HAVE FAITH IN GOD
சுகமான சுமை
பகவான் கிருஷ்ணரைமிகவும் நேசிக்கும்பெண் ஒருவர்ஒரு நாள்துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படிநடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சிஎதுவும் இல்லைகிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.
அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய்தந்தையர் யாரும்கிடையாது.
கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாககேட்பார் அதைசெய்யலாம் என்றுகருதித் தான்அவள் கேட்டாள்.ஆனால் கேட்டதுஅந்த மாயாவியிடமாயிற்றே? அவன் சும்மாவிடுவானா?
அந்த பெண்ணிடம்அவள் அதிர்சியடையும்விதம், ஒருகோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோஅங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா.அது போதும்.நம் கண்களைதவிர வேறுயார் கண்ணிற்கும்இந்த கோணிப்பைதெரியாது!” என்கிறார்.
வேறு எதையோஎதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி.கிருஷ்ணர் இப்படிஒரு அழுக்குசாக்கு மூட்டைதருவார் என்றுஅப்பெண் எதிர்பார்க்கவில்லை.
அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்குஅதனுள் அப்படிஎன்ன தான்இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்குஆசை. ஆனால்கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும்பலமாக அதுகட்டப்பட்டிருந்தது.
எனவே தாம்அதற்குள் என்னஇருக்கிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லைஎன்று தெரிந்துகொள்கிறாள்அந்த பெண்.திறந்து பார்க்கும்எண்ணத்தை மாற்றிக்கொண்டுகடவுளின் கட்டளைப்படிஅதை தூக்கிசுமந்து அவர்செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.
நேரம் செல்லசெல்ல, ஒருகட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையைதூக்க முடியவில்லை.
“கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்குபணி செய்யவந்தேன். நீஎன்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்குமூட்டையை என்னிடம்தந்து விட்டாயே…கருணை கடலுக்குஇது அடுக்குமா??”என்று கோபித்துகொள்கிறாள்.
“உன் பலவீனத்தில்என் பலம்அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன்பக்கம் நானிருக்கிறேன்.தைரியமாக நான்கூறும் வரைசுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.
மேலும் சிலகாலம் சென்றது.
சில இடங்களில்அவளால் தூக்கமுடியாத போதுகிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒருகை பிடித்துதூக்கி அந்தசுமையை பகிர்ந்துகொண்டார்.
ஒரு நாள்அவர்கள் போய்சேரவேண்டிய இடம் வந்தது.
“போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையைஇறக்கி வை!!”என்று கிருஷ்ணர்கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன்கீழே வைக்கிறாள்அந்த பெண்.
“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?”என்று பகவான்புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண்அதற்காகவே காத்திருந்தஅந்த பெண்“சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.
கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள்தானே அவிழ்ந்துமூட்டை தானேபிரிந்து கொள்கிறது.முதலில் கண்ணில்தெரிவது வைக்கோல்தான். ஆனால்வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும்வைர வைடூரியங்களும்,பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன.தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடியபொக்கிஷம் அது!!
“இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காகஉனக்கு என்னுடையபரிசு இது.எடுத்துக்கொள்!!”
அந்த பெண்ணுக்குஒரு கணம்ஒன்றுமே புரியவில்லை.அதிர்ச்சி இன்பஅதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
“கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர்காலில் விழுகிறாள்.
“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்தபாவி இத்தனைகாலம் உன்னைதவறாக நினைத்துவிட்டேன்.உன்னை சந்தேகிக்காமல்உனது நோக்கத்தைபுரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின்பாரம் எனக்குசுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்றுஅவள் உருககிருஷ்ணர் தனக்கேஉரிய சிரிப்பைஉதிர்க்கிறார்.
ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும்பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்றுநினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால்பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான்அது உள்ளது.பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
நம்மால் எதை சுமக்க முடியும் என்றுஆண்டவனுக்கு தெரியும். அந்தஅளவு சுமை மட்டுமேகடவுள் தருவார்
எனவே அவனைநம்புங்கள் முழுமையாக.
Source: Sathsangam
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights