Announcement

Collapse
No announcement yet.

TIRUVATTARU ADI KESAVA PERUMAL TEMPLE

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • TIRUVATTARU ADI KESAVA PERUMAL TEMPLE

    Dear Members,
    In this post I am giving some information on the Sri Adikesava Perumal Temple at Tiruvattaru.
    Hope this is interesting.
    Varadarajan






    Click image for larger version

Name:	TiruvattaruAdiKesava.JPG
Views:	1
Size:	37.5 KB
ID:	35392




    ஆதிகேசவப் பெருமாள் - திருவட்டாறு.
    ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் மலைநாட்டுத் திருப்பதிகள் குறித்த சிறிய அறிமுகம்.

    மலைநாட்டுத் திருப்பதிகள் 13. அவை, இவை:

    திருநாவாய் நாவாய் முகுந்தன் திருக்கோயில், மலப்புரம்.

    திருவித்துவக்கோடு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், பாலக்காடு.

    திருக்காக்கரை காட்கரையப்பன் திருக்கோயில், எர்ணாகுளம்.

    திருமூழிக்களம் லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், எர்ணாகுளம்.

    திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருக்கோயில், பந்தனம் திட்டா.

    திருக்கடித்தானம் அற்புத நாராயணன் திருக்கோயில், கோட்டயம்.

    திருச்சிற்றாறு இமையவரப்பன் திருக்கோயில், ஆலப்புழா.

    திருப்புலியூர் மாயப்பிரான் திருக்கோயில், ஆலப்புழா.

    திருவாறன் விளை திருக்குறளப்பன் திருக்கோயில், பந்தனம் திட்டா.

    திருவண்வண்டூர் பாம்பணையப்பன் திருக்கோயில், ஆலப்புழா.

    திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்.

    திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி.

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில், கன்னியாகுமரி.

    13ல் திருப்பதிசாரம் மற்றும் திருவட்டாறு தமிழகத்தில் இருந்தாலும் ஏன் மலைநாட்டுத் திருப்பதிகளோடு சேர்த்தார்கள் என்று தெரியவில்லை!

    ஆலயங்கள் எழில் தவழும் இயற்கையின் பின்னணியில் அமைந்தவை.

    தமிழ்நாட்டுக் கோவில்களைப் போன்று கம்பீரமான ராஜகோபுரங்கள் கிடையாது. தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட பெரிய புத்தகத்தைப் போன்ற மேற்கூரைகளே கோபுரங்கள்.

    மலையாள மக்கள் ஆலயங்களை அம்பலம் என்கிறார்கள். நம் மாநிலத்தில் அம்பலம் என்ற சொல் பெரும்பாலும் ஈசனின் ஆலயங்களோடு தொடர்புடையது. எனினும், 108 திருப்பதிகளில் திருநாங்கூரில் (சீர்காழி) உள்ள பெருமாள் கோவில் (செங்கண்மால், பள்ளி கொண்ட திருக்கோலம்.) திருத்தெற்றியம்பலம் எனப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ளது போன்ற கோபுரங்களையும் விமானங்களையும் அதனில் தீட்டப்பட்ட சிற்பங்களையும் இங்கு காண்பது அரிது. மலையாளத்து திவ்ய தேசங்கள் சதுரவடிவில் அமைந்தவை. நான்கு வாசல்கள் கொண்டதாக நாற்புரம் சூழ்ந்த சுற்றுச் சுவர்களால் அமைக்கப்பட்டவை.

    இதற்குள் வட்ட வடிவமான மூலஸ்தானம். மூலஸ்தானத்துக்கு மேல் முக்கோண வடிவக் கூரைகள்.

    தூய்மை மிகுந்த சுற்றுக்கள். இங்குள்ள தூண்கள் ஒவ்வொன்றிலும் பாவை விளக்கு ஏந்திய பெண் சிற்பங்கள் காணப்படும்.

    இங்குள்ள ஸ்தலங்களில் மூலஸ்தானத்திற்கு முன்புறம் சதுரவடிவிலான மேடை ஒன்று இருக்கும். இதைப் பொதுவாக பலிபீடம் என்று கூறுவர். இது சில ஸ்தலங்களில் பிரம்மாண்டமானதாயும், சிலவற்றில் சுமாரானதாயும் அமைந்துள்ளது. இந்த மேடையின் முன்பு நின்றுகொண்டுதான் பகவானை வழிபட வேண்டும். மேடையில் ஏற யாரையும் அனுமதிப்பதில்லை.

    இங்கு கோவிலுக்குள் சட்டை, பனியன் அணிந்து செல்லக்கூடாது. கைலிகளும் கட்டிக்கொண்டு செல்லக்கூடாது. கைகளில் மூட்டை முடிச்சுகள், பை போன்றன கொண்டுசெல்லக்கூடாது. அவைகளை வாசலில் உள்ள கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப வரும்போது பெற்றுக்கொள்ளலாம்.இதற்கு கட்டணம் இல்லை.

    ஆழ்வார்கள் அழைத்த அழகுத்தமிழில் இங்குள்ளவர்கள் பெருமாளைச் சொல்வதில்லை என்பது பெருங்குறை. இனி, வரலாற்றை அறிந்துகொண்டு ஆலயத்துக்குள் செல்வோம்!


    நாகர்கோவிலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவட்டாறு. (Thiruvattaru) பேருந்து வசதிகள் சிறப்பாக உள்ளது. ஆலயத்துக்கு அருகில் இறங்கலாம்.

    Click image for larger version

Name:	tiruvattar-1.jpg
Views:	1
Size:	55.8 KB
ID:	35395

    Click image for larger version

Name:	adikesava.jpg
Views:	1
Size:	78.7 KB
ID:	35396


    பெருமாள் - ஆதிகேசவப் பெருமாள். (Adhikesava Perumal.) புஜங்க சயனம். திருவனந்தபுரம் பெருமாளைப் பார்த்தபடி மேற்கு நோக்கிய திருக்கோலம். இடதுகரம் தொங்கவிட்ட நிலையிலும், வலதுகரம் யோகமுத்திரை காட்டியபடி அமையப்பெற்ற பெரிய, அரிய திருக்கோலம்.

    தாயார் - மரகதவல்லி நாச்சியார். (Maragathavalli Nachiyar.)

    பொய்கை - கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்.

    விமானம் - அஷ்டாங்க விமானம்.

    பாடியவர் - நம்மாழ்வார்.

    வரலாறு! பிரம்மன் ஒரு யாகம் செய்ய யாக வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்னும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடையூறு விளைவித்ததோடு தேவர்களையும் விண்ணுலகையும் அச்சுறுத்தினர். அனைவரும் சென்று திருமாலிடம் முறையிட திருமால் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி கேசியின் மீது பள்ளி கொண்டார்.

    கேசியின் மனைவி கங்கையையும்தாமிரபரணியையும் துணைக்கழைக்க அவ்விருவரும் வேகமாக ஓடிவர அந்நிலையில் பூமாதேவி திருமால் சயனித்திருந்த இடத்தை பெரிய மேடாக ஆக்க இது திருமகளின் செயல் என்பதை உணர்ந்த இரண்டு நதிதேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்டவடிவில் வந்தபடியால் இவ்விடம் வட்டாறு!


    தலத்தின் சிறப்புகள்!

    108 திருப்பதிகளில் 76 ஆவது திருப்பதி.

    திருவனந்தபுரம் பத்மநாபனைத் தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு.

    பெரும்பாலும் பெருமாளின் பள்ளிகொண்ட திருக்கோலம் இடமிருந்து வலம் நோக்கி அமையும். இங்கு வலமிருந்து இடம் நோக்கி! 108 திருப்பதிகளில் இவ்வாறு பள்ளி கொண்டது இந்த ஆதிகேசவனும், காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாளுமே!

    இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் கதிரவன் தன் அஸ்தமனக் கதிர்களால் வாட்டாற்றானை வணங்குவது சிறப்பான காட்சி.

    இங்கு மூலவர் சன்னதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடிஉயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் உள்ளது. இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்கிறார். இதில் ஒருதலையைத்தான் காணமுடியும். பெருமாளின் கீரிடமும் பாதிதான் தெரியும். பாதிஉள்ளே மறைந்துள்ளது.

    திருவனந்தபுரத்தில் நாபியில் கமலம் பிரம்மர் இல்லை. அங்கே பெருமாளின் வலது கை சிவலிங்கத்தை தொட்டுக்கொண்டிருக்கும். இங்கே திருப்பாதங்கட்கு அருகில் சிவலிங்கம் உள்ளது. அங்கே கிழக்கு நோக்கிய சன்னதி. இங்கே மேற்கு நோக்கிய சன்னதி. ஸ்ரீஆதி அனந்தபுரம் என்றும் சேரநாட்டு ஸ்ரீரங்கம் என்றும் இதற்குப் பெயர்.

    திருவனந்தபுரம் அனந்தபத்மநாபப் பெருமாளைப் போன்று 23 அடி நீளமான திருமேனி. திருமுகம், திருமேனி, திருப்பாதங்களைத் தனித்தனி சாளரங்களில் தரிசிக்கவேண்டும்!

    கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது. இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள் முற்பட்டது! மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்று!

    கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் 855-57) உமயம்ம ராணிஎன்பாரின் ஆட்சிக்காலத்தில் முகில்கான் என்பவன் இந்து ஆலயங்களில் கொள்ளையிட்டான்.திருவட்டாறு கோவிலைக் கொள்ளையிடத் திட்டமிட்டான். ராணியும், குறுநில மன்னர்களும் திருவட்டாறு எம்பெருமானிடம் சரண்புகுந்து அற்புதமான கீர்த்தனங்கள் இயற்றித் தொழுதனர்.

    பக்தியை மெச்சிய எம்பெருமான் கதண்டு வண்டு வடிவமெடுத்து எண்ணற்ற கதண்டுகளாக பிரிந்தார். இந்தக் கதண்டுகள் முகில்கானின் படைகளைக் கொத்திச் சின்னாபின்னப்படுத்தின. முகில்கான் கொடுரமான ரண காயங்களுடன் மரணமடைந்தான்! வேண்டுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும் பெருமாள்!

    இன்னும் ஆலயத்தின் அற்புதங்கள் எண்ணற்றவை. மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்படும் கோவில்களில் ஒன்று. காணாதவர் காண்க!




    நிச்சயம் அருள்வான் ஆதிகேசவன் என அறுதியிட்டுக் கூறுகிறார் நம்மாழ்வார்!

    என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து

    வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்

    மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்

    நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே!














    Last edited by R.Varadarajan; 04-11-13, 23:18.
Working...
X