Sri chakra puja--periyavaa
#ஶ்ரீசக்ர_பூஜை_பண்ணு!
பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டு 'ஸகலமும் பெரியவாளே' என்று இருக்கும் குடும்பங்களில் ஸ்ரீ ராகவனின் குடும்பமும் ஒன்று!
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள்தான் என்றாலும், நித்யம் ஸ்ரீசக்ரபூஜை பண்ணிக் கொண்டிருந்தார் ராகவனின் அப்பா. ஆனால் ராகவனின் அப்பாவின் அப்பாவுக்கோ, இந்த ஶ்ரீசக்ர பூஜை கொஞ்சமும் மனஸுக்கு இசையவில்லை.
"ஸ்ரீசக்ரத்தை விடாம காலம் முழுக்க பூஜை பண்ணுவேன்னு ஸத்யம் பண்ணுப்பா!.."
ராகவனின் அப்பா கடைஸிக் காலத்தில் ராகவனிடம் இந்த ஸத்யத்தை வாங்கிக் கொண்டார். அவர் காலமானதும், ராகவனின் தாத்தா அந்த ஸ்ரீசக்ரத்தை எடுத்து பரணில் போட்டுவிட்டார்.
என்றைக்கு ஸ்ரீசக்ரம் பரணுக்கு போனதோ, அன்றிலிருந்து ராகவனின் தாயாருக்கு உடலெல்லாம் ஓயாத எரிச்சல்! காரணம் எதுவும் புரியவில்லை!
இதை அறிந்த ராகவனின் அம்மாவழி தாத்தா தனக்குத் தோன்றிய விசாரத்தை கூறினார்....
" பூஜை பண்ணிண்டிருந்த ஸ்ரீசக்ரத்தை இப்டி பரண்-ல போடுவாளா? பழையபடி எடுத்து பூஜை பண்ணு! எல்லாம் ஸரியாய்டும்.."
உடனே ஶ்ரீசக்ரத்தை எடுத்து, அப்பா பண்ணியது போல பூஜை பண்ண ஆரம்பித்தார் ராகவன். அம்மாவின் உடல் எரிச்சல் ஆச்சர்யமாக குணமடைந்தது!
ஆனால் அப்பாவழி தாத்தாவுக்கு ஆரம்பத்திலிருந்தே இதில் உடன்பாடு இல்லை.
"இதோ பாரு ராகவா! நீயோ ஊர் ஊராப் போய்ண்டிருக்க! அதுனால ஒன்னால ஸ்ரீசக்ரத்துக்கு ஒழுங்கா பூஜை பண்ணமுடியாது! பூஜை பண்ணாம வெச்சுக்கறதைவிட, பேசாம இத... ஏதாவது கோவிலுக்கு குடுத்துடலாம் இல்லாட்டா, கடல்ல தூக்கிப் போட்டுடலாம்!"
"அருமையான" யோஜனை சொன்னார்!
ராகவனுக்கு ஒரே குழப்பம்! அப்பாவுக்கு குடுத்த ஸத்யத்தை காப்பாற்றுவதா? தாத்தா சொல்வதை கேட்பதா?
குழம்பிக் குழம்பித்தானே தெளியணும்? குழப்பத்தின் கடைஸியில், ஒளி தெரிந்தது!........
ஶ்ரீசக்ரத்தை எடுத்துக் கொண்டு, ஓடினார்.... பெரியவாளிடம்!
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு இவர் எதுவும் சொல்லும் முன்பே, பெரியவா கேட்டார்...
"என்ன? ஒங்காத்து தெய்வத்தைப் பத்தி கேக்கணுமோ?"
சிலிர்த்துப் போனார் ராகவன்.
ஸ்ரீசக்ரத்தை பெரியவா முன் வைத்தார். பெரியவா சற்றுநேரம் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்...
"பாரு! ராகவா! இது... ஒங்காத்து தெய்வம்! ஒனக்கு பெரிய குடும்பமே இருக்கு.! பூஜை பண்றதுக்கு ஆத்துல, யாருமே இல்லேன்னாத்தான், ஒன் தாத்தா சொல்ற மாதிரி பண்ணலாம். ஆத்துல அம்மா தெனோமும் வெளக்கேத்தி ஶாளக்ராமத்துக்கு அன்னம் நைவேத்யம் பண்றச்சே, இந்த ஸ்ரீசக்ரத்துக்கும் தீபம் காட்டறதுல ஒண்ணும் ஶ்ரமம் இல்லியே?..."
"அதெல்லாம் இல்ல... பெரியவா! தாத்தா....."
" யார் சொன்னாலும் எதுவும் கொழப்பிக்காம, கவலைப்படாம போ! அம்பாள் ஸகல க்ஷேமத்தையும் குடுப்பா!..."
திருக்கரத்தால் குங்குமத்தை அள்ளி ஸ்ரீசக்ரத்தின் மேல் போட்டு, ராகவனிடம் குடுத்தார். அவருடைய அம்மாவின் ஸந்தோஷத்துக்கு அளவே இல்லை! பூஜை தொடர்ந்தது!...........
1970-ல் அவருடைய அம்மாவுக்கு திடீரென்று புத்தி பேதலித்த மாதிரி அடிக்கடி கத்த ஆரம்பித்தாள். டாக்டர்கள் மனோவ்யாதி என்று treatment குடுக்கவேண்டும் என்றனர்.
அம்மாவை அழைத்துக் கொண்டு மனஸையே நாஸம் பண்ணிவிடும் மஹாஶக்தியான பெரியவாளிடம் போனார்!
ஶ்ரீமடத்தில் அன்று ஏக கூட்டம்! இவர் முறை வந்தது.....
"என்ன? ராகவா... அம்பாள் பூஜைல்லாம் நன்னா நடக்கறதா?" ............
ஸுமார் 20 வர்ஷங்களுக்கு பிறகும் என்ன ஒரு ஞாபகஶக்தி!
"பூஜையெல்லாம் பெரியவா அனுக்ரஹத்ல நன்னா நடக்கறது..! ஆனா, அம்மாக்குத்தான் என்னவோ புத்தி ஸரியில்லாத மாதிரி அப்பப்போ கத்தறா! ஒரு மாதிரி behave பண்றா... பெரியவாதான் அம்மாவை காப்பாத்தணும்"
அம்மாவின் நிலையை சொன்னார்.
டக்கென்று பதில் வந்தது....
"ஸ்ரீசக்ரத்ல ஒரு கீறல் விழுந்திருக்கு...! ஊருக்கு போனதும் நீயே இனிமே ஒங்கையால ஸ்ரீசக்ர பூஜை பண்ணு...! எல்லாம் ஸெரியாயிடும்"
அபயம் அளித்தார்.
ஊர்களுக்கு அடிக்கடி போகவேண்டியிருப்பதால், பல வர்ஷங்களாகவே ஸ்ரீசக்ர பூஜை பண்ண ஒரு ஶாஸ்த்ரிகளை ஏற்பாடு பண்ணியிருந்தார்.
"ஶ்ரீசக்ரத்துல.... கீறல் எப்படி விழுந்திருக்கும்?"
மனஸ் பூரா அரிப்பு! ஊருக்குப் போனதும், ஶாஸ்த்ரிகளை அழைத்து ஸ்ரீசக்ரத்தை பரிஸோதித்தால், அதில் ஒரு ஆழமான கீறல் இருந்தது!
ஸ்ரீசக்ரத்தின் பின்பக்கம் காணப்பட்ட ஆழமான கீறலைப் பார்த்த சில விஷயமறிந்தவர்கள் சொன்னது....
"ஸ்ரீ சக்ரத்ல இருக்கற மந்த்ரங்களை யாரோ copy எடுக்க try பண்ணியிருக்கா! அதுனாலதான் இந்த கீறல் விழுந்திருக்கணும்"
பிறகு அதை முறைப்படி ஸரி பண்ணி, தானே பூஜை பண்ண ஆரம்பித்தார் ராகவன்.
எங்கோ இருக்கும் பெரியவாளுக்கு இந்தக் கீறல் தெரிந்திருப்பதில் அதிஸயம் இல்லையே!
ஸ்ரீசக்ரரூபமும், அதன் அதிதேவதையும் அவர்தானே!
பெரியவா சொன்னபடி ராகவனே ஸ்ரீசக்ர பூஜை பண்ண ஆரம்பித்ததும், படிப்படியாக அவருடைய அம்மாவின் மனநிலை முழுவதுமாக குணமானது.