KAVALAM- THIRUMALA HUNDI
இந்தியாவில் புராதனமான – பிரமாண்டமான எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று தரிசிக்கிறார்கள். பிரார்த்தனைக்கேற்ப பலன் பெறுகிறார்கள். ஏதோ, தங்களால் இயன்ற காணிக்கையையும் செலுத்துகிறார்கள்.
ஆனால், திருப்பதியில் மட்டும் பணத்தையும் தங்கத்தையும் ஏன் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள்?
‘162 வைரக் கற்களை ஒருவர் உண்டியலில் போட்டிருந்தார்.’
‘ஒரே ஆசாமி 2 கோடி ரூபாயை உண்டியலில் போட்டார்.’
– இப்படிப் பிரமிக்க வைக்கும் ‘உண்டியல்’ அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்!
‘காவாளம்’ என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும், உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள். காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலேயே நிறை மாத கர்ப்பிணியாய் தளும்பி, உடனடியாக வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.
ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா?
ஏழுமலையான் தரிசனத்தை முடித்து விட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சரியாக உங்கள் முறை வரும்போது – நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில், அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்துகொண்டால், அதற்கு மேல் ஒரு நயா பைசா போடவும் அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலை ‘சீல்’ வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு வேறு உண்டியலை வைத்து விடுவார்கள்.
‘சீல்’ வைத்த உண்டியலை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில், அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். பயப்பட வேண்டாம்… நல்ல தகவல்தான்.
இந்த உண்டியல் நிரம்பிவிட்டது… இதைக் கச்சிதமாக ‘சீல்’ செய்து எடுத்துக் கொண்டுபோனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன்’ என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம். வங்கியில் லோன் வாங்கிய ஒருவருக்காக நாம் போடும் சாட்சிக் கையெழுத்து போன்றதல்ல இது. தைரியமாகக் கையெழுத்து போடலாம். இது சம்பிரதாயத்துக்காகச் செய்யப்படுகின்ற ஒன்று. தற்போது ஏராளமான ‘குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்’ ஆங்காங்கே செயல்பாட்டில் இருக்கும்போது, இதுபோன்ற விஷயங்களில் எந்த ஒரு திருட்டுத்தனமும் நடக்காது.
பிறகு, ஏன் இரண்டு ஊழியரைப் பிடித்துக் கையெழுத்து வாங்குகிறார்கள் என்றால், ஆதி காலத்தில் இருந்து – அதாவது ‘குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்’ இல்லாத நாட்களில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாம் இது. ஆகவே, அதை இன்றும் விடாமல் கடைப்பிடித்து வருகிறது தேவஸ்தானம்.
இப்படி சாட்சிக் கையெழுத்து போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன வெகுமதி தெரியுமா? மீண்டும் ஒரு முறை ஏழுமலையான் தரிசனம் இலவசமாக – அதுவும் வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள். இந்த தரிசனத்தின்போது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாக பிரார்த்தனை செய்து, ஒரு நமஸ்காரமும் செய்து வரலாம்.
ஆக, இனிமேல் திருப்பதி உண்டியலில் பணம் போடும்போது அல்லது போடுவதற்கு நிற்கும்போதோ, ‘உண்டியல் நிரம்பிவிட்டது போலிருக்கே… எங்கே தேவஸ்தான ஆட்களைக் காணோம். கையெழுத்து போடணுமே’ என்றெல்லாம் ஏக்கப்பட ஆரம்பிப்பீர்கள்தானே?!
திருப்பதி உண்டியல்களில் தினம்தோறும் சேரும் பணத்தை எண்ணி முடிப்பதே பெரும் வேலையாக இருக்கிறது தேவஸ்தானத்துக்கு. தற்போது வெளி ஆட்களையும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். உண்டியல் தொகையை எண்ண வேண்டும் என்று விரும்புபவர்கள், திருப்பதி தேவஸ்தானத்து இணையத்தில் நுழைந்து அதற்குரிய படிவத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டுமாம். நீங்கள் அளிக்கின்ற தகவல்களை வைத்து, ‘உண்டியல் எண்ணுவதற்கு இவர் நமக்குப் பயன்படுவாரா’ என்று தேவஸ்தானம் தீர்மானிக்கும். இப்படி உண்டியல் எண்ணுகிற (ஊழியர்கள் அல்லாத) பக்தர்களை தினமும் இரண்டு ஷிஃப்ட்டுகளில் அமர்த்திக் கொள்வர்.
உண்டியல் பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன், திருப்பதியில் மட்டும் ஏன் இப்படிக் கொட்டேகொட்டென்று கொட்டுகிறது?
பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன், குபேரனிடம் கோடிக்கணக்கான தங்கத்தைக் கடன் வாங்கிவிட்டு, அதை அடைப்பதற்கு வழியாக, எம்பெருமான் ஸ்ரீநிவாஸர் திருவாய் மலர்ந்து சொன்ன வார்த்தைகள் தான் காரணம்.
‘யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக் கணக்குக்கேற்ப, கலியுகத்தில் அவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்துவிடுவேன்’ என்று, புராண காலத்திலேயே குபேரனுக்கு வாக்கு கொடுத்துள்ளார் ஸ்ரீநிவாஸன். அதன்படி அவர் நம்மிடம் இருந்து இன்றைக்கும் வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
குபேரனிடம் ஸ்ரீநிவாஸ பெருமான் ஏன் கடன் வாங்க வேண்டும்?
மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை விரும்பிய ஸ்ரீநிவாஸன் (வேங்கடவன்) அந்த தேவியை மணம் முடிக்கத் தயாராகி, திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கலானார். அப்போது, லட்சுமி தேவி ஸ்ரீநிவாஸனிடம் வாசம் செய்யாததால் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டார். தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும்போது, இந்தத் திருமணத்தை எப்படி விமரிசையாக நடத்துவது என்று தவித்தார் ஸ்ரீநிவாஸன்.
எனவே, எப்போதும் தனக்கு உபகாரமாக இருந்து வரும் நாரதரிடம், என்ன செய்வீர்களோ தெரியாது… எப்படியாவது பெருமளவில் பணம் திரட்டி இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க உதவுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
‘பகவானே பணம் கேட்கின்றாரே’ என்று நாரதர், தேவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்குத் தகவல் அனுப்பினார். நாரதர் சொன்ன தினத்தில் குபேரன் உட்பட அனைத்து திக்பாலகர்களும், நவகிரக அதிபதிகளும் சேஷாத்திரி மலைக்கு வரவழைக்கப்பட்டனர். இந்தத் தெய்வத் திருமணம் இங்குதானே நடக்கப் போகிறது!
சேஷாத்திரிக்கு வந்திருப்பவர்களில் யாரிடம் கேட்டால் பணம் கிடைக்கும் என்பது தெரியாதவரா நாரதர்? திக்பாலர்களையும் நவக்கிரகங்களையும் ஒருமுறை பார்த்த நாரதர், குபேரனைக் கண்டு அப்படியே பூரித்தார்.
குபேரனே… நீதான் சரியான தேர்வு. இந்த உலகத்திலேயே அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற பெரிய செல்வந்தன் நீதான்… வைகாசி மாதம் வளர்பிறை தசமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று,
ஸ்ரீநிவாஸனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. தற்போது ஸ்ரீநிவாஸனுடன் லட்சுமிதேவி இல்லை. எனவே, பணத்துக்குக் கஷ்டப்படுகிறார். ஏழையாக இருக்கும் ஸ்ரீநிவாஸனின் திருமணச் செலவுக்கு உடனடியாக நிறைய பணம் தேவைப்படுகிறது. இதற்குண்டான பணத்தை, நீ கொடுத்து உதவ வேண்டும். அந்தப் பணத்தை ஸ்ரீநிவாஸன் வட்டியுடன் திருப்பித் தருவார்” என்றார்.
குபேரனும் சந்தோஷத்துடன் சம்மதித்தான். எவ்வளவு தேவையோ, அவ்வளவு பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். ஸ்ரீநிவாஸனுக்கு குபேரன் கொடுத்த தொகை, ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் (இந்தத் தொகை பல்வேறு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன) என்று ஒரு தகவல். குபேரனிடம் கடன் வாங்கியதற்காக ஸ்ரீநிவாஸன் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
அதோடு குபேரனைப் பார்த்து, நீ கொடுத்த பணத்துக்குக் கலியுகத்தில் வட்டி செலுத்திக்கொண்டு கலியுகத்தின் கடைசியில் அசல் – வட்டி எல்லாம் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்” என்றாராம் ஸ்ரீநிவாஸன்.
குபேரனிடம் ஸ்ரீநிவாஸன் வாங்கிய கடனைத்தான், இன்று பக்தர்கள் உண்டியலில் கொட்டோ கொட்டென்று கொட்டி அடைத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பக்தர்களிடம் வசூலித்துத் தருவேன்” என்று குபேரனிடம் ஸ்ரீநிவாஸர் சொன்ன வார்த்தைகளையே, திருமலையில் உண்டியல்களுக்கு அருகிலும் தேவஸ்தானம் குறிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறது.
நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்) and P.Swaminathan
Source….balhanuman.wordpress.
Natarajan
This Post is for sharing knowledge only, no intention to violate any copy rights