வாழ்த்த வயது தேவையா?
வாழ்த்து - பொருள் யாது?
ஆசி கூறுதல் என்று பொருளா?
கடவுள் வாழ்த்து - கடவுளுக்கு நாம் ஆசிகூற முடியுமா?
’பசியும் பிணியும் பகையும் நீங்கி,
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி....’ என்று சிலம்பு கூறும்.
இதை wishes எனக் கொள்ளலாம்.
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி....
-சிலம்பு
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக என
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்
மணிமேகலை என வாழ்த்திய ஞான்று.....
-சிலம்பு
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர
கொடு பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன்...............
- மதுரைக்காஞ்சி
எனும் இடங்களில் ‘ஆசி வழங்குதல்’ எனப்பொருள் கொள்ளலாம்
வாழ்த்து - ஆசி கூறுதல், wishes எனும் பொருள்களில் அச்சொல் பயன்பட்டு வந்தாலும், ‘போற்றுதல்’’புகழ்தல்’ என்பதே முதன்மைப் பொருள் எனத் தெரிகிறது, ஒருகால் பக்தி இலக்கியத் துறை சார்ந்த பொருளாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்,
என் சொல்லி வாழ்த்துவனே,
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே,
மருளிலாதவர்கள் வழுத்து நின்னடியை....
அள்ளல் நீர்வய லாரூ ரமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே!
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின், உன்னித்தே.
-----Dev Raj --- அவர்களின் முகநூல் பதிவு.
“வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்” என்று தற்கால .... கள்
இந்தப் பதிவை உற்றுநோக்கி உணர்தல் வேண்டும்.
“வாழத்த வயது தேவையில்லை
மனமிருந்தால் போதும்” - என்று.