Thirumangai azhwar's theft
என்ன தவம் செய்தோம்?, இம்மண்ணில் பிறப்பதற்கு?-
திருவிண்ணகர்,
குடந்தை,
திருக்குறுங்குடி,
திருச்சேறை,
திருவாலி,
திரு எவ்வளூர்,
திருக்கண்ணமங்கை,
திருவெள்ளறை,
திருப்புட்குழி,
திருவரங்கம்,
திருவல்லவாழ்,
திருப்பேர்நகர்,
திருக்கோவிலூர்,
திருவழுந்தூர்,
தில்லைச் சித்திரக்கூடம்,
திருவேங்கடம்,
திருமாலிரும்சோலை,
திருக்கோட்டியூர்,
திருமையம்,
திரு இந்தளூர் கச்சி,
திருவேளுக்கை,
திருவெஃபா,
திருவிடவெந்தை,
கடல்மல்லை,
திருத்தண்கா,
ஊரகம்,
அட்டபுயகரம்,
திருவாதனூர்,
திருநீர்மலை,
திருப்புல்லாணி,
திருநாங்கூர்,
திருக்கண்ணபுரம்,
திருநறையூர் மணிமாடக் கோயில்
இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டவர் யார் தெரியுமா? -
108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார் -
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார் -
அவர் ஒன்றும் பிறப்பால் பிராமணன் அல்ல -
பிறப்பால் வைணவன் அல்ல -
சத்திரிய குலத்தில் பிறந்து -
சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றவன் -
தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று _
சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தவன் -
சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான் -
அவன் தான் திருமங்கையாழ்வார் -
இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள் -
குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார் -
விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது -
நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார் -
பெண்ணோ பிராமணப் பெண், இவர் கள்ளர் ஜாதி -
இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார் -
பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள் -
அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான -
சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார் -
திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க, -
அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள் -
பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர்-
பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது -
தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது -
கடுமையான பணத்தட்டுப்பாடு -
பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார் -
வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹூட் அவர் _
நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார் -
அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார் -
இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார் -
புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள் -
இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார் -
பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார் -
கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை -
பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார் -
'சரியான கலியனப்பா நீ' என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார் -
பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது -
என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை -
பரகாலன் 'யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்' என்று அதட்ட-
நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார் -
ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது -
உடனே அவர் பாடிய பாசுரம்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே
திருமங்கை ஆழ்வார் பிரபந்தத்தில் -
பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்கிற வகைகளில் 1137 பாசுரங்கள் தந்துள்ளார் -
திருவரங்கன் ஆலயத்திற்கு சுற்றுச்சுவர் கட்டியவனும் இவனே -
எதற்கு இந்த நீண்ட பதிவு தெரிந்த வரலாறு தானே என்று நினைப்பவர்களுக்கு
இது கிட்டடத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு இம்மண்ணில் நிகழ்ந்த உண்மை வரலாறு -
அவ்வரலாற்றின் சாட்சியகளான 1137 பாசுரங்களும் -
84 வைணவத் தலங்களும் இன்றும் இந்த பெரியார் மண்ணில் இருக்கின்றன -
மதம் மாற்றி, கொள்ளையடிக்க வந்த வெள்ளையனின் வாரிசுகளுக்குப் பிறந்த -
கொள்ளையன்களான திராவிட இயக்கத்தின் பின்னும் -
தமிழன் இந்து அல்ல என்று கதை கட்டி கல்லாக்கட்டும் கட்சிகளின், மிஷனரி சதிகளை நம்பும் இளைய தலைமுறையினரே -
காலம் காலமாக இது ஆன்மீக பூமி தான் -
சனா தானதர்மம்தான் இந்த மண்ணின் சொத்து -
இது என்றைக்கும் பெரியான் மண் ஆகவே முடியாது -
இது பெரியாழ்வார் வாழ்ந்த மண் -
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -