Announcement

Collapse
No announcement yet.

Story of seetamma maysmma

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Story of seetamma maysmma

    Story of seetamma maysmma
    #ஸ்ரீ_ராம_தரிசனம்... 🙏🙏🙏🙏🙏


    'ராமா.. நீயா என் வீட்டுக்கு வந்தாய்?'
    தியாகராஜரின் அதிகாலை உருக்கம்....


    திருவையாற்றில் ஒரு மாலைப் பொழுது. தியாகராஜ சுவாமிகள் தனது வீட்டுத் திண்ணையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.


    ''#நமஸ்காரம்...''


    குரல் கேட்டுக் கண் விழித்தார் தியாகராஜர். 80 வயது வயோதிகர் ஒருவரும், அவரின் மனைவியும், சுமார் 20 வயது இளைஞன் ஒருவரும் கைகூப்பி நின்றிருந்தனர் தெருவில். அவர்கள் உடம்பில் அழுக்கும், புழுதியும் படிந்திருந்தன. வெகு தூரத்திலிருந்து வந்தவர்கள் போல் தோற்றம் அளித்தனர்.


    ''வாங்கோ... உள்ள வாங்கோ...'' - அவர்களை வரவேற்று நமஸ்காரம் செய்தார் தியாகராஜர்.


    'மாதா, பிதா, குருவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை தெய்வமாக நினை!' என்கிறது உபநிஷத்துகளும் வேதங்களும். 'அதிதி தேவோ பவ.'


    வயோதிகர் பேச ஆரம்பித் தார்: ''நாங்க வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து க்ஷேத்ராடனம் பண்ணிண்டு வர்றோம். ராமேஸ்வரம் போகணும். பகவான் கருணை வைக்கணும்... காலைல எழுந்து ஸ்நானம் செஞ்சுட்டு நடக்கணும். இன்னிக்கு ராத்திரி உங்க வீட்டுல தங்கலாம்னு இருக்கோம்!''


    ''ஆகா... தாராளமா தங்குங்கோ!'' என்று மகிழ்வுடன் சம்மதித்த தியாகராஜர், தன் மனைவியிடம் இரவில் அவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொன்னார்.


    அவர் மனைவியோ, ''நமக்கே ராத்திரி சாப் பாட்டுக்கு அரிசி இல்லே... இவங்களை எப்படி உபசாரம் பண்றதுனும் தெரியலை. சரி... பக்கத்துல போய் கொஞ்சம் அரிசி கடன் வாங்கிண்டு வரேன்!'' என்று கையில் பாத்திரத்துடன் மனைவி கிளம்பினார்.


    அதை கவனித்த வயோதிகர், ''எங்களுக்காகச் சமைக்க வேண்டாம். என்கிட்ட தேனும் தினை மாவும் இருக்கு. ரெண்டையும் பிசைஞ்சு, ரொட்டி மாதிரி தட்டி, சுட்டுச் சாப்பிட்டா ருசியா இருக்கும். நாம எல்லோரும் அதையே சாப்பிடுவோமே!'' என்றார்.


    அதன்படி அன்று இரவில் அனைவரும் பசியாறினர். வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்த விருந்தாளிகளிடம் தியாகராஜர் க்ஷேத்திராடனம் பற்றி விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தார்.


    கோழி கூவிற்று. ''அடடா... பொழுது விடிஞ்சாச்சா?'' என்று எழுந்தார் வயோதிகர். உடனே அவர் மனைவியும், இளைஞனும் கூட எழுந்தனர். ''நாங்க அப்படியே காவிரியில ஸ்நானம் செஞ்சுட்டுக் கிளம்பறோம்!'' என்றார் முதியவர்.


    தியாகராஜர், தன் மனைவியுடன் அவர்களை நமஸ்காரம் செய்தார். பின்பு வாசலில் இறங்கி, அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் தியாகராஜர். சட்டென்று அந்த வயோதிகர் வில்லுடன் ராமபிரானாகவும், அவருடன் வந்த முதிய பெண்மணி சீதா பிராட்டி யாகவும், இளைஞன் அனுமனாகவும் காட்சியளித்து மறைந்தனர்.


    தியாகராஜர் பரவசத்துடன் தெருவில் ஆனந்தக் கூத்தாடினார். ''ராமா... ராமா... நீயா எனது வீட்டுக்கு வந்தே?... என் தெய்வமே... நீயா வந்தாய்? ரொம்ப தூரத்திலேருந்து நடந்து வந்ததா
    சொன்னியே... பேசியே ராத்திரி முழுக்க உன்னை தூங்க விடலையே... மகாபாவி நான்!


    காலைப் பிடித்து அமுக்கி, உன் கால் வலியைப் போக்காமல் பேசிக் கொண்டே இருந்தேனே. ராத்திரி நீ கொண்டு வந்ததை நாங்க சாப்பிட்டோமே? என் வீட்டுல தரித்திரம் தாண்டவமாடறதுனு தெரிஞ்சிண்டு, நீ ஒரு தாய்- தகப்பனா இருந்து எங்க பசியைப் போக்கினியே...'' என்று புரண்டு புரண்டு அழுதார் தியாகராஜ சுவாமிகள்.


    அப்போது அவரிடமிருந்து பிறந்த வசந்தா ராக கீர்த்தனைதான், 'சீதம்ம மாயம்மா...' என்பது.


    ராம் ராம் ராம் ராம் ராம் ராம்.... 🙏🙏🙏


    விஸ்வநாதன் பவுன்சாமி
Working...
X