	35399


    சனி சிங்க்நாபூர் ஷீரடியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும் அகமத்நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கும் ஒரு சிறிய கிராமம். போய் வருவதற்குத் தனியார் போக்குவரத்து வசதிகள் உள்ளன. எங்கு பார்த்தாலும் கரும்பு வயல்கள். வழியெங்கும் கரும்புச் சார் கடைகள். வெய்யிலின் சூட்டினால் ஏற்படும் தாகத்தைத் தணிப்பதற்கு உதவியாக இஞ்சியும் எலுமிச்சை சாறும் கலந்த இனிப்பான கரும்புச் சாறு கிடைக்கும்.


    சனி சிங்க்நாபூர் - மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற சனீஸ்வர கடவுளின் கோவிலாகும். கோவில் என்று சொல்லுவதற்குரிய கோபுரமும் கர்ப்பகிரகமும் இங்கு இல்லை. கோவிலுக்குக் கூரை கூடக் கிடையாது. திறந்த வெளியில் ஒரு மேடையில் இருக்கும் ஐந்து அடி உயரமுள்ள கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட சிலை. அதைச் சிலை என்றும் சொல்ல முடியாது, ஏனென்றால் உருவச்சிலைக்கான எந்த ஒரு இலக்கணமும் இல்லை. இந்தக் கல் ஒரு சுயம்பு உருவம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஒரு பூஜையும் புனஸ்காரமும் இல்லை. பூஜாரியும் இல்லை. ஆண் பக்தர்கள் அருகிலிரூக்கும் குளியலறையில் சென்று தலை குளித்து ஆரேஞ்ஜ நிறத் துணியை நனைத்து உடுத்திக்கொண்டு க்யு வரிசையாக வந்து பிரதஷ்ணம் வைத்து வணங்கி வழிபட வேண்டும். பெண்களுக்கு சனிபகவானின் உருவச்சிலை அருகில் செல்ல அனுமதியில்லை. சிலை வைத்திருக்கும் பீடத்தின் வெளியிலிருந்து தரிசிக்கலாம். நல்லெண்ணையும் கறுத்த முழு உளுந்துமே இந்த சனிபகவானுக்குக் காணிக்கையாக பக்தர்கள் அளிக்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் நல்லெண்ணையை ஒரு பெரிய பாத்திரத்தில் சேமித்து பைப் லேன் வழியாக உருவச்சிலையின் மேல் ஒரு பாத்திரத்தின் அடிப்பாகம் துளையிட்டு (தீர்த்த வாரி) அதன் வழியாக எண்ணெய் உருவச்சிலையின் மேல் விழுமாறு செய்யப்பட்டுள்ளது. அதை பைப் லைன் வழியாக உருவச்சிலையின் மேல் அபிஷேகம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

    ராத்திரி பகல் என்று பாராமல் இருபத்தி நாலு மணி நேரமும் இந்த நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. சில பக்தர்கள் குதிரை லாடத்தை சனி பகவானின் பாதத்தில் வைத்து வணங்கி அதைத் தங்களுடைய வீட்டின் முன் கதவின் நிலையில் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தீய சக்திகள் தங்களுடைய வீட்டில் நுழையாது என்று நம்புகிறார்கள். அமாவாசை சனிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கிறது. தினமும் விடிகாலை நான்கு மணிக்கு "காகத் ஆரத்தி" என்று அழைக்கப்படும் தீபாராதனை பக்தர்களால் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கியூ வரிசையாக வந்து வணங்குகிறார்கள். சிறப்பு தரிசனம் கிடையாது. அமைதியாக எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து வழிபடலாம்.

    இந்த சனி சிங்க்நாபூரில் உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் கதவும் நிலையும் கிடையாது. கதவு இருந்தால் தானே பூட்ட வேண்டும். வீட்டில் திருடு போகும் என்ற பயமே இந்த ஊரில் வசித்துவரும் மக்களுக்கு இல்லை. இது வரை இந்த ஊரில் திருட்டு நடந்ததாக சரித்திரமே இல்லை. சனி பகவான் இருப்பதால் இந்த ஊரில் திருடர்கள் வருவதற்கே பயப்படுவதாக இந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். சமீபத்தில் யுனைட்டெட் கமெர்ஷியல் பாங்க தன்னுடைய கிளையைத் திறந்தது. அந்த பாங்கிற்குக் கதவு கிடையாது. திறந்தே வைத்திருக்கிறார்கள். முதலில் பாங்க நிர்வாகம் கிளையைத் திறப்பதற்குத் தயங்கியது. பின்னர் ஊர் மக்கள் அனைவரும் பாங்கின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று கிளையைத் திறப்பதற்கும் கிளையின் பாதுகாப்பிற்கும் உறுதி மொழி கொடுத்தார்கள். தற்சமயம் இந்த பாங்கின் கிளை சனிபகவானின் பாதுகாப்பில் இயங்குவதாக மக்கள் நம்புகிறார்கள். உலகத்தில் கதவும் பூட்டும் இல்லாத பாங்கின் கிளை இந்த சனி சிங்கனாபூரில் மாத்திரமே காணலாம்.

