Courtesyr.Smt.Saroja Ramanujam
Dasaavathaaram with my slokas
கிருஷ்ணாவதாரம் பகுதி 1
கிருஷ்ணாவதாரம்
श्री कृष्णावतारः
कृष्णावतारस्तु पूर्णावतारःआद्यन्तं परतत्वविनिर्णयं
ब्रुन्दावनरासलीला तु तच्चरितस्य ह्रदयं इत्युक्तं |
க்ருஷ்ணாவதாரஸ்து பூர்ணாவதார:
ஆத்யந்தம் பரதத்வவிநிர்ணயம்
பிருந்தாவன ராசலீலா வர்ணனம்
தத் சரிதஸ்ய ஹ்ருதயமித்யுக்தம்
கிருஷ்ணாவதாரம் பூர்ணாவதாரம். பகவான் தன் முழு சக்தியையும் வெளிக்காட்ட வந்த அவதாரம். முதலிலிருந்து கடைசி வரை அவனுடைய பரத்வம் நிர்ணயிக்கப்படுகிறது. ஸ்ரீமத்பாகவதத்தின் ஹ்ருதயம் என்று சொல்லப்படுவது பிருந்தாவனத்தில் கண்ணன் செய்த ராசலீலை.
கண்ணனுடைய அவதாரத்தின் உள்ளர்த்தத்தை தெளிவு படுத்துதல் என்பது மிகப்பெரிய பணியாகும். ஏனென்றால் அவன் பிறந்ததில் இருந்தே தன் இறைமையை வெளிப்படுத்துகிறான். 'க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் ' என்கிறது பாகவதம். அவனே கீதையில்
'ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத: ' "என்னுடைய பிற்ப்பு செயல் இவைகளை உள்ளபடி யார் அறிவாரோ " என்கிறான்.
மேலும், 'அவஜானந்தி மாம் மூடா: மானுஷீம் தநும் ஆஸ்ரிதம் ,' " என்னை மனிதன் என் நினைப்பவர்கள் மூடர்கள்.", என்கிறான். கிருஷ்ணாவதாரத்தின் தாத்பர்யத்தை அறிவதற்கு அதை முழுமையாக ஆராய வேண்டும்.
ராமன் "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் – நான் என்னை தசரதனுடைய பிள்ளையான மானுடன் என்று அறிகிறேன்," என்று சொல்கிறான். ஆனால் க்ருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப்போல் என்றும் இருந்ததில்லை.
கிருஷ்ணன் தேவகியிடமிருந்து பிறந்தான் என்பதே ஒரு மாயை. தேவகியிடம் தோன்றினான் என்று கொள்ள வேண்டும். தேசிகர் யாதவாப்யுதயத்தில் சூரியன் கிழக்கு திசையில் உதிப்பதைப்போல கிருஷ்ணன் தேவகியிடம் தோன்றினான் என்கிறார். சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை . அவன் என்றும் இருக்கிறான் அவனை நாம் கிழக்கில் பார்க்கிறோம் என்பதுதான் உண்மை. அதுபோல எங்கும் உள்ள பரம்பொருளை மக்கள் தேவகி மைந்தனாகப் பார்த்தார்கள்.
குழந்தைப்பருவத்திலேயே அசுரர்களைக் கொன்று தன் தெய்வத்தன்மையை நிலைநாட்டினான். அவனுடைய ஒவ்வொரு லீலையும் இதையே அறிவுறுத்தின. அவனுடைய அவதாரநோக்கம் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் என்பதை அவனுடைய வாழ்க்கை முழுவதும் காண்பித்தான்.
சாதாரணமாக நாம் ராமனைப்போல் வாழ வேண்டும் கிருஷ்ணன் சொன்னதைப்போல் செய்ய வேண்டும் என்பது பரவலாக சொல்லப்படுகிறது. இதைப்போல் அபத்தம் வேறு எதுவும் இல்லை,. ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் இரண்டும் வேறு வேறல்ல. கிருஷ்ணாக பின்பு சொல்லப்போவதை ராமனாக வந்து காண்பித்தான்,. ஏனென்றால் கிருஷ்ணன் செய்தது எல்லாம் மானிடச்செய்கையே அல்ல. இதை மனதில் கொண்டு கிருஷ்ணாவதாரத்தைப் புரிந்துகொள்ள் வேண்டும்.
கிருஷ்ணன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம்.
கிருஷ் என்றால் பூமி. 'ண' காரம் பரிபூர்ண ஆனந்தத்தைக் குறிக்கிறது. அதனால் கிருஷ்ண என்ற சொல் அந்த பரம்பொருளான நாராயணனையே குறிக்கும். கிருஷ் என்றால் உழுவதைக் குறிக்கும் நம் மனதை உழுது அதில் எல்லையில்லா ஆனந்தத்தை விளைவிப்பதால் அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப் படுகிறான்.
பரப்ரம்மம் சத் சித் ஆனந்தம் என்று வர்ணிக்கப் படுகிறது. ராமன் சத் , அதாவது சுத்த சத்வம் வாமனன் சித் அல்லது ஞானஸ்வரூபம்.
