Lizards in Varadaraja Perumal Temple , Kancheepuram
அன்பு பக்தர்களுக்கு,
அடியேன் சில நாட்களுக்கு முன்பு வரதராஜ பெருமாள் கோவில்
சென்று இருந்தேன். . அப்போது வெள்ளி, தங்க பல்லியை
தரிசிக்க பாக்கியம் கிட்டியது. அவைகளின் தாத்பர்யம்
என்ன என்று பார்க்கும் போது கிடைத்தது இது தான்.
மகரிஷி பிருங்கே வின் புத்திரர்கள் இருவர் தன் ஆசார்யன்
கௌதம முனிவரிடம் பாடம் கற்றுக் கொண்டு வந்தபோது
ஒரு நாள் தண்ணீர் எடுத்து வரும் போது அதில் ஒரு
பல்லி விழிந்து இருந்தது. அவர்களும் கவனிக்காமல் தன் ஆசார்யன் பூஜையின் போது அவைகள் கீழே விழுந்தது. இதை நோக்கிய
ரிஷி கோபம் கொண்டு அந்த சிஷ்யர்கள் பல்லியாக மார
சாபம் இட்டார். அவர்கள் இதற்கு பிராயசித்தம் என்ன
என்று கேட்டபோது , காஞ்சியில் இதற்கு பதில் கிடைக்கும்
என்றாராம். அவர்களும் பூலோகம் முழுவதும் சுற்றி
கடைசியில் காஞ்சியை அடைந்தனர், அவர்கள் வேண்டுதல்
மூலம் வரதராஜ பெருமாள் அவர்கள் சாபம் நீங்க ஒரு
வழி சொன்னார். "நீங்கள் இருவரும் உங்கள் காலம் முடிந்த
பின்பு உங்கள் ஆத்மா என் பாதத்தில் வந்து சேரும்",
ஆனால் உங்கள் தற்போது நிலை அப்படியே என் கோவிலில்
இருக்கும் என்றாராம். அதற்கு சாட்சியாக சூர்ய,சந்திரர்களை
வைத்தாராம். இதுவே நாம் தரிசிக்கும் பல்லி உருவங்கள்.
இதை தரிசிப்பதின் மூலம் நம் கவலைகள் தீரும் என்று
பெரியோர் சொல்வர்.
அடுத்த முறை அங்கு சென்றால் இந்த வராலாற்றை
நினைத்து கொள்ளலாமே.
அடியேன், தாசன்,
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்