ஆன்மீகத்தால் இந்தியக் கலாசாரமும், இந்திய சமுதாயமும் நாகரீகச் செழிப்புற்று விளங்கியது.
“ ஸம்ஸ்கிருதம் என்பது இந்தியாவின் பொதுச் செல்வமே தவிர, அது எந்தப் பிரிவினருக்கும் சொந்தமான ஏகபோக மொழி அல்ல. ஸம்ஸ்கிருத மொழிக்கென்று ஓர் இனமோ, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்போ இந்தியாவில் தனியாக ஒன்றுமில்லை. அது ஓர் ஆதிக்க மொழி அன்று. அந்நியர்கள் இங்கே வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய் மொழி, அதற்கு இனையாக ஸம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் ஸம்ஸ்கிருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.
மேலும் ஸம்ஸ்கிருதக் கலைச் செல்வங்களுள் தமிழர்கள் அருளியது அனந்தம். தமிழர் நாகரிகத்தின் பொற்காலங்களில் ஸம்ஸ்கிருதம் அருமையான போஷாக்கு பெற்றிருந்தது. நாலந்தாவுக்கு இணையான காஞ்சி சர்வகலா சாலையில் ஸமஸ்கிருதப் பேரறிஞர்களான தமிழர்கள் ஆசாங்களாய் இருந்திருக்கிறார்கள். தர்க்க சாஸ்திரத்தின் பிதாமகனாகக் கருதப்படுகிற திங்கநாகன் ஒரு தமிழனே ஆவான். இந்தியாவின் எட்டு திக்குகளிலும் இந்து சனாதனத்தின் பெருமையைக் கொடி நாட்டி, பௌத்தர்களையும், நாத்திகர்களையும் தனது ஞான வன்மையினால் வென்று, உபநிஷத் செல்வங்களை உலகுக்கு அளித்த ஆதிசங்கரன் ஒரு தமிழனே ஆவார்.
கயிலையங்கிரியிலுள்ள சிவாலயத்துக்கு அர்ச்சகராய் இன்றும் தென்னாட்டைச் சேர்ந்த ஒருவரே போகிறார். நமது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ராமாநுஜரின் பெயரால் வடபுலம் எங்கும் ராமாநுஜ கூடங்கள் நிறைந்து கிடக்கின்றன. இந்து சமயத்தின் இன்னுமொரு செல்வமான வைணவத்தை வடக்குக்கு அருளியது தெற்கேயாகும்.
மற்றுமொறு மார்க்கமான மாத்வத்தை வடநாட்டினருக்கு அறிமுகம் செய்ததும் நமது கும்பகோணத்தில் பிறந்த ஒரு தமிழந்தான்.
கடவுளை எல்லா மதத்தினரும் நம்புகிறார்கள். மதங்கள் மார்க்கங்களே. அல்லாஹ் என்ற வார்த்தைக்கு கடவுள் என்றே பொருள்.
ஏசு கிறிஸ்துவும் நபிகள் நாயகமும், காந்தியடிகளும் கடவுளை நம்பியவர்கள்தான்.
Source:http://bakthimayam.blogspot.com/2013/09/blog-post_9294.html
Edited from the above source