திரிஜடையின் புத்திசாலித்தனம்
பக்தர்களுக்கு,
திரிஜடை விபீஷணனின் மகள் என்பது எல்லோர்க்கும்
தெரிந்த கதை. விபீஷணன் ராமனை ஆராதித்து வந்தது
அவளுக்கு மட்டும் தான் தெரியும். ஒருசமயம் ராவணனுக்கு
தெரிந்து அவன் ராமனை ஆரதிக்கிரானா என்று பார்க்க
முயற்சி செய்தான். விபீஷணன் இல்லாத சமயம் அவன்
அரண்மனை நோக்கி வந்தான். த்ரிசடைக்கு இந்த செய்தி
தெரிந்து ஓடி வந்தாள். ராவணன் அவளை கேட்டான்
இது சரியா "உனது தகப்பன் ராமனை ஆரத்திக்கிரான் என்ற
விஷயம்" அவள் கூறுவாள் தங்களுக்கு சந்தேகம் இருந்தால்
அவரது பூஜை அறை சென்று பாருங்கள் என்கிறாள்.
உள்ளே போன ராவணனுக்கு கிடைத்த காட்சி ராம
என்ற எழுத்து தெரிகிறது. கோபத்தோடு அவளை கேட்கிறான்
இது என்ன என்று. அவளோ மிக புத்திசாலி, தனது தகப்பனாரை
காட்டி கொடுக்க விருப்பம் இல்லாமல் ஒரு பொய் சொல்கிறாள்.
"உங்களையும் மன்னியையும் விட்டால் அவருக்கு வேறு
தெய்வம் கிடையாது. அதனால் தான் உங்கள் முதல்
எழுத்தையும் , மன்னியின் முதல் எழுத்தையும் சேர்த்து
அதற்கு பூஜை செய்து வருகிறார் என்று கூறினாள்.
ரா (ராவணன்) ம (மண்டோதிரி) அவன் கோபமும் தீர்ந்தது
அவளின் "பொய்" யும் அந்த சமயத்தில் உதவியது.
எல்லோரும் அனுபவிக்கலாமே இந்த சம்பவத்தை.
டிவி நிகஷியில் இருந்து அடியேன் கேட்டது.
அடியேன், தாசன் .
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்.
Comment