Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1 -அத்தியாயம் 4and5


    ரிஷிகள் வியாசர் பாகவதத்தை இயற்றியதன் பின்னணியைப் பற்றி சூதரிடம் கேட்கின்றனர். மேலும் பாகவதத்தை சுகர் பரீட்சித்துக்கு சொல்லக் காரணமான சம்பவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


    சுகரைப்பற்றி புகழ்ந்து பேசிய ரிஷிகள், அவர் பிறவியிலேயே பிரம்மஞானி என்று கூறி அதை நிரூபிக்கும் ஒரு நிகழ்ச்சியையும் நினவுகூருகின்றனர்.


    ஒரு சமயம் துறவு பூண்டு செல்லும் சுகரைத்தொடர்ந்து வியாசர் போய்க்கொண்டிருந்தார். அப்போது சுகர் செல்லும் வழியில் சில பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். சுகர் சென்றபோது அவர்கள் நிச்சிந்தையாய் தங்கள் செய்கையைத்தொடர பின்னால் வந்த வியாஸரைக்கண்டு வெட்கம் அடைந்து அவசரமாக ஆடை அணிந்துகொண்டனர்


    . வியாசர் அவதூதராகச்செல்லும் தன் இளம் வயது மகனைப்பார்த்து வெட்கமுறாமல் வயதான தன்னைப்பார்த்து ஏன் வேட்கமடையவேண்டும் என்று கேட்டார் அதற்கு அவர்கள் "ஸ்திரீ புமான் என்ற பேதம் உம்மிடம் இருக்கிறது. உங்கள் மகனிடம் தேஹப்ரக்ஞையே இல்லை " என்றனர்.


    அந்த ரிஷிகள்,. முற்றும் துறந்தவர்கள் கிருஹஸ்தர்கள் வீட்டில் கோதோஹனமாத்ரம் , பால் கறக்கும் அளவு சிறிது நேரம் மட்டுமே தங்குவர். அப்படி இருக்கையில் சுகர் எவ்வாறு ஏழு நாட்கள் தங்கி பாகவதத்தை பரீக்ஷித்துக்கு கூறினார் என்று கேட்டனர்.


    சூதர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் உரைப்பாராகி பாகவதத்தை சொல்ல ஆரம்பித்தார்.


    வியாசர் சத்யவதிக்கும் பராசர முனிவருக்கும் த்வாபரயுகத்தின் முடிவில் பிறந்தவர். 'முநீனாம் அபி அஹம் வியாச: ,' முனிவர்களில் நான் வியாசர் என்று பகவான் கீதையில் கூறியபடி வியாசர் பகவானுடைய அம்சமாவார். அவர் வேதங்களை தொகுத்து வழங்கியதனால் வேதவியாசர் எனப்படுகிறார். அவர் இயற்றிய மகாபாரதம் ஐந்தாம் வேதம் எனப்படுகிறது.


    இவ்வளவு செய்தவ்ராயினும் அவர் ஏதோ ஒரு மனவ்யாகூலத்தால் பீடிக்கப்பட்டார். அந்த சமயம் நாரதர் அங்கு வந்தார். பகவத் சங்கல்பத்தால் எங்கு ஒரு நல்ல ஆத்மாவுக்கு வழி காட்டுதல் தேவையோ அங்கு நாரதர் வருவது திண்ணம்.


    வியாசரின் மனக்கலக்கமும் நாரதரின் உபதேசமும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுகின்றன.


    அத்தியாயம் 5


    நாரதர் வியாசரின் மனக்கலக்கத்திற்கு காரணம் கேட்க வியாசர் தன் மன நிலையைக் கூறி அதற்கு காரணம் என்னவென்று கூறும்படி கேட்டார். நாரதர் கூறினார்.


    தர்மம் அர்த்தம் முதலியவை மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டாலும் ஹரியின் சரிதம் அங்கு கூறப்படவில்லை. தருமத்தின் பெயரால் வெறுக்கத்தக்க காமிய கருமத்தைப் பற்றி கூறுவது மகாபாரதம் இதனால் இயற்கையாகவே விஷயங்களில் பற்றுக்கொண்ட ஜனங்கள் இதுவே முக்கிய தர்மம் என்று நினைத்து ஞானிகள் கூறிள்ள நிவ்ருத்தி தர்மத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.


    அதற்கு ஒரே வழி பகவானிடம் பக்தியை ஊட்டுவதுதான் அதனால் சமாதியில் நின்று பகவானின் லீலைகளை தியானம் செய்து பிரகாசப்படுத்த வேண்டும். என்று கூறி பின் தன்னுடைய சரிதத்தையும் கூறினார்.
Working...
X