Announcement

Collapse
No announcement yet.

Purusha sooktam with tamil meanings Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Purusha sooktam with tamil meanings Continues

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    7. ஸப்தஸ்யாஸன் பரிதய:| த்ரி: ஸப்த ஸமித: க்ருதா: |
    தேவா யத்யக்ஞம் தன்வானா: அபத்னன்புருஷம் பசும்||
    அஸ்ய இதற்கு
    ஸப்த- ஏழு
    பரிதய: பரிதிகள்
    ஆஸன்- இருந்தன
    த்ரிஸப்த- இருபத்துஒன்று தத்துவங்கள்
    ஸமித: - சமித்துக்களாக
    க்ருதா: - செய்யப்பட்டன.
    இந்த ஸ்ருஷ்டி யக்ஞத்தில் ஏழு பரிதிகள் உபயோகப் பட்டன. பரிதி என்றால் யாகாக்னியை சுற்றி வைக்கப்படுவது. எதையும் இன்னும் ஸ்ரிஷ்டிக்காததால் இந்த பரிதிகள் எது என்றால் ஏழு சந்தஸ்களையுமே பரிதியாக் கூறியுள்ளது என்று கொள்ளலாம்.
    மைத்ராயணி உபநிஷத்தில் பஞ்ச பூதங்கள் அஹங்காரம் புத்தி என்ற ஏழு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுமே ஸ்ருஷ்டிக்கப்படாததால் இவைகளைப் பற்றிய த்யானமே இங்கு சொல்லப்படுகிறது.
    பஞ்ச பூதங்கள் சூக்ஷ்ம ரூபம் , அவைகளின் ஸ்தூல ரூபம் பஞ்ச கர்மேந்த்ரியங்கள் பஞ்ச ஞானேந்த்ரியங்கள் (Senses not sense organs) அந்த;கரணம் ஆக மொத்தம் 21. சமித் என்றால் சிருஷ்டிக்கு காரணப் பொருள்கள் என்று கொள்ளலாம்.
    .
    தேவா: தேவர்கள்
    யக்ஞம்- யக்ஞத்தை செய்பவர்களாகி
    யத் புருஷம் – முன்சொன்ன புருஷனை (. தஸ்மாத் விராட் அஜாயத|விராஜோ அதி பூருஷ:|ஸ ஜாதோ அத்யரிச்யத| என்று முன்னம் சொல்லப்பட்ட பரம்புருஷ்னின் ஸ்ருஷ்டிசக்தியான பிரம்மா)
    பசும்- யாகப்பசுவாக
    அபத்னன்-யூபஸ்தம்பத்தில் கட்டினார்கள்.
    அதாவது பிரம்மாவிடம் இருந்துதான் சிருஷ்டி. (ஸ ஜாதோ அத்யரிச்யத | பச்சாத் பூமிம் அதோ புர:- சூக்தம் 5)
    யூபஸ்தம்பம் என்பது பிரகிருதி. அதாவது சூக்ஷ்ம பிரபஞ்சம். பிரம்மா முதல் சிருஷ்டி அதன் பிறகு பிரகிருதியின் சம்பந்தத்தால் அவரிடம் இருந்து பிரபஞ்சம் தோன்றியது என்று அர்த்தம்.
    'பிரம்மா தேவானாம் பிரதம: சம்பபூவ' _ முண்டகோபனிஷத்.
    பிரம்மாதான் தேவர்களுக்கு முன்னே தோன்றியவர்.
    புருஷசூக்தம் - பிரதம அனுவாகம்
    18. யக்ஞேன யக்ஞம் அயஜந்த தேவா: |
    தானி தர்மானி பிரதமான்யாஸன்|
    தே ஹ நாகம் மஹிமான:ஸசந்தே
    யத்ர பூர்வே ஸாத்யா: சாந்தி தேவா||
    தேவா: தேவர்கள் (பிரம்மாவின்சூக்ஷ்ம இந்த்ரியங்கள்)
    யக்ஞேன- இந்த மானஸ யக்ஞத்தினால்
    யக்ஞம்- இந்த யக்ஞ புருஷனை
    அயஜந்த- பூஜித்தார்கள்
    தானி தர்மாணி- அதனுடன் சேர்ந்த தர்மங்கள்
    பிரதமானி – முக்கியத்துவம் உடையவையாக
    ஆஸன் – ஆகின.
    யத்ர – எங்கு
    பூர்வே – ஆதியிலிருந்து உள்ள
    ஸாத்யா:தேவா: - ஸாத்யர்கள் , , தேவர்கள் ரிஷிகள் முதலானோர். இவை பிரம்மாவின் சிருஷ்டி சக்தியின் அவயவங்கள்
    ஸந்தி – இருக்கிறார்களோ
    நாகம் – அந்த சுவர்க்க லோகத்தை
    தே மஹிமான: - அந்த உபாசனையால் மகிமை பெற்றவர்களும்
    ஸசந்தே – அடைகிறார்கள்.
    இங்கு ஸ்ருஷ்டிரூபமான் யக்ஞத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. இந்த யக்ஞ புருஷன் விராட்ரூபமான் பரமபுருஷன்.
    வேதத்தின் மூலம்தான் சிருஷ்டி. ஆதலால் இங்கு சொல்லப்பட்ட தர்மங்கள் புருஷார்த்தங்களை ஒட்டி செய்யவேண்டிய செயல்கள்.
    மனிதர்களை சிருஷ்டி செய்தபின் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் முக்கியமான தர்மங்கள் என்று கூறப் பட்டவை. அதன் பலன் என்ன ?
    புருஷார்த்தங்களை உள்ளபடி உணர்ந்தோர் அதன் மூலம் ஞானம் அடைந்து பரமபுருஷனை வழிபாட்டு மேலான பதவியை அடைகிறார்கள் என்று பொருள்.
    இங்கு நாகம் என்பது இந்திரன் மற்றும் தேவர்களின் சுவர்க்கம் அல்ல.வைகுண்டத்துக்கும் நாகம் என்று பெயர். ஸாத்யர்கள் முதலியோர் நித்யசூரிகள் என்றும் கொள்ளலாம். அதனால் இங்கு நாகம் என்பது பிறவி ஒழிந்த நிலையையே கூறுகிறது.
    அதாவது முக்தி நிலை . அதைவிட பெரிய சுவர்க்கம் ஒன்று உளதோ!
    புருஷசூக்தம் - த்விதீய அனுவாகம்
    3. ப்ரஜாபதி: சரதி கர்பே அந்த: | அஜாயமானோ பஹுதா விஜாயதே|
    தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் | மரீசீனாம் பதம் இச்சந்தி வேதஸ: |
    ப்ரஜாபதி: - பிரம்மாண்டத்திற்கு அதிபதியான பரமபுருஷன்
    கர்பே அந்த:- பிரபஞ்சத்தின் உள்ளே
    சரதி- வசிக்கிறார்
    அஜாயமான: - தான் பிறக்காமலேயே
    பஹுதா- பலவாக
    விஜாயதே – தோன்றுகிறார்
    தஸ்ய – அவருடைய
    யோனிம் – உண்மையான ஸ்வரூபத்தை
    தீரா: – புத்திமான்கள்
    விஜானந்தி – அறிகிறார்கள்
    வேதஸ: ஸ்ருஷ்டித் தொழிலில் ஏவப்பட்டவர்கள் ( சிருஷ்டி சக்திகள் )
    மரீசீனாம் பதம் –மரீசி முதலிய ஞானிகளுடைய
    பதம் – பதவியை
    இச்சந்தி – அடைய விரும்புகிறார்கள்.
    பிரஜாபதி என்பது பரமபுருஷனாகிற பரப்ரம்மம். கர்பே சரதி- பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிறார். கர்பே என்பது அந்தராத்மாவைக் குறிக்கும்,.
    பஹு ஸ்யாம் பிரஜாயேய என்றபடி அஜாயமான: , தான் பிறகாமலேயே அதாவது தன்னிலை மாறாமல் பல வடிவங்கள் தோற்றுவிக்கிறார், பஹுதா விஜாயதே., என்று பொருள்.
    கீதையில்
    "மமயோனி: மஹத் ப்ரம்ம தஸ்மின் கர்பம் ததாம்யஹம் " என்று காண்கிறோம்
    . இதன் பொருள் மூலப்ரக்ரருதி என்னும் சூக்ஷ்ம பிரபஞ்சம் பரம புருஷனின் கர்பத்தை தரிக்கிறது என்று சொல்கிறார்
    இங்கு மஹத் என்பது விராட் அல்லது சூகஷ்ம பிரபஞ்சம் என்று எடுத்துக்கொண்டால் பரமபுருஷன் அதற்குள் ஸ்தூல பிரபஞ்சம் என்னும் கருவை உண்டுபண்ணுகிறான்,
    இந்த உண்மை ஸ்வரூபத்தை ஞானிகள் அறிவார்கள்.
    மரீசி முதலியவர்கள் ப்ரஜாபதிகள் என்று கூறப்படும் முதல் சிருஷ்டிகள். சிருஷ்டி சக்திகளான தேவர்கள், அதாவது ஹிரண்ய கர்பன் அல்லது பிரம்மாவின் இந்த்ரியங்கள் மூலம் ப்ரஜாபதிகள் உற்பத்தி ஏற்படுகிறது.
    . 4. யோ தேவேப்ய ஆதபதி| யோ தேவானாம் புரோஹித:|
    பூர்வோ யோ தேவேப்யோ ஜாத: | நமோ ருசாய ப்ராம்மயே|
    யோ – எவர்
    தேவேப்ய: = தேவர்களின் உள்ளே
    ஆதபதி- பிரகாசிக்கிறாரோ
    யோ – எவர்
    தேவானாம்- தேவர்களின்
    புரோஹித: - புரோஹிதரான ப்ருஹஸ்பதியாக இருக்கிறாரோ
    யோ- எவர்
    தேவேப்ய:- தேவர்களுக்கு
    பூர்வ: - முன்னால்
    ஜா-த: - ஹிரண்யகர்பராக தோன்றினாரோ
    ருசாய- அந்த ஸ்வயம்ப்ரகாசரான
    ப்ராஹ்மயே- பரப்ரம்மத்திற்கு
    நம: - நமஸ்காரம்.
    தேவர்களின் உள்ளே பிரகாசிக்கிறார் என்பது பிரம்மத்தையே குறிக்கும். தேவர்களான இந்த்ரியங்கள் ஹிரண்ய கர்பனான பிரம்மாவின் ஸ்தூல வடிவுக்குப் பின் தோன்றியவர்கள்.
    அவர்களுக்கு முன் ஹிரண்ய கர்பனாகத் தோன்றியது பிரம்மமே என்பதனால் அந்த பிரம்மத்திற்கு நமஸ்காரம் என்று கூறப்படுகிறது.
    தேவார்களின் புரோஹிதரான ப்ரஹஸ்பதி என்பது புத்தியைக் குறிக்கும். இந்த்ரியங்கள் புத்திக்குட்பட்டவை என்பதனால். புரோஹித என்ற சொல் நன்மைக்கு அதாவது முக்திக்கு வழிகாட்டி என்று எடுத்துக்கொண்டால் அது பரமபுருஷனையே குறிக்கும். அதனால் தான் ஸ்வயம்பரகாசமான பிரம்மத்தை வணங்குகிறோம் என்று கூறப் பட்டுள்ளது .
    16. வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் | ஆதித்யவர்ணம் தமஸஸ்து பாரே |
    ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே||
    ஸர்வாணி ரூபாணி- எல்லா உருவங்களையும்
    விசித்ய – தோற்றுவித்து
    நாமானி – பெயர்களை
    க்ருத்வா- கற்பித்து
    யத் தீர: - எந்த தீரனான புருஷன்
    ஆஸ்தே- இருக்கிறாரோ
    ஏதம் – அந்த
    மஹாந்தம்- மகிமை பொருந்தியவரும்
    ஆதித்ய வர்ணம்- சூரியனைப்போல் காந்தி உடையவரும்
    தமஸ: து – இருளுக்கு
    பாரே- அப்பாற்பட்டவரும் ஆனா
    புருஷம் – புருஷனை
    அஹம் – நான்
    வேத – அறிவேன்
    சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்ட 'ஆத்மனா அனுப்ரவிச்ய நாம் ரூபே வ்யாகரவாணி' என்றதன் பொருள் இங்கே காணப்படுகிறது.
    பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்ததும் அதற்கு உயிர் கொடுக்க பரமபுருஷன் அவற்றின் அந்தராத்மாவாக உள்ளே பிரவேசித்து உருவம் பெயர் இவற்றைக் கொடுத்தான்.
    இங்கு நான் அறிவேன் என்று சொல்வது வேதமாகிய புருஷன். பரமபுருஷன் அந்தராத்மாவாக இருக்கிறான் என்பதைக் கூறுவது 'அங்குஷ்டமாத்ர: புருஷோ அந்தராத்மா' என்னும் வேத வாக்கியம்.
    மஹாந்தம் என்றால் மிகப்பெரிய , சர்வவ்யாபி , அல்லது பெரும் மகிமை வாய்ந்த என்று பொருள் இருந்தாலும் மஹா+ அந்தம் என்று பிரித்தால் எல்லாவற்றிற்கும் உள்ளே என்று பொருள் கொள்ளலாம்.
    'யஸ்மாத் பரம் நாபரம் அஸ்தி கிஞ்சித்' அந்த பிரம்மத்தைக் காட்டிலும் பெரியது அல்லது மேலானது எதுவும் இல்லை என்பது வேத வாக்கியம். மேலும் 'ந தத் ஸம: ச அதிக: ச த்ருச்யதே,' பரம்புருஷனுக்கு சமமாகவோ அல்லது மேலாகவோ எதுவும் இல்லை என்றும் காண்கிறோம்.
    இவ்வாறு அணோரணீயான் மஹதோ மஹீயான் ' என்பது விவரிக்கப் பட்டது.
    அடுத்து ஆதித்யவர்ணம் என்பது சூரியனைப் போல் பிரகாசம் என்று பொருள் கொண்டால் பரமபுருஷனுடைய தேஜஸினால் பிரகாசிக்கும் சூரியனை உவமையாகச் சொல்லலாமா என்று தோன்றுகிறது.
    'தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ' என்பது சுருதி. அதாவது அவனுடைய பிரகாசத்தின் மூலமே எல்லா ஒளி உருவங்களும் பிரகாசிக்கின்றன என்று பொருள்.
    ஆனால் இங்கு இன்னொரு வேத வாக்கியத்தைப் பார்த்தால், 'ய:ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே,' என்னும் வாக்கியத்தில் 'எந்த புருஷன் சூரியனின் உள்ளே பொன்மயமாகக் காணப்படுகிறானோ; என்ற அரத்தத்தை வைத்துப் பார்க்கையில் இங்கே சூரியனைப்போல் அல்ல சூரியனாகப் பிரகாசிக்கிறான் என்று கொள்ள வேண்டும்.
    தமஸ; து பாரே – இருளுக்கு அப்பாற்பட்டவன். இங்கு இருள் என்பது தமோ குணத்தினால் ஏற்பட்ட அறியாமை என்னும் இருள். அது ஞானம் என்ற சூரியன் உதிக்க விலகினால் அதறு அப்பால் உள்ள பிரம்மம் புலப்படும்.
    புருஷசூக்தம் - த்விதீய அனுவாகம்
    த்விதீய அனுவாகம்
    1. அத்ப்ய: சம்பூத; ப்ருதிவ்யை ரஸாத் ச | விஸ்வகர்மண: ஸமவர்ததாதி |
    தஸ்ய த்வஷ்டா விததத் ரூபமேதி| தத் புருஷஸ்ய விச்வம் ஆஜானம் அக்ரே ||
    அத்ப்ய: - நீரிலிருந்தும்
    ப்ருதிவ்யை ரஸாத் ச – நிலத்தின் சாரத்திலிருந்தும்
    ஸம்பூத:- பிரபஞ்சம் உண்டாயிற்று.
    விச்வகர்மண: - ஸ்ருஷ்டிகர்த்தாவான பரமபுருஷனிடம் இருந்து
    அதி – நீர் நிலம் முதலியவைகளுக்கும் மேலான விராட்புருஷன்
    ஸமவர்தத – தோன்றினான்.
    தஸ்ய – அவனுடைய
    ரூபம்- வடிவத்தை
    த்வஷ்டா- பரமபுருஷன்
    விததத்- கல்பித்து
    ஏதி- எங்கும் வியாபகமாக செய்கிறார்.
    தத் புருஷஸ்ய – அந்த விராட்புருஷனுடைய
    விச்வம் – விஸ்வரூபம்
    அக்ரே – முதலில்
    ஆஜானம் – உண்டாயிற்று.
    ஸ்தூலமாகக் காணும் பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. ஸ்ருஷ்டிக்ரமத்தைப் பார்த்தால் பிரம்மம் மட்டும் முதலில் இருந்தது என்று உபநிஷத் கூறுகிறது. அதிலிருந்து முதலில் ஆகாசம் பிறகு வாயு, பிறகு அக்னி, பிறகு ஜலம் , கடைசியாக மண் அல்லது பூமி. ( இதைப் பற்றி விரிவாக பிரதமானுவாகம் மந்த்ரம் 2ல் காணலாம் )
    நீர் நிலம் இவைகளின் சிருஷ்டிக்கு அப்புறம் தான் ஸ்தூல பிரபஞ்சம் நம் கண்முன்னே விரிகிறது. இதைத்தான் 'அத்ப்ய: சம்பூத; ப்ருதிவ்யை ரஸாத் ச' என்பது கூறுகிறது. உலகத்தில் எல்லாமே நீரினாலும் நிலத்தின் சாரத்திலிருந்தும் தானே தோன்றுகின்றன.
    விஸ்வகர்மா, த்வஷ்டா என்ற சொற்கள் இங்கே பரமபுருஷனையே குறிப்பிடுகின்றன . 'விச்வகர்மா மனுஸ்த்வஷ்டா' என்ற நாமங்கள் விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் காணப்படுகின்றன.
    பரமபுருஷன் முதலில் விராட்புருஷனை
    தோற்றுவித்துப் பிறகு அவனுக்கு எங்கும் வியாபித்த விச்வரூபமாகிற ஸ்தூல வடிவம் கற்பிக்கிறார் . என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
    2. வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் | ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்| தமேவம் வித்வான் அம்ருதஸ்ய இஹ பவதி| நான்ய: பந்தா வித்யதே அயனாய ||
    ( இதற்குப் பொருள் பிரதம அனுவாக்த்தில் மந்திரம் 16, 17ல் பார்க்கலாம்.
    புருஷசூக்தம் - த்விதீய அனுவாகம்
    5. ருசம் ப்ராம்மம் ஜனயந்த்ய| தேவா அக்ரே ததப்ருவன் |
    யஸ்த்வைவம் ப்ராம்மணோ வித்யாத்|தஸ்ய தேவா அஸன் வசே|
    ப்ராம்மம் ருசம்- பரப்ரம்ம்த்தின் ஸ்வரூபத்தை
    ஜனயந்த்ய:-பரப்புகிறவர்களாய்
    அக்ரே – ஆதியில்
    தேவா: - தேவர்கள்
    தத் – அதைப்பற்றி
    அப்ருவன் – கூறினார்கள்.
    ய:து- எவனொருவன்
    ப்ராம்மணோ- பிரம்மத்தில் நாட்டம் உடையவன்
    ஏவம்- இவ்வாறு
    வித்யாத்- அறிவானோ
    தஸ்ய – அவனுக்கு
    தேவர்கள் – தேவர்களான இந்த்ரியங்கள்
    வசே அசன் – கட்டுப்பட்டு இருப்பார்கள்.
    பரப்ரம்ம ஸ்வரூபத்தை இவ்வாறு வர்ணித்திருப்பதையே தேவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பரப்ரம்ம ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறியும் ப்ரும்மஞானிக்கு தேவர்கள் என்று கூறப்படும் இந்த்ரியங்கள் கட்டுப்படுகின்றன. அதாவது இந்த்ரிய நிக்ரஹம் சாத்யமாகிறது.
    6. ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ|அஹோராத்ரே பார்ச்வே |
    நக்ஷத்ராணி ரூபம்| அஸ்விநௌ வ்யாத்தம்|
    ஹ்ரீஸ்ச – ஹரி தேவியும்
    லக்ஷ்மீ: ச – லக்ஷ்மி தேவியும்
    தே பத்ன்யௌ- உன்னுடைய பத்தினிகள்
    அஹோராத்ரே – இரவும் பகலும்
    பார்ச்வே – உன் பக்கங்கள்
    நக்ஷத்ராணி-நக்ஷத்ர மண்டலம்
    ரூபம் – உனது திருவுருவம்
    அஸ்விநௌ- அஸ்வினி தேவர்கள்
    வியாத்தம்,- உனது மலர்ந்த திருவாய்
    முடிவில் உள்ள ஸ்துதிபரமான மந்த்ரம் இது.
    ஹ்ரீ என்பது லஜ்ஜபீமாநீ தேவதா என்று சொல்லப்படும் அடக்கத்தைக் கொடுக்கும் சக்தி. ஸ்ரீ ஐஸ்வர்யாபீமாநீ தேவதா. ஐஸ்வர்யத்தைiக் கொடுக்கும் சக்தி. இவர்கள் உன்னுடைய பத்தினிகள் என்பது புருஷ ஸுக்தத்தின் ஆதி தேவதை நாராயணன் என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது பிரம்மஞானத்தை அடைந்தால் அதனுடன் சேர்ந்தே இருக்கும் அடக்கம் ஈஸ்வரபாவம் இவை இறைவன் அருளால் கிட்டும் என்றும் கொள்ளலாம்
    .
    இரவும் பகலும் என்பது த்வந்த்வம் எனப்படும் எதிர்ப்பதங்களை குறிக்கிறது. அவை உனது பக்கங்கள் என்றால் இரவும் பகலும் என்பது எவ்வாறு உண்மையில் இரண்டு இல்லையோ , அதாவது இருட்டு என்பது வெளிச்சம் இன்மை . இவை வெவ்வேறு அல்ல., என்பது போல் ப்ரம்மஸ்வரூபத்தில் இரண்டு என்பதே இல்லை என்று பொருள். ஏகமேவ அத்விதீயம்.
    நக்ஷத்த்ரங்கள் உன் உருவம் என்பது தேஜோமயமான ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. அஸ்விநீ தேவர்கள் ஸகல நலன்களையும் கொடுக்கும் தேவர்கள். அதைப்போல உன் திருமுகம் மலர்ந்து எல்லா நலங்களையும் அருளுகின்றது என்று பொருள்.
    7. இஷ்டம் மனிஷாண| அமும் மனிஷாண| ஸர்வம் மனிஷாண|
    இஷ்டம் – நாங்கள் விரும்பும் ஞானத்தை
    மனிஷாண- கொடுத்தருளும்
    அமும் – இவ்வுலக இன்பத்தை
    மனிஷாண- கொடுத்தருளும்
    ஸர்வம் –இகபரசுகத்தை
    மனிஷாண- கொடுத்தருளும்
    கடைசியில் பிரார்த்தனையுடன் இந்த சூக்தம் முடிவடைகிறது. இகம் பரம் இரண்டிற்கும் நலமான ஞானம் பிரார்த்திக்கப் படுகிறது.. இஷ்டம் அமும் சர்வம் என்னும் சொற்கள் சத் சித் ஆனந்தம் இவைகளைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பிரம்மத்தை அறிவது ஒன்றே எல்லாவற்றையும் அளிக்கக்கூடியது.
    ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
Working...
X