    .பக்தர்கள் சனிபகவானின் வழிபாட்டு அர்ச்சனை ச்லோகத்தை (108 அர்ச்சனை ச்லோகம்) சொல்லி வழிபடுகிறார்கள்.

    1. Om shanaescaraya namah
    2. Om shantaya namah
    3. Om sarvabhistapradayine namah
    4. Om sharanyaya namah
    5. Om vagenyaya namah
    6. Om sarveshaya namah
    7. Om saumyaya namah
    8. Om suramvandhaya namah
    9. Om suralokaviharine namah
    10. Om sukhasonapavishtaya namah
    11. Om sundaraya namah
    12. Om ghanaya namah
    13. Om ghanarupaya namah
    14. Om ghanabharanadharine namah
    15. Om ghanasaravilepaya namah
    16. Om khadyotaya namah
    17. Om mandaya namah
    18. Om mandaceshtaya namah
    19. Om mahaniyagunaatmane namah
    20. Om martyapavanapadaya namah
    21. Om maheshaya namah
    22. Om dhayaputraya namah
    23. Om sharvaya namah
    24. Om shatatuniradharine namah
    25. Om carasthirasvabhavaya namah
    26. Om acamcalaya namah
    27. Om nilavarnaya namah
    28. Om nityaya namah
    29. Om nilanjananibhaya namah
    30. Om nilambaravibhushaya namah
    31. Om nishcalaya namah
    32. Om vedyaya namah
    33. Om vidhirupaya namah
    34. Om virodhadharabhumaye namah
    35. Om bhedaspadasvabhavaya namah
    36. Om vajradehaya namah
    37. Om vairagyadaya namah
    38. Om viraya namah
    39. Om vitarogabhayaya namah
    40. Om vipatparampareshaya namah
    41. Om vishvavandyaya namah
    42. Om gridhnavahaya namah
    43. Om gudhaya namah
    44. Om kurmangaya namah
    45. Om kurupine namah
    46. Om kutsitaya namah
    47. Om gunadhyaya namah
    48. Om gocaraya namah
    49. Om avidhyamulanashaya namah
    50. Om vidhyaavidhyasvarupine namah
    51. Om ayushyakaranaya namah
    52. Om apaduddhartre namah
    53. Om vishnubhaktaya namah
    54. Om vishine namah
    55. Om vividhagamavedine namah
    56. Om vidhistutyaya namah
    57. Om vandhyaya namah
    58. Om virupaakshaya namah
    59. Om varishthaya namah
    60. Om garishthaya namah
    61. Om vajramkushagharaya namah
    62. Om varada bhayahastaya namah
    63. Om vamanaya namah
    64. Om jyeshthapatnisametaya namah
    65. Om shreshthaya namah
    66. Om mitabhashine namah
    67. Om kashtaughanashakartre namah
    68. Om pushtidaya namah
    69. Om stutyaya namah
    70. Om stotragamyaya namah
    71. Om bhaktivashyaya namah
    72. Om bhanave namah
    73. Om bhanuputraya namah
    74. Om bhavyaya namah
    75. Om pavanaya namah
    76. Om dhanurmandalasamsthaya namah
    77. Om dhanadaya namah
    78. Om dhanushmate namah
    79. Om tanuprakashadehaya namah
    80. Om tamasaya namah
    81. Om asheshajanavandyaya namah
    82. Om visheshaphaladayine namah
    83. Om vashikritajaneshaya namah
    84. Om pashunam pataye namah
    85. Om khecaraya namah
    86. Om khageshaya namah
    87. Om ghananilambaraya namah
    88. Om kathinyamanasaya namah
    89. Om aryaganastutyaya namah
    90. Om nilacchatraya namah
    91. Om nityaya namah
    92. Om nirgunaya namah
    93. Om gunatmane namah
    94. Om niramayaya namah
    95. Om nandyaya namah
    96. Om vandaniyaya namah
    97. Om dhiraya namah
    98. Om divyadehaya namah
    99. Om dinartiharanaya namah
    100. Om aryajanaganyaya namah
    101. Om aryajanaganyaya namah
    102. Om kruraya namah
    103. Om kruraceshtaya namah
    104. Om kamakrodhakaraya namah
    105. Om kalatraputrashatrutvakaranaya namah
    106. Om pariposhitabhaktaya namah
    107. Om parabhitiharaya namah
    108. Om bhaktasanghamanobhishtaphaladaya namah




    Source. Neelakantan,Mumbai's post
    Last edited by R.Varadarajan; 06-11-13, 05:11.
Working...
X