Announcement

Collapse
No announcement yet.

Sree bhasyam - Sri. PBA .Swamigal continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sree bhasyam - Sri. PBA .Swamigal continues

    Sree bhasyam - Sri. PBA .Swamigal
    continues
    இனி -நான்காவது சமன்வயாதிகரணம் –
    ஸூத்த்ரம் -தத் து சமன்வயாத்
    தத் -கீழ் சொல்லப்பட்ட சாஸ்திர பிரமாணகதவம்
    சமன்வயாத் -நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியில் –
    பூர்வபஷம் –
    தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் உண்டாக வேணுமே
    பிரயோஜனத்வத்தில் தான் அந்த விருப்பம் உண்டாகும்
    இஷ்ட பிராப்தி -பிரவர்த்தியாலும் –யாகம் -ஸ்வர்க்கம் கொடுப்பது போலே –
    அநிஷ்ட பரிகாரம் -நிவ்ருத்தி யாலும்
    வஸ்துவே கண்ணுக்கு தெரியாமையால் பிரயோஜனத்வம் சொல்ல முடியாதே –
    சித்தாந்தம் –
    வேதாந்த வாக்யங்கள் பலவும்
    அது தான் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்று சொல்வதால்
    பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -21-
    அத்ராச்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்லோகம் -அனுசந்தேயம்
    ————————————————————————————–
    இந்த நான்கு அதிகரண்ங்களும் -நான்கு ஸூ த்த்ரங்கள்
    சதுஸ் ஸூத்ரி -என்று வழங்கப்படும்
    சாஸ்திரம் ஆரம்பிக்க அவசியம் இல்லை என்பதை நிரசித்து
    இனி மேல் சாஸ்திரம் ஆரம்பிக்கிறது –
    ———————————————————————————–
    ஈஷத் அதிகரணம் -1-1-5–இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு
    சங்கல்ப விசேஷம் ஓதப்பட்டு உள்ளது
    அந்த சங்கல்பம் கௌணம் அன்றிக்கே முக்கியமாக நிர்வகிக்க வேண்டி இருப்பதால்
    அப்படிப் பட்ட சங்கல்பத்துக்கு ஆஸ்ரய பூதமான ஜகத் காரண வஸ்து
    அசேதனமான பிரதானமாய் இருக்க முடியாது என்று நிரூபிக்கப் படுகிறது
    அசேதனம் இல்லாமல் ஜீவனே ஜகத் காரணம் என்றால் என்ன -என்பதற்கு
    பரிகாரமாக
    அடுத்த அதிகரணம் அவதரிக்கின்றது –
    ———————————————————————————
    ஆனந்த மய அதிகரணம்
    இதில் தலையான ஸூத்த்ரம் -ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
    இதற்கு மேல் உள்ள அந்தர் அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்ரம்-பேத வ்யபதே சாச்சான்ய-என்கிற ஸூத்த்ரத்திலே
    இருந்து அத்ய -பதம் எடுத்துஆனந்த மய அத்ய அப்யாசாத் -என்றதாயிற்று
    ஆனந்த மய -ஆனந்த மய சப்தத்தால் குறிக்கப் பட்ட புருஷன்
    அத்ய -ஜீவாத்மாவில் காட்டிலும் வேறு பட்ட பரமாத்வாகவே ஆகக் கடவன்
    ஏன் என்னில்–அப்யாசாத் -அளவு கடந்ததாக ஓதப்பட்ட ஆனந்தம் உடைமை -என்பதாலே
    தைத்திர உபநிஷத் ஆனந்த வல்லி-
    தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்கிற வாக்யத்தினால்
    ஆனந்தமயமான ஆத்மாவை பிரஸ்தாபித்து –
    அதுக்கு மேலே –
    சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி -என்று தொடங்கி
    தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய -என்னும் அளவாக
    ஆனந்த மயமான ஆத்மாவுக்கு உள்ள ஆனந்த அளவு கூறும் அடைவில்
    ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் பண்ணினவன் -முக்தன் -அவனுக்கும் அப்படிப் பட்ட 100 மடங்கு நான் முகனை விட -ஆனந்தம்
    அகாமஹத –விஷய விரக்தன் -என்றபடி
    முக்தானந்தம் சோபாதிகம்-நிருபாதிகம் அன்று
    ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -காரணம் ஒன்றும் சொல்லப் பட வில்லை
    நிருபாதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே -என்றதாயிற்று–
    ஆனந்த வல்லியை -ஆனந்த மய வித்யா -என்பர் வேதாந்திகள் -அந்த வித்தையில் –
    கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
    என்று ஒதப்படுகிறது –
    இதன் பொருளாவது
    கீழே சொல்லப் பட்ட ஆகாச சப்த வாச்யமான வஸ்து
    நிருபாதிகமாயும் அபரிச்சின்ன ஆனந்தம் உடையதாய் அல்லாமல் இருக்குமானால்
    கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
    கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் –
    ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ
    உத்தர நாராயண அனுவாகத்திலும் –
    தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
    நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதனாலும்
    இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகின்றது
    ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக அம மகா புருஷனை உபாசிக்கிறவன்
    அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தத்தைப் பெற்றவன் ஆகிறான்
    அயனாய -அந்த மோஷ ஆனந்த பிராப்தியின் பொருட்டு
    அந்ய பந்தா ந விந்த்யதே -அந்த மகா புருஷனைத் தவிர்ந்து வேறு ஒரு உபாயம் இல்லை –
    ஏஷஹயே வா நந்தயாதி -என்கிற சுருதி வாக்யத்தில் அன்வயன முகேன தெரிவிக்கப் பட்ட அர்த்தமே
    நான்ய பந்தா வித்யதே அயனாய -என்று வ்யதிரேக முகத்தாலே தெரிவிக்கப் பட்டது
    உபய ஸ்ருதிகளும் ஏக அர்த்தம்
    லஷ்மி பதியே விஷய பூதன் –
    இன்னமும் ஆனந்த மய வித்யையில்-
    ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்கிற வாக்யத்தினாலே
    ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ள
    புண்டரீ காஷனையும் ஒன்றாக சொல்லி இருப்பதால்
    ஆனந்த மய வித்யாவேத்யனும் புண்டரீ காஷனும் ஆனவன்
    பரம புருஷனே -என்ற அர்த்தம் தேறிய படி-
    பூர்வ பஷம்-
    ஆனந்த வல்லியில் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
    சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று அந்த ப்ரஹ்மம் லஷணம் கூறி
    தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மன ஆகாசஸ் சம்பூத -இத்யாதி
    வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா என்னும் இடத்தையும்
    அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியும் சொல்லி
    தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் –அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்ற அளவால்
    உபாக்ராந்தமான ஆத்மா உபதேச பரம்பரை யானது ஆனந்தமயனில் சமாப்தி செய்யப் பட்டு இருக்கிறது –
    ஆகையால் உபக்ரமித்த ப்ரஹ்மம் ஆனந்தமயமான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது –
    அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு -தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்ற உத்தர வாக்யத்தில்
    சரீர சம்பந்தித்வம் ஆகிற சாரீரத்வம் சொல்லப் பட்டு இருக்கிறது
    கர்ம பரவசனான ஜீவாத்மாவுