Announcement

Collapse
No announcement yet.

இரண்டாவது கிடையாது - அருள்வாக்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இரண்டாவது கிடையாது - அருள்வாக்கு

    ஜலத்துக்கு நிறைவு சமுத்திரம். டம்ளரில், செம்பில், குடத்தில், அண்டாவில், கிணற்றில், குளத்தில், நதியில் என்று ஒன்றை விட ஒன்று ஜாஸ்தியாக இருக்கிற ஜலம். கடைசியில் சமுத்திரம் என்று முடிகிறது.

    இப்படியே ஞானத்துக்கும் கிருபைக்கும் நிறைவான சமுத்திரம் பராசக்தி. நமக்கு கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அன்பு இருக்கிறத. பிராணிகளுக்கு நம்மை விட குறைவு, நம்மை விட ஜாஸ்தி அறிவுள்ள, ஜாஸ்தி கிருபா சக்தி உள்ள தேவ ஜாதிகள் இருக்கின்றன.

    நம்மிலேயே மகான்களானவர்கள் மகா ஞானிகளாக பரம காருண்யத்தோடு இருக்கிறார்கள். இந்த ஞானம், கிருபை, பூரணமாக நிறைந்த இடத்தை தான் ஸ்வாமி, பரமாத்மா, பராசக்தி என்று சொல்கிறோம்.

    எல்லாவற்றையும் அறிகிற ஞானம் அது. அறிகிறது மட்டுமில்லை. அறியப்படுகிற எல்லாமுமே அது தான். அதற்கு வேறாக இன்னொன்று இருந்து, அதை இது அறிகிறது என்றில்லை.

    அப்படி இன்னொன்று இருப்பதற்கு இடம் இருந்து விட்டால் இது எங்கும் நிறைந்த பூரணம் ஆகாது. இன்னொன்று துளித்துளி இருந்து விட்டால் கூட சரி. இதற்கு குறை தான் இது அந்த துளியில் இல்லாததால் இது பூரணமில்லை. நிறைந்த ஒரே நிறைவில்லை என்று தானே அர்த்தம்?

    இதனால் என்ன முடிவாகிறது என்றால் பரமாத்மாவை தவிர அறியப்படுகிறது வாஸ்து என்று இரண்டாவது பதார்த்தமே கிடையாது. அப்படியானால், இத்தனை ஜீவாத்மாக்கள் வேற வேறாக இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறோமே இது என்ன?

    இது ஒரு பெரிய வேஷம் தான். மாயா நாடகம் தான். வேஷம் கலைந்து விட்டால் நிறைந்த நிறைவான ஒன்றே ஒன்று தான்.

    -ஜகத் குரு காஞ்சி காமக்கோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்

    sri kanchi maha periva thiruvadigal charanam


Working...
X