துளசியின் மகிமை
துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதற்கு மேலும் ஒரு கதை!
ருக்மணி, சத்யபாமா ஆகிய இருவரும் கிருஷ்ண பரமாத்மாவின் மனைவியர். லெட்சுமியின் மறு அவதாரம் ருக்மணி ஆவார். ஒரு நாள், கலக மன்னன் நாரதர், சத்யபாமாவைப் பார்க்க வந்தார். அவருக்கு ருக்மணி விஷயத்தில் கொஞ்சம் பொறாமை உண்டு. ஆகவே இனி வரும் பிறவிகளிலும் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டும் என்றும் அதற்கு வழி என்ன என்றும் கேட்டார்.
நாரதர் வந்த வாய்ப்பை நழுவ விடுவாரா? அவர் சொன்னார்: பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது இனி வரும் ஜன்மங்களில் பன்மடங்காகக் கொடுத்தவருக்கே திரும்பிவரும் என்ற நம்பிகை உள்ளது. ஆகவே கிருஷ்ணனை எனக்கு தானம் கொடுத்துவிடு. நீ எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் உனக்கே கிடைத்து விடுவார்.
சத்யபாமா சொன்னாள்: அப்படியே ஆகட்டும், ஸ்வாமி! உங்களுக்கே கொடுத்துவிட்டேன்.
கிருஷ்ணரும் நாரதருடன் புறப்பட்டார். நாரதருக்கு எடுபிடி வேலை செய்யும் ஆளாக கிருஷ்ணன் இருந்தார். நாரதரின் வீணையைச் சுமக்கும் வேலை, மூன்று உலகங்களுக்கும் அவர் பின்னால் ஓடும் பையனாக இருந்தார்.
தேவலோகம், வைகுண்டம், கைலாசம், குபேரனின் அளகாபுரி, இந்திரனின் அமராவதி, பிரம்ம லோகம் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. கண்ணன் மீது தீராக்காதல் கொண்ட ஏனைய பெண்களும் மனைவியரும், அவரை உடனே திருப்பித் தரவேண்டும் என்று நாரதரிடம் முறையிட்டனர். அவர்கள் அனைவரும் சத்யபாமாவிடம் சென்று அனல் பறக்கப் பேசினர். அப்பொழுதுதான் தெரிந்தது அவர் செய்தது தவறு என்று. உடனே அவரும் நாரதரிடம் ஐயா, என் கணவரை உடனே திருப்பி அனுப்பவும் என்று செய்தி அனுப்பினாள்.
நாரதர் சொன்னார்:- பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த எந்தப் பொருளையும் திரும்பி வாங்குவது தவறு. வேண்டுமானால் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. கிருஷ்ணனின் எடைக்குத் தக்க அளவு தங்கக் கட்டிகள் தரவேண்டு மென்றார்.
உடனே கிருஷ்ணனை தராசின் ஒரு தட்டில் உட்காரவைத்து, அங்குள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய நகைகளை தராசின் அடுத்த தட்டில் வைத்தனர். இப்படியாக துலாபாரம் ஆரம்பமானது. கிருஷ்ணனின் எடைக்குப் பக்கத்தில்கூட வரவில்லை அவர்களுடைய நகைகளின் எடை! மேலும் மேலும் தங்க கட்டிகளைச் சேர்த்தும் பலனில்லை.
உடனே அவர்கள் எல்லோரும் ருக்மணிக்குச் செய்தி அனுப்பினர். அவள் விரைந்தோடி வந்து எல்லோர் நகைகளையும் எடுங்கள் என்று உத்தரவிட்டாள். தான் கொண்டுவந்த ஒரே ஒரு துளசி இலையை அந்தத் தராசுத் தட்டில் வைத்தார். கிருஷ்ணன் உட்கார்ந்த தட்டும் மிகவும் லேசாகி மேலே எழும்பியது. எல்லோரும் துளசியின் மகிமையை அறிந்தனர். நாரதரும் சிரித்துக் கொண்டே யாருக்கும் தெரியாமல் நழுவிவிட்டார்.
இந்துக்கள் எல்லோர் வீட்டிலும், குறிப்பாக வைணவர்கள் வீடுகளில், துளசி மாடமிருக்கும். அதைத் தினமும் வழிபடுவதும், கோலமிட்டுப் பூஜை செய்வதும் வழக்கம்.
வடநாட்டில் கார்த்திகை மாத (அக்டோபர்-நவம்பர்) ஏகாதசி நாளில் துளசி கல்யாணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. துளசி-விஷ்ணு கல்யாணம் முடிந்தவுடன் கல்யாண சீசன் ஆரம்பமாகிவிடும். துளசி கல்யாணம் செய்தால் கன்யா தான புண்யம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கன்யாதானம் என்பது ஒருவருடைய பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாகும். இதையும் இந்துக்கள் புனித காரியமாகவே கருதுவர்!
துளசி கல்யாண வைபோகமே!
-Subham-
Written by London swaminathan
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights