Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - முன்னுரை
    இதிஹாசங்களும் புராணங்களும் வேதத்தில் கூறப்பட்ட பல அரிய விஷயங்களை வேதம் படிக்காத, படிக்கமுடியாத பாமர ஜனங்களும் தெரிந்துகொள்வதற்காக கருணை உள்ளம் கொண்ட முனிவர்களால் அருளிச்செய்யப்பட்டவை.


    இவை ஸுஹ்ருத் சம்ஹிதை எனப்படும் அதாவது ஒரு நண்பன் அறிவுரை கூறுவதுபோன்றது. வேதம் பிரபுசம்ஹிதை எனப்படும். இப்படி செய் இப்படி செய்யாதே என்று ஒரு பிரபு கட்டளை பிறப்பிப்பது போன்றது. இதைத்தவிர மூன்றாவது ஒன்று உண்டு. அது காந்தா சம்ஹிதை எனப்படும்.


    காளிதாசன் முதலிய கவிகளால் இயற்றப்பட்ட காவியங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. நளினமாக நல்ல விஷயங்களை கூறுவதால் இது ஒரு மனைவி தன் கணவனுக்கு ஹிதமான விஷயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்வதற்கு ஒப்பானதால் இவை காந்தாசம்ஹிதை எனப்படும்.


    புரா அபி நவம் புராணம். அன்று போல் என்றும் புதிதாக்த் தோன்றுவது. அதனால்தான் புராணங்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. பதினெட்டு புராணங்கள் வியாசர் முதலியவர்களால் இயற்றப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் பாகவதம் ஒன்றுதான் ஸ்ரீமத் என்ற அடைமொழியுடன் கூறப்படுகிறது.


    இது இயற்றப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது. வியாசர் மகாபாரதம் இயற்றிய பின் மன அமைதி இன்றி இருக்கையில் நாரதர் அங்கு வர வியாசர் "சகல தர்மங்களையும் கூறும் மகாபாரதம் இயற்றி வேதங்களை வகுத்து இன்னும் பல வேத கர்மாக்களை செய்தபோதிலும் என் மனம் அமைதியுறவில்லையே ?" இது எதனால் என்று வினவினார் .


    நாரதர் கூறினார். "தர்மத்தைப்பற்றி விரிவாக உம்மால் கூறப்பட்டது ஆனால் அந்த 'தர்மஸ்ய பிரபு;அச்யுத: ,' என்று பீஷ்மரால் கூறப்பட்ட அந்த பரந்தாமனின் சரிதம் உம்மால் விரிவாக வர்ணிக்கப்படவில்லை. அழகான வாக்கு வர்ணனை பல இருந்தாலும் ஹரியின் பெருமையைக் கூறாத வாக்கு காக்கை குளிக்கும் குட்டை என ஞானிகள் கருதுகின்றனர்.அதை பரமஹம்சர்களாகிய ப்ரம்மஞானிகள் விரும்பமாட்டார்கள். அதனால் பகவானுடைய சரித்திரம் லீலைகள் இவற்றை வர்ணியுங்கள். இதுவரை நீங்கள் உபதேசித்தது காம்யகர்மம். பகவானிடம் பக்திதான் நிஷ்காம கர்மத்திற்கு வழி வகுக்கும். அதுவே ஆனந்த நிலையை அடடையும் வழி என்று கூறினார்.


    இந்த உபதேசத்தின்படி வியாசர் பாகவத புராணத்தை இயற்றி பிறகு தன் மகனான சுகருக்கு உபதேசித்தார். சுகர் இதை பரீக்ஷித்திற்கு கூற அதை கேட்டிருந்த சூதபௌராணிகர் அதை நைமிசாரண்யத்தில் உள்ள ரிஷிகளுக்கு கூற இவ்வாறு பாகவத புராணம் உலகில் பரவியது.


    பாகவதபுராணம் அத்யாத்ம தீபம் எனப்படும். மனிதற்கு ஏற்படும் சம்சார துக்கங்களைப் போக்கி ஆத்ம ஞானம் எனப்படும் ஒளியை பிறப்பிக்கும் தீபம் போன்றது. பாகவதத்தை கேட்பவருக்கும் படிப்பவருக்கும் மனதில் பகவான் தோன்றுவார் என்பது திண்ணம். பக்தியின் மூலம் முக்திக்கு வழி காட்டுவது


    பரீக்ஷித்துக்கு பாகவதம் ஏழு நாட்களில் சொல்லப் பட்டது. முதல் நாள் வராஹாதாரம் வரை, இரண்டாம் நாள் ஜடபரதர் கதை வரை, மூன்றாம் நாள் அம்ருத மதனம் வரை, நான்காவது நாள் கிருஷ்ணாவதாரம் வரை , ஐந்தாம் நாள் ருக்மிணி கல்யாணம் வரை, ஆறாவது நாள் உத்தவ சம்வாதம் வரை. ஏழாவது நாள் முடிவு. பாகவத சப்தாஹம் என்ற முறையில் ஏழு நாட்களில் இவ்வாறு படிக்கும் வழக்கம் உள்ளது.


    பாகவதம் பன்னிரண்டு பிரிவுகளைக் கொண்டது இவை ஸ்கந்தங்கள் எனப்படும். முதல் ஸ்கந்தத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் நான்கு ஸ்லோகங்கள் மிகவும் பொருள் செறிந்தவையாகும். அவை ஒவ்வொன்றும் ஒரு தனிப்பதிவைப் பெரும் தகுதியுடையவை.. அவைகளை அடுத்துக் காண்போம்.
Working...
X