Announcement

Collapse
No announcement yet.

Sree bhasyam - Sri. PBA .Swamigal continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sree bhasyam - Sri. PBA .Swamigal continues

    Sree bhasyam - Sri. PBA .Swamigal
    continues
    இனி நான்காவது அத்யாயம் –
    உபாசனபரமாகச் சென்றது மூன்றாவது அதிகாரம்
    உபாசன பலனை நிரூபிக்க அவதரிக்கின்றது நான்காவது அத்யாயம்
    இதில் முதல் அதிகரணம் -ஆவ்த்த்யதிகரணம்
    மோஷத்துக்கு உபாய பூதமான பகவத் உபாசனம் அசக்ருதவ்ருத்தி ரூபம்
    அதாவது –
    தைலதாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் –
    விதிக்கப்பட்ட வேதனமானது
    அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபத்யாநத்வா வஸ்தையை யுடையது என்று
    சாஸ்திரம் சொல்லுகையாலே என்னும் பொருளான ஸூத்த்ரம்
    ஆவ்ருத்தி ரசக்ருது பதேசாத் –எனபது முதல் சூத்ரம் -4-3-1-
    இங்கு பூர்வ பஷம் –
    ஸ்வர்க்க சாதனமாக விதிக்கப் பட்ட யாகாதிகள்
    சக்ருத் காரணத்திலேயாய் எப்படி ஸ்வர்க்காதி பல சாதனம் ஆகிறதோ
    அப்படியே இங்கும்
    ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதிகளாலே மோஷ சாதனமாக விதிக்கப் பட்ட
    பகவத் அவிச்சின்ன ரூபமான வேதனமும்
    சக்ருத் அனுஷ்டானத்திலே மோஷ சாதனமாய் கூடும் ஆகையாலே
    அது ஒரு காலே செய்யப் பட வேண்டும் என்று –
    சித்தாந்தம் –
    வேதாந்த சாஸ்த்ரங்களில் மோஷ சாதனமாக சொல்லி வரும் அடைவுகளில்
    வேதனம் -உபாசனம் -த்யானம்= தருவா ஸ்ம்ருதி- சாஷாத்காரம் -பக்தி –
    என்கிற சப்தங்கள் காணப் படுகின்றன –
    இவை எல்லாம் பர்யாய பதங்கள் என்று நிச்சயிக்கப் படும் இடத்து
    தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
    ஆனது என்றே அறுதி இட வேண்டி இருக்கிறது
    ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-91-ஸ்லோகங்களும்
    கீதை -பக்த்யா த்வத் அன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன -இத்யாதி ஸ்லோகங்களும்
    இதையே உறுதி படுத்துகின்றன
    மேலே ஆறாவதாக ஆபரயாணாதிகரணம்-உள்ளது –
    ஆபரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -எனபது சூத்ரம்
    மோஷ சாதனமான ப்ரஹ்ம உபாசனம் ஆனது
    மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று
    அதில் நிகமிக்கப் படும்.
    ——————————————————————————————
    இனி
    தததிகமாதிகரணத்தின் பிரமேயம் –
    சூத்ரம் –
    தத்திகம உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத் –
    ப்ரஹ்மா வித்யா நிஷ்டனுக்கு சாஷாத் கார அவஸ்தையை அடைந்த ப்ரஹ்ம வித்யா நிஷ்பத்தி உண்டாகும் அளவில்
    ப்ரஹ்ம வித்யா மகிமையினாலே
    பூர்வ பாவங்களுக்கு வி நாசமும்
    உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும்
    ஸ்ருதிகளிலே அப்படி சொல்லி இருப்பதனாலே -எனபது சூத்தரார்த்தம்
    ப்ரஹ்ம ஞானத்துக்கு முன்பு செய்த பாபங்கள் நசித்துப் போய் விடும்
    பிறகு அபுத்தி பூர்வகமாக நேரும் பாபங்கள் தாமரை இலையிலே தண்ணீர் போல ஓட்ட மாட்டா -என்றபடி
    சந்தோக்ய சுருதியிலே உபகோசல வித்யா பிரகரணத்திலேயும்
    அவ்விடத்திலேயே வைச்வா நர வித்யா பிரகர்ணத்திலேயும்
    ப்ரஹ்ம வித்யையின் பலன் சொல்லப் பட்டு இருக்கின்றது –
    ஆகையால் உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும்
    பூர்வ பாவங்களுக்கு விநாசமும் சொல்லப் படுகிறது -என்கை
    இங்கு பூர்வ பஷம் –
    ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்று
    பலனை அனுபவித்தே கருமங்களை தொலைக்க வேணும் என்று ப்ரஹ்ம வைவர்த்தத்தில்
    சொல்லி இருக்கையாலே கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேணும்
    ப்ரஹ்ம விதயையினாலேயே கர்மங்கள் தீர்ந்து போவதாகச் சொல்வது பிரசம்சாபரமான வார்த்தையாம் இத்தனை என்று-
    சித்தாந்தம் –
    பூர்வ பாபங்களுக்கு விநாசமும்
    உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும்
    ப்ரஹ்ம வித்யா பிரபாவத்தாலே நேருவதாக பல உபநிஷத்துக்கள் கூறி இருப்பது அப லபிக்க முடியாதது –
    நா புக்தம் ஷீயதே கர்ம –என்ற வசனமும் உக்தமானதே
    அது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாத சாமான்யர் விஷயமாக ஒதுக்கத் தகும்
    ஆகவே பரஸ்பரம் அவிருத்தங்களான வசனங்களேயாம்
    நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீரும் -என்று ஒருவன் சொல்லுகிறான்
    பற்றி ஏற்கிற நெருப்பை தண்ணீர் அணைத்தே தீரும் -என்று மற்று ஒருவன் சொல்லுகிறான்
    இவற்றில் பரஸ்பர விரோதம் சிறிது ஏதேனும் உண்டோ
    தண்ணீர் இல்லையானால் படர்ந்து எரிகிற தண்ணீர் வீட்டை கொளுத்தியே தீரும் -என்றும்
    தண்ணீரை இட்டு அணைத்தால் நெருப்பு ஓய்ந்து விடும் என்றும் அர்த்தமாக வில்லையோ
    அது போலே
    ப்ரஹ்ம வித்யை இல்லாத அளவில் கர்மங்கள் பலனைக் கொடுத்தே தீரும் என்றும்
    ப்ரஹ்ம வித்யை உண்டாகில் கருமங்களின் சக்தி பிரதிஹதமாய் விடும் என்றும்
    எளிதாக அர்த்தம் ஆகும் அன்றோ —
    ——————————————————————————————–
    இனி
    நிசாதி கரணத்தைப் பற்றி பேசுவோம்
    ஒரே சூத்தரம் கொண்டது இந்த அதிகரணம்
    இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது
    நிசி மரணத்தைப் பற்றி சாஸ்த்ரங்களில் இழிவாக சொல்லப் பட்டு இருக்கையாலே
    பரம புருஷார்த்தமான மோஷமானது சம்பவிக்க மாட்டாது
    பகலில் மரணமே சாஸ்த்ரங்களில் பிரசச்தமாக காண்கிறது
    நிசா மரணம் இதுக்கு விபரீதமானது
    ஸ்பஷ்டமாக சாஸ்திரம் சொல்லி இருப்பதால் அதமகதிக்கே ஹேதுவாகும்
    இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி சம்பவிக்க மாட்டாது -இது பூர்வ பஷம்
    சித்தாந்தம் –
    ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் உள்ள வரைக்குமே யாதலால்
    நிசி மரணம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு பாதகம் ஆகமாட்டாது –
    பாக கர்மங்கள்
    ஆரப்த கார்யங்கள் என்றும்
    அநாரப்த கார்யங்கள் என்றும்
    இரு வகைப்படும்
    இன்னமும்
    பூர்வ பாபங்கள் என்றும்
    உத்தர பாபங்கள் என்றும்
    இருவகைப்படும்
    பலன் கொடுக்கத் தொடக்கி விட்ட கருமங்கள் ஆரப்த கார்யங்கள் -இவையே பிராரப்த கர்மம் எனப்படும்
    பலன் கொடுக்கத் தொடங்காத தீ வினைகள் அநாரப்த கார்யங்கள் –சஞ்சித கர்மமும் இதுவே
    ப்ரஹ்ம வித்யை சம்பாதிப்பதற்கு முன்னே செய்யப் படும்
