Announcement

Collapse
No announcement yet.

கணேசா! எழுந்திரு!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கணேசா! எழுந்திரு!

    காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் நடந்து கொண்டிருந்தது. அன்று தேர்பவனி. காஞ்சிப்பெரியவர் ஒரு கோயிலில் முகாமிட்டிருந்தார். அப்போது, அதிர்வேட்டு சத்தம் கேட்டது.
    பெரியவர் சிஷ்யர்களிடம், ""என்ன வேட்டுச்சத்தம் கேட்குது?'' என்று கேட்டார்.
    காமாட்சியம்மன் தேர்பவனி வருவதாக அவர்கள் கூறினர். நாமும் அம்பாளை தரிசிக்கலாம் என்ற பெரியவர், அங்கிருந்த விநாயகர் சிலையின் காதில் ஏதோ கூறி விட்டு வேகமாக நடந்தார். பெரியவர் தேரை நெருங்கியபோது, அங்கிருந்த சாஸ்திரிகள் பெரியவரிடம் ஓடிவந்தார்.
    ""பெரியவா! அம்பாளை தேரில் வைத்து புறப்படத் தயாரானோம். ஆனால், தேர் முன் ஒரு யானை படுத்துக் கொண்டு எழ மறுக்கிறது. காரணம் புரியவில்லை,'' என்றார்.
    பெரியவர் அங்கு சென்று யானையை அன்புடன் தடவிக்கொடுத்து, ""கணேசா! எழுந்திரு!,'' என்றார். உடனே எழுந்த யானை முன்னால் நடக்க ஆரம்பித்தது. தேரும் பின்தொடர்ந்தது.
    ""தன் பக்தனாகிய பெரியவரை, தன் விழாநாளில் காண வேண்டும் என்று அம்பிகை, விநாயகர் மூலம் இந்த திருவிளையாடலை நடத்தினாளோ,'' என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர்.
    சி.வெங்கடேஸ்வரன்
Working...
X