Announcement

Collapse
No announcement yet.

ஹோலிகா தஹனம்- Holigaa Dahanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹோலிகா தஹனம்- Holigaa Dahanam

    ஹோலிகா தஹனம்- Holigaa Dahanam


    Click image for larger version

Name:	tem-3.jpg
Views:	103
Size:	66.8 KB
ID:	49766இன்று *ஹோலிகா தஹனம்* !
    ஹோலி தினத்திற்கு
    முன் தினம் ஹோலிகா தஹனம் கொண்டாடப்படுகிறது.
    ஹோலிகா என்பவள் ஹிரண்யகசிபுவின் சகோதரி. அவளை நெருப்பு ஒன்றும் செய்யாது.
    அதனால் அவளது மடியில் குழந்தை ப்ரஹ்லாதனை வைத்து, அவளை தீயில் இறங்கச் சொன்னான் இரணியகசிபு.
    ப்ரஹ்லாதனை அழிக்க அவன் செய்த முயற்சிகளில் இதுவும் ஒன்று.
    ஆனால் ப்ரஹ்லாதனோ எப்போதும் *நாராயண* நாம ஜபம் செய்பவன். அதனால் தீ அவனை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஹோலிகா தீயில் மாய்ந்து போனாள் ! நாமஜபத்தினால் எல்லா சங்கடங்களிலுருந்தும் விடுபடலாம் என்பதை நிரூபிக்கும் நாள் இன்று.
    பக்த ப்ரஹ்லாதன் நினைவாக இன்றும் பாரதத்தின் பல பகுதிகளில் *ஹோலிகா தஹணம்* கொண்டாடப்படுகிறது. ஊரில் ஆங்காங்கே ஹோலிகா உருவம் வைத்து, இரவில் எரித்து எல்லோரும் கொண்டாடுவர்.
    நாமும் நம் பேராசை, கோபம், வெறுப்பு, பொறாமை, அகம்பாவம் போன்ற தீய எண்ணங்களை பகவன்நாமத்தில் எரித்து புத்துயிர் பெறுவோம்.
    ராதேக்ருஷ்ணா !
    குருஜீ கோபாலவல்லிதாஸன்
    17.3.22, வியாழன்



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X