கிருஷ்ணன் ஆனந்தஸ்வரூபம். கர்ஷதி இதி கிருஷ்ண: என்றும் சொல்லலாம். அதாவது ஆகர்ஷிப்பவன் என்று பொருள்.
இதை உணர்த்தும் ஸ்லோகம் என் உள்ளத்தில் தோன்றியது பின் வருமாறு.
प्रकर्षलीलाहृत भक्तह्रुदयनवनीतः
कृष्णःमोहनवपुमोहित रामाभिरामः|
वृष्णिकुलभूषणःसुरवन्दितमुकुन्दः
प्रकर्षलहरीसंजनन आनन्दस्वरूपः||
ப்ரகர்ஷ லீலாஹ்ருத பக்தஹ்ருதயநவநீத:
க்ருஷ்ண: மோகனவபுமோஹித ராமாபிராம:
வ்ருஷ்ணிகுல பூஷண: சுரவந்திதமுகுந்த:
ப்ரகர்ஷலஹரீ ஸஞ்ஜனன ஆனந்தஸ்வரூப:
பக்தஹ்ருதய நவநீத: - பகதர்களின் ஹ்ருதயமாகிற வெண்ணையை
ப்ரகர்ஷலீலாஹ்ருத- அலகிலா விளையாட்டுடையவன் கொள்ளை கொள்ளுபவன்
க்ருஷ்ண: - கிருஷ்ணன்
மோஹனவபு மோஹித –அவன் அழகிய உருவத்தில் மோஹம் அடைந்த
ராமாபிராம: - பெண்களுக்கு பிரியமானவன்
வருஷ்ணி குல பூஷண: - யாதவகுலத்தின் அணி போன்றவன்
ஸுரவந்திதமுகுந்த:- தேவர்களால்வணங்கப்பட்ட முகுந்தன் ( முக்தியைத் தருபவன்)
ப்ரகர்ஷலஹரீ ஸஞ்ஜனன- அலை அலையாகப் பெருகும்
ஆனந்தஸ்வரூப:-ஆனந்தமே உருவானவன்
கண்ணன் என்னும் இன்ப வெள்ளம் பெருகி உள்ளத்தில் தோன்றிய கற்பனை-
मणिरचितस्थले किं इदं इति रामः अचलन् श्रुणोति
जानुहस्ताभ्यां चलन् कृष्णसहित: नूपुरध्वनिं तयोः |
हसन् गच्छति कृष्णःअचलन् न श्रूयते इति वदन्
रामो नाल्पमतिः किंतु इच्छति श्रोतुं कृष्णनूपुरगीतम् ||
மணிரசிதஸ்தலே கிமிதம் இதி ராம: அசலன் ச்ருணோதி
ஜானுஹஸ்தாப்யாம் சலன் க்ருஷ்ணஸஹித: நூபுரத்வநிம் தயோ:
ஹஸன் கச்சதி க்ருஷ்ண: அசலன் ந ச்ரூயதே இதி வதன்
ராமோ ந அல்பமதி: கிம்து இச்சதி ச்ரோதும் க்ருஷ்ண நூபூர கீதம்
மணிரசிதஸ்தலே- ரத்னங்கள் இழைத்த தரையில்
ராம: - பலராமன்
க்ருஷ்ணஸஹித- கிருஷ்ணனுடன்
ஜானுஹஸ்தாப்யாம்- கைகளாலும் முழந்தாள்களாலும்
சலன்- தவழ்ந்து செல்கையில்
தயோ: - அவ்விருவருடைய
நூபுரத்வநிம்- காற்சலங்கை ஓசையை
ச்ருணோதி – கேட்கிறான்
கிம் இதம் - இது என்ன
இதி – என்று
அசலன்- அசையாமல் நிற்க
க்ருஷ்ண:- கிருஷ்ணன்
ஹஸன் – சிரித்துக்கொண்டு
அசலன் – அசையாமல் நின்றால்
ந ச்ரூயதே – கேட்காது
இதி வதன் – என்று சொல்லிக்கொண்டு
கச்சதி – செல்கிறான்
ராம: - பலராமன்
ந அல்பமதி: - முட்டாள் அல்ல
கிம்து – ஆனால்
க்ருஷ்ண நூபுர கீதம் – கிருஷ்ணனுடைய சலங்கை ஒலியை
ச்ரோதும் இச்சதி - கேட்க ஆசைகொண்டு ( நின்றான்)
கிருஷ்ணனும் பலராமனும் குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து போகையில் அவர்களுடைய் காற்சலங்கை ஒலி கேட்டு இது என்ன என்று பலராமன் நின்றுவிடுகிறான். கண்ணன் நீ செல்லும் போதுதான் அது கேட்கும் நின்றால் கேட்காது என்று சிரித்த வண்ணம் செல்கிறான். பலராமன் அது தெரியாதமூடன் அல்ல. ஆனால் கண்ணனுடைய காற்சலங்கை ஒலியை கேட்கவே நின்றான்.