Part 3 of 4
இப்படி மனசை அடக்குவதுதான் யோகம் என்பது. சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான். மறுபடி மனசின் ஒயாத ஒட்டம்தான். எனவே, இந்த ஜன்மாவிலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனம் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் யுக்தன் என்கிற யோகி. அவன்தான் ஹยงகி உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார்.
யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா. என்று விட்டு விடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும். வியாதி உள்ளவனுக்குத்தானே. நமக்குத்தான் மனோவியாதி. அதாவது, மனம் என்ற வியாதி - இருக்கிறது. எனவே நாம்தான் அதை அடக்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.
மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம். மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும். இந்த மட்டத்தில் வண்டிக்காரண், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாக இருப்பவர்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும்.
(to be continued...)