Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம்-1 அத்தியாயம் 3


    அத்தியாயம் 3- பகவானின் அவதாரங்கள்.


    ஸத் அஸத் ( real and unreal) இரண்டுமே பகவானின் மாயையால் ஏற்படுபவை . எப்படி என்றால் கயிறை பாம்பாகப் பார்க்கிறோம்.. கயிறு ஸத். பாம்பு அஸத். கயிறும் மாயையின் தோற்றமே. ஏனென்றால் எல்லாமே பிரம்மம் என்ற நிலையில் பார்த்தால் கயிறு என்பது ஒரு புறத்தோற்றம்


    . இது எதனால் வருகிறது என்றால் நம் அக்ஞானத்தால். இதுதான் அவித்யா என்று குறிப்பிடப்படுகிறது. அவித்யா என்பது ஒவ்வொரு ஜீவனுடைய அக்ஞானம் என்று வைத்தால் எல்லா ஜீவராசிகளுடையவும் அவித்யா தான் மாயா . இது ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டது. 'தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா,'(ப.கீ. 7.14)
    "இந்த என்னுடைய த்ரிகுணமான மாயையை கடப்பது கடினம் "என்கிறார்.


    .ஏன் என்னுடைய மாயைஎன்று கூறவேண்டும்? அதாவது நம் கர்மவினை நீங்கும் வரை எது உண்மை எது பொய் என்பது மறைக்கப்பட்டுள்ளது நம் அக்ஞானத்தால். இது முக்குணங்களால் ஏற்படுவது. தேஹாபிமானம் உள்ளவரை பகவத் ஞானம் ஏற்படாதாகையால் அவன் தன்னை மாயையால் மறைத்துக்கொண்டிருக்கிறான். எதுவரை?


    நாம் அவனை அறியும் வரை. அவன் அரணிக்கட்டையில் மறைந்த அக்னியைப்போல் நம்முள் மறைந்திருக்கிறான். அரணிக்கட்டையை கடைவதுபோல் நம் புத்தியை பக்தியால் கடைந்தால் அவன் வெளிப்படுவான்.


    இனி பகவானின் அவதாரங்களைப் பற்றி சூதர் சொல்வதைப் பார்க்கலாம்.


    பகவான் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்ய திருவுளம் கொண்டு, பதினாறு கலைகள் உள்ள உருவத்தை எடுத்துக்கொண்டார். இந்த பதினாறு கலைகளாவன, பத்து இந்த்ரியங்கள், ஐந்து பூதங்கள் மனம். இதை மூன்றாவது ஸ்கந்தத்தில் கபிலவதார வர்ணனையில் விரிவாகக் காணலாம் .


    பகவானின் இந்த ரூபத்தை யோகிகள் ஞானக்கண்ணால் காண்கின்றனர். 'சஹஸ்ர சீர்ஷா புருஷ: , சஹாஸ்ராக்ஷஸ்ஸஹஸ்ரபாத்,' என்று புருஷசூக்தத்தில் வர்ணிக்கப் படுவது இதுதான்.
    வற்றாத ஏரியிலிருந்து ஆயிரக் கணக்கான ஊற்றுக்கள் உற்பத்தியாவது போல நாராயணனிடம் இருந்து கணக்கிலா அவதாரங்கள் தோன்றுகின்றன. (எங்கெங்கு நல்ல பண்புகள் செயல்கள் காணப்படுகின்றனவோ அவை எல்லாம் பகவானின் அவதாரங்களே.)


    அவற்றுள் இருபத்துநான்கு முக்கியமாகக் கூறப்படுகின்றன. அவையாவன- வராஹ, நாரத, நர, நாராயண, கபில , தத்தாத்ரேய, யக்ஞ, ரிஷப, ப்ருது , மத்ஸ்ய , கூர்ம, தன்வந்தரி, மோகினி, நரசிம்ஹ, வாமன , பரசுராம, வியாச, ரகுராம,பலராம, கிருஷ்ண, புத்த, கல்கி என்பதாகும்.


    ரிஷிகள் .மனுக்கள், தேவர்கள், மனுவின் புத்திரர்கள் எல்லோரும் ஹரியின் அம்சமாவர். ஆனால் கிருஷ்ணாவதார பூர்ணாவதாரம். சுகர் சொல்கிறார், 'க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்.'.


    பாகவதம் புராணார்க்க: என்று சொல்லப்படுகிறது. அர்கக என்றால் சூரியன். கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கியபின் கலியின் இருளைப் போக்க வந்த சூரியன் பாகவதபுராணம் .


    இது ரிஷிகள் கேட்ட ஆறாவது கேள்வியான " கிருஷ்ணர் சென்றவுடன் தர்மம் எதை ஆதாரமாகக் கொண்டுள்ளது" என்றதற்கு பதிலாக அமைந்துள்ளது.
    பாகவதபுராணம் தோன்றிய சம்பவத்தை அடுத்த அத்தியாயம் வர்ணிக்கிறது. இப்போது இந்த அத்தியாயத்தில் உள்ள வேதாந்த உண்மைகளைப் பார்ப்போம்.


    1. ஸத் அல்லது பிரம்மம் ஒன்றுதான் முதலில் இருந்தது அது பலவாக ஆக சங்கல்பித்தது என்ற உபநிஷத் வாக்கியம்.
    2. நாராயணனே பரப்ரம்மம்.
    3.பக்தி மூலம்தான் ஞானம் வரும். ஞானத்தின் மூலம் முக்தி கிடைக்கும்.
    4. எல்லா செயல்களும் .எண்ணங்களும் அவனுக்கே அர்ப்பணிக்க வேண்டியவை.
    5. பகவான்தான் உண்மை. அவனே எல்லாமாகத் தோன்றுகிறான். ;அஜாயமானோ பஹுதா விஜாயதே- புருஷ ஸூக்தம். பிறப்பில்லாதவன் பலவாகப் பிறக்கிறான். அதனால் எல்லா மே அவன் அம்சம். அவன் அவதாரங்கள் கணக்கில்லாதவை
    6.பாகவதபுராணம் வேதம் உபநிஷத் இதிகாசங்கள் இவைகளின் சாரம்.
Working...
X