Mahabharatham - Vina Vidai -04
வினா 7: - ஜனமேஜய மஹாராஜன் இக்கொடிய ஸர்ப்பயாகத்தை செய்யக் காரணம் என்ன?
விடை :- தனது தகப்பனார் ஒரு ரிஷியினது சாபத்தால் தக்ஷகன் எனும் பாம்பு தீண்டி இறந்தார் என்று கேள்விப்பட்டு இவ்வரசன் ஸர்ப்ப குலத்தை எல்லாம் நாசம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு இந்த யாகத்தை செய்ய ஆரம்பித்தான்.
வினா 8:- இந்த யாகம் ‘ஒருவாறு”’ பூர்த்தியாயிற்று என்று சொன்னதன் பொருல் என்ன?
விடை: - இந்த யாகத்தில் ஸகல பாம்புகளும் வந்து தீயில் விழுந்திறக்க தக்ஷகன் பயம் கொண்டு இந்திரனது கட்டிற்காலில் சென்று சுற்றிக்கொண்டான். இவ்வாறு இருக்கையில் அஸ்தீகர் என்ற ரிஷி ஒருவர் வந்து அரசனைத் தனக்கு ஒரு உபகாரம் செய்யவேண்டுமென்று கேட்டார். அப்படியே செய்வதாக அரசன் ஒப்புக் கொண்டான். அப்பொழுது மந்திரபலத்தால் இந்திரனிருக்கும்போதே அவனது கட்டில் ஹோமகுண்டத்திற்கு நேர் வந்து விட்டது. அரசனை நோக்கி இந்த யாகத்தை இப்படியே நிறுத்திவிட வேண்டும் என்று அஸ்தீகர் கேட்டுக்கொள்ள அரசனுக்கு தன் வார்த்தைக்கு விரோதமாய் நடக்கமனம் வராமல் யாகத்தை நிறுத்திவிட்டான். ஆகையால்தான் இந்த யாகம் ஒருவாறு முடிந்தது என்று சொன்னது.