Courtesy:smt.Padma Gopal
(பரந்தாமன் மன்றம்....)
சத்யபாமா:−
நாலு பொட்டி நகைய வெச்சும்−
நாரணனுக்கு சமம் ஆகலையே;
பத்துப் பொட்டி பணத்தை வெச்சும்−
பரந்தாமனுக்கு இணையாகலையே!
அடுக்கடுக்காய் ஆபரணம்−
அத்தனையும் வெச்சாச்சே;
இடுவதற்கு ஏதுமின்றி−
இருந்ததெல்லாம் போயாச்சே!
கணக்கே ஒன்னும் பாக்காம, வெச்ச−
கனகம் போறலையே;
எனக்கே இது முடியலைனா,
இவன் கதியுமினி என்னாகும்?
மாயம் ஏதும் செய்யறானோ−
மாயக்காரன் இவனாச்சே; (தலை)
சாயமாட்டேன், இவன் முன்னே−
சத்யபாமா நானாச்சே!
ருக்மிணி:−
தூணில் அன்று உதித்தாயாம்−
துயரமெல்லாம் துடைத்தாயாம்;
ஊனில் உயிராய் நீ பரவி−
உயர்வையெல்லாம் கொடுத்தாயாம்;
நானிலேனே நாதனே,
நீயாகிப் போனேனே−
வீணில் என்னை வாட்டாதே,
வீழ்ந்தேன், உந்தன் சரணமே!
இணையாக உனக்கென்னால்−
ஒன்றைத் தர இயலுமோ?
பிணையாக நீ நின்றால்−
பெண்மனம்தான் பொறுக்குமோ?
நின்னையே உள்ளில் தாங்கும்−
நெஞ்சம் வருந்தலாகுமோ?
விண்டு ஒரு துளவம் வைப்பேன்;
நீயும் இங்கு பொருந்த வா!
தீர்வு:−
அன்பு மட்டும் நிறைந்த நெஞ்சில்−
ஆணவம் புகுவதில்லையே;
அருளைத் தர அண்ணலுமே−
அங்கெழுந்தருள்வான், என்றுமே!
கள்ளம் கசடு கொண்ட நெஞ்சை−
கண்ணன் ஏற்பதில்லையே;
உள்ளம் பார்த்து உயர்ந்த பலகை−
உரைப்பது அவன் உவகையே!
தனது எல்லாம் தந்த மனதை−
தலைவன் கொள்வது உண்மையே;
தன்னில் அவனை வயப்படுத்த−
தாள் ஏற்கும் நம்மையே!
(பரந்தாமன் மன்றம்....)
சத்யபாமா:−
நாலு பொட்டி நகைய வெச்சும்−
நாரணனுக்கு சமம் ஆகலையே;
பத்துப் பொட்டி பணத்தை வெச்சும்−
பரந்தாமனுக்கு இணையாகலையே!
அடுக்கடுக்காய் ஆபரணம்−
அத்தனையும் வெச்சாச்சே;
இடுவதற்கு ஏதுமின்றி−
இருந்ததெல்லாம் போயாச்சே!
கணக்கே ஒன்னும் பாக்காம, வெச்ச−
கனகம் போறலையே;
எனக்கே இது முடியலைனா,
இவன் கதியுமினி என்னாகும்?
மாயம் ஏதும் செய்யறானோ−
மாயக்காரன் இவனாச்சே; (தலை)
சாயமாட்டேன், இவன் முன்னே−
சத்யபாமா நானாச்சே!
ருக்மிணி:−
தூணில் அன்று உதித்தாயாம்−
துயரமெல்லாம் துடைத்தாயாம்;
ஊனில் உயிராய் நீ பரவி−
உயர்வையெல்லாம் கொடுத்தாயாம்;
நானிலேனே நாதனே,
நீயாகிப் போனேனே−
வீணில் என்னை வாட்டாதே,
வீழ்ந்தேன், உந்தன் சரணமே!
இணையாக உனக்கென்னால்−
ஒன்றைத் தர இயலுமோ?
பிணையாக நீ நின்றால்−
பெண்மனம்தான் பொறுக்குமோ?
நின்னையே உள்ளில் தாங்கும்−
நெஞ்சம் வருந்தலாகுமோ?
விண்டு ஒரு துளவம் வைப்பேன்;
நீயும் இங்கு பொருந்த வா!
தீர்வு:−
அன்பு மட்டும் நிறைந்த நெஞ்சில்−
ஆணவம் புகுவதில்லையே;
அருளைத் தர அண்ணலுமே−
அங்கெழுந்தருள்வான், என்றுமே!
கள்ளம் கசடு கொண்ட நெஞ்சை−
கண்ணன் ஏற்பதில்லையே;
உள்ளம் பார்த்து உயர்ந்த பலகை−
உரைப்பது அவன் உவகையே!
தனது எல்லாம் தந்த மனதை−
தலைவன் கொள்வது உண்மையே;
தன்னில் அவனை வயப்படுத்த−
தாள் ஏற்கும் நம்மையே!