    பாபங்கள் பூர்வ பாபங்கள்
    அதற்க்கு பின்பு புத்தி பூர்வகமான பாபங்கள் நேருவதற்கு பிரசக்தி இல்லாமையாலே
    அபுத்தி பூர்வகமாகவும் அகதிகதமாகவும் நெருமாவை உத்தர பாபம்
    இவற்றுள்
    அநாரப்த கார்யங்களான கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை சம்பந்தம் உண்டான அன்றே தொலைந்து போயின வாதலாலும்
    உத்தர பாபங்கள் ப்ரஹ்ம வித்துக்களின் இடத்தில் ஓட்ட மாட்டா என்று சொல்லப் படுகையாலும்
    பிராரப்த கர்மம் ஒன்றே செஷித்து நிற்கிறது
    அக்கர்மம் கர்ம தேகத்தோடு கழியும் ஆதலால் பந்த ஹேது வாக மாட்டாது
    ஆகவே ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணம் நேர்ந்தாலும்
    பரம புருஷார்த்தமான
    ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்றதாயிற்று
    திவா ச சுக்ல பஷ ச -என்று கீழே காட்டின வசனம்
    ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார் விஷயம் என்றதாயிற்று-
    ———————————————————————————————–
    -இனி
    தஷிணாயநாதி கரணம் –
    இதிலும் ஒரே சூத்திரம்
    நிதி மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்று
    முதிய அதிகரணத்தில் சொன்ன ஹேது
    அந்த ஹேதுவினாலேயே தஷிணாயனத்தில் மரணம் அடைந்ததற்கும் குறை இல்லை என்ற தாயிற்று
    ஆனாலும் இதில் அதிகப் படியான சங்கை –
    தைத்ரிய உபநிஷத்தில் தஷிணாய னத்தில் மரணம் அடைந்ததற்கு சந்திர பிராப்தி சொல்லப் படுகிறது
    சந்திர பிராப்தி பெற்றவர்களுக்கு புனராவ்ருத்தியும் சொல்லப் படுகிறது
    பீஷ்மர் முதலான சில ப்ரஹ்ம வித்துக்களும் உத்தராயண ப்ரதீஷை பண்ணினதாகத் தெரிய வருகிறது
    இதற்க்கு பரிஹாரம் ஆவது
    சந்திர பிராப்தியினால் புநரா வ்ருத்தி எனபது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார்க்கு ஒழிய
    ப்ரஹ்ம வித்துக்களுக்கு அன்று
    ப்ரஹ்ம வித்துக்களுக்கு சந்திர பிராப்தி இளைப்பாறும் ஸ்தானம் அத்தனை
    ப்ரஹ்ம பிராப்தி அவர்ஜநீயமாகவே தேறும்
    பீஷ்மர் மது வித்யா நிஷ்டர்
    மது வித்யா ப்ரபாவத்தினால் ஸ்வ சந்த மரணத்வம் உள்ளது
    ஆனாலும் உத்தரயாணத்தின் மேன்மையைக் காட்ட வேண்டியும்
    அவர் உத்தராயண தீஷிதை பண்ணின அளவில்
    தஷிணாயத்தினில் மரணம் அடைந்தவர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தியில் கண் அழிவு சொல்ல முடியாது
    ஆக
    இவ்வளவால்
    ப்ரஹ்ம வித்துக்களுக்கு
    நிசி மரணமோ
    கிருஷ்ண பஷ மரணமோ
    தஷிணாய மரணமோ
    நேர்ந்தாலும் கூட பர புருஷ பிராப்தியில் குறை இல்லை என்றதாயிற்று –
    ——————————————————————————————–
    இனி முடிவான அதிகரணத்தில் -ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம் –
    முக்த புருஷனுக்கு ஜகத் சிருஷ்டியில் அதிகாரம் இல்லை என்பதும்
    பரமபதத்தின் நின்றும் மீட்சி இல்லை என்பதும்
    இவ் வதிகரணத்தில் தெரிவிக்கப் படுகின்றன –
    முக்தன் உடைய ஐஸ்வர்யம் ஜகன் நியமனத்தை தவிர்த்தேயாம்
    ஏன் என்னில்
    பர ப்ரஹ்மத்தை குறித்துச் சொல்லும் பிரகரணங்களிலேயே
    ஜகத் சிருஷ்டி முதலானவற்றை சொல்லி இருக்கிற படியாலும்
    அவற்றைச் சொல்லும் பிரகரணங்களிலே ஜீவன் ப்ரஸ்துதம் இல்லாமையாலும் -என்பதாம் –
    பூர்வ பஷம் –
    முண்டக உபநிஷத்தில் முக்தனுக்கு பர ப்ரஹ்மத்தோடு சாம்யம் ஓதப்படுகிறது –
    சாந்தோக்ய உபநிஷத்தில் முக்த புருஷனுக்கு சத்யா சங்கல்பத்வமும் ஒத்தப் படுகிறது
    இவ்விரண்டும் முக்தனுக்கு ஜகத் நியாமகத்வ ரூபமான ஜகத் ஈச்வரத்வம் இருந்தால் ஒழிய பொருந்த மாட்டாது
    முக்தனைப் பற்றி ஓதும் இடங்களில்
    சர்வ லோக சஞ்சாரமும் காமான் நித்வமும் காம ரூபித்வமும் பொருந்துகின்றன
    சர்வ லோக சஞ்சாரம் எனபது -சர்வ லோக நியமனத்தக்கு தானே
    அது தவிர மற்ற ஒரு பலனும் தருகின்றது இல்லை யாகையாலே ஜகன் நியமனம் முக்தனுக்கு சித்தித்தே தீரும்
    காமான் நித்வாதிகள் சொன்ன போதே லோகங்கள் அவனுக்கு ஆதீனம் எனபது தேறி நிற்கும்
    முக்தனுக்கு சர்வ லோக சஞ்சாரம் அங்கு உள்ள போகங்களை அனுபவிக்க தான்
    உலகங்களை நியமிக்க இல்லை என்றால்
    அதுவும் சொல்ல முடியாது
    விகாராச்பதங்கள் ஆகையாலே ஹேயங்களாய் இருக்கும் லோகங்களையும்
    அவற்றில் உள்ள பொருள்களையும் போகங்களாக கொள்ள பிரசக்தி இல்லை
    அவை ஹேயங்கள் ஆனாலும் பரம புருஷன் விபூதி யாகையாலே அவற்றில் போக்யதா புத்தி சம்பவிக்கலாம் ஆகையாலே
    அவற்றை புஜிக்கைகாகவே சஞ்சாரம் பிராப்தம் என்னும் வாதமும் ஒவ்வாது –
    சாந்தோக்யத்தில் – ஸ ஸ்வராட் பவதி -என்று ஸ்பஷ்டமாக சொல்லி இருக்கையாலே
    முதனுக்கு வேறு யாரும் அதிபதி அல்ல
    அதனால் பர ப்ரஹ்ம விபூதிகளை அனுபவிக்க சஞ்சாரம் என்பதும் பொருந்தாது
    அது நியமன அர்த்தமாக்கத் தான்
    ஆகவே முக்தனுக்கு ஜகத் வியாபாரமும் உண்டு -இது பூர்வ பஷம்
    இனி சித்தாந்தம் –
    யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -இத்யாதி சுருதியால்
    ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ரூபமான நியாமகத்வத்தை
    பர ப்ரஹ்ம லஷணமாக சொல்லி இருக்கையாலே
    அது பர ப்ரஹ்மத்துக்கு அசாதாராணம் ஆனது -எனபது விளங்குகிறது
    அசாதாராணமான தர்மமே லஷணமாக இருக்க முடியும்
    ஆகவு இது முக்தனுக்கு சம்பவிக்க மாட்டாது
    மற்றையோர்க்கு நியாமகத்வம் இல்லை என்று ஸ்ருதிகள் ஸ்பஷ்டமாக சொல்லுமே
    பரமம் சாம்யம் உபைதி -என்று
    வெறும் சாம்யம் இல்லாமல் பரம சாம்யா பத்தி சொல்லி இருக்கையாலே
    இவனுக்கு உள்ளது எல்லாம் இவனுக்கும் பிராப்தம் ஆனால் ஒழிய பரம சாம்யா பத்தி வாராது என்னில்
    வித்வான் புண்யே பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்ற சொல் செறிவால் கிடைப்பது
    வித்யா சாத்தியமான யாதொரு புண்ய பாப விது நனம் உண்டோ அதனால் ஆகும் பலனில் சாம்யம் என்றதாயிற்று
    வித்யை எனபது ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தகமான
    புண்ணிய பாப கர்மத்துக்கு பிராயச் சித்தம் ஆனது –
    ஏவஞ்ச புண்ய பாப கர்ம விதூ நன சாத்திய மான பலன் ப்ரஹ்ம அனுபவமே என்று தேறிற்று
    அதில் தான் சாம்யம் விவஷிதம் ஆகும்
    முன்னே பரம புருஷ பிரஸ்தாபம் இருக்கையாலே அவனோடு தான் சாம்யம் என்று நிச்சயிக்கப் படுகிறது
    இந்த சாம்யத்தில் பாரம்யமாவது ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
    தத் குணங்களிலும்
    தத் விபூதிகளிலும்
    ஏக தேசத்தையும் விடாமல் பூர்த்தியாக அனுபவிப்பதே யாம்
    ஆக
    சமஸ்த கல்யாண குண விபூதி விசிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தில் சாம்யம் -என்னும் இடம் தேறுகிறது
    ஆக முக்தனுக்கு பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் சித்தித்த போது ஆனந்த சாம்யமும் இந்த ஸ்ருதியினாலே சித்தம்
    ஸ ஸ்வராட் பவதி -என்றதும்
    கர்ம வச்யத்தை இல்லாமையைச் சொல்லிற்று
    ஏஷ ஹ்யேவா நந்தயாதி -இத்யாதிகளாலே
    முக்தனுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம் பரம புருஷ அதீனம் என்று தேறுகையாலும்
    முக்தனுக்கு சத்ய சங்கல்பத்வம் இயற்கையாய் இருந்தாலும்
    கருமங்களினால் மறைந்து இருந்த அது
    பரம புருஷனுடைய அனுக்ரஹத்தாலேயே ஆவிர்பவிப்பதாக ஒதுகையாலும்
    முக்த ஐஸ்வர்யம் முழுவதும் பகவத் இச்சா அதீனமாய் அறுகையால்
    பரம புருஷனுடைய அசாதாரண ஜகன் நியமன ரூப ஐஸ்வர்யம் முக்தனுக்கு இல்லை என்று முடிந்தது-
    ———————————————————————————————-
    இப்படி முக்தன் உடைய ஐஸ்வர்யம் பரம புருஷன் அதீனம் ஆகில்
    அவன் ஸ்வ தச்ந்த்ரன் ஆகையாலே தன சங்கல்பத்தாலே
    ஒரு சமயம் முக்தனை
    பரம பதத்தில் நின்றும் திருப்பி அனுப்ப கூடும் ஆகையாலே
    மோஷ புருஷார்த்தமும் அநித்தியமாக வேண்டி வரும் சங்கையில்
    அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்-சரம சூத்தரம் அவதரிக்கிறது
    அனந்யா சித்தமான சுருதி வாக்யங்களைக் கொண்டே அறியக் கடவதான பொருளை
    சாஸ்திரம் சொன்ன படியே தான் அறிய வேண்டும்
    பரம புருஷன் உளன் என்பதை எதை கொண்டு அறிகிறோமே அதே சாஸ்திரம் முக்தர்களுக்கு மீட்சி இல்லை என்பதையும் அறிவிகின்றது
    அவனோ ஸ்வ தந்த்ரன்
    சாஸ்திரம் மீறியும் கார்யம் செய்ய வல்லவன்
    அசக்தன் அல்லன்
    அவன் செய்யப் புக்கால் சாஸ்திரம் குறுக்கே நிற்குமோ
    ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கத்திகளைக் கொண்டே இங்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்கிறார்
    அவன் ஸ்வ தந்த்ரன் ஆகிலும்
    உன்மத்தன் அல்லன்
    மூர்க்கன் அல்லன்
    அரசிகன் அல்லன்
    சத்ய சங்கல்பன் என்று பேர் பெற்றவன்
    தன்னுடைய மநோ ரத்தத்துக்கு மாறுபாடாக நடந்து கொள்பவன் அல்லன்
    ஒரு சேதனனை பெறுகைக்கு எப்பாடு பட்டான்
    எவ்வளவு கிருஷி பண்ணுகிறான்
    அவன் சிருஷ்டி பண்ணுவதும் அவதரிப்பதும் சேதனர்களை லபிக்கைக்கு அன்றோ
    தவப் பயனாக லபித்த பின்பும் இழப்பனோ –
    பரம புருஷம் ஜ்ஞாநினம் லப்த்வா -என்ற ஸ்ரீ ஸூ கதி
    யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன்
    தானொட்டி வந்து என் தனி நெஞ்சு வஞ்சித்து
    ஊனொட்டி நின்று என் உயிருள் கலந்து இயல்
    வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
    வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
    ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
    தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் '
    காட்கரை அப்பன் கடியனே –
    இந்த திவ்யார்த்த சௌரபத்தோடு ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளுகிறார் –
    ——————————————————————————————
    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Working...
X