கைங்கர்யம், செல்லப்பிள்ளை
ஸ்ரீ ராமானுஜர், வரதராஜனுக்கு காஞ்சியில் சேவை செய்து கொண்டிருந்தார்.
பின்னர், ஸ்ரீரங்கநாதர், இங்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு அழைக்க, கடைசி வரை ஸ்ரீரங்கநாதருக்கே சேவை செய்து கொண்டு ஸ்ரீ ரங்கத்திலேயே இருந்தார்.
ஸ்ரீ ராமானுஜருக்கு, பெருமாளுக்கு முன் தான் தாஸன் என்ற மனோபாவம் உண்டு. அவரே புருஷன் என்பதால், அவருக்கு ஸ்திரீ ஆகிறான்.
இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், காஞ்சிபுரம் இவருக்கு பிறந்த ஊராக மனோபாவம்.
காஞ்சி வரதனே இவரின் தந்தை.
காலத்தில் ஒரு தகப்பன் நல்ல வரன் பார்த்து, தன் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து அனுப்புவது போல,
இவரை ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்ய அனுப்பி விட்டார்.
இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், ஸ்ரீரங்கம் இவருக்கு புகுந்த ஊராக மனோபாவம்.
ரங்கநாதரே இவரின் கணவன். கம்பீரமானவர்.
சோழ அரசன் "கிருமி கண்ட சோழன்" சைவ வெறி தலைக்கு ஏறி, ஸ்ரீ ரங்கத்தையே கலவர பூமியாக்கினான்.
ஸ்ரீ ராமானுஜர் கலவரத்தால் வெளியேறி, 12 வருடங்கள் கர்நாடகாவில் உள்ள திரு நாராயணாபுரம் என்ற மேல்கோட்டையில் வாசம் செய்தார்.
அங்கு இவருக்காகவே, செல்லப்பிள்ளையாக பெருமாள் கிடைத்தார். அங்கேயே தங்கி, செல்லப்பிள்ளைக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
12 வருடங்கள் ஆகி விட்டதால், ஸ்ரீரங்க பெரிய பெருமாளுக்கு, ஸ்ரீ ராமானுஜர் மேல் கோட்டையிலேயே இருந்து விடுவாரோ என்று கூட தோன்றி விட்டது.
அதனால், பெரிய பெருமாளே, ராமானுஜரை உடனே திரும்பி வர சொல்லி விட்டார்.
ராமானுஜருக்கோ நிலை கொள்ள முடியாத நிலை.
ஸ்ரீ ரங்கம் சென்றால், செல்லப்பிள்ளையை விட்டு பிரிய வேண்டும்.
அப்பொழுது தான் யதியாக (சந்யாசி) இருக்கும் ஸ்ரீராமானுஜருக்கு ஒரு தாய், தன் பிள்ளையை விட்டு பிரிய வேண்டும் என்கிற நிலையில், எத்தனை மனத் துயரம் அடைவாள் என்ற அனுபவம் கிடைத்ததாம்.
தன் பிள்ளை வேலைக்காக எங்கோ சென்று வாழ்கிறான். வயதான கணவனோ தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பண்ணுகிறார்.
பிள்ளை ஒழுங்காக சாப்பிட்டானோ, நல்ல உடை உடுத்திக் கொள்கிறானோ என்று கவலைப்பட்டு, ஒரு வாரம் அவனோடு இருக்கலாம் என்று தன் பிள்ளையுடன் தங்கினாள்.
மேலும் படிக்க.. click
http://proudhindudharma.blogspot.in/...-post.html?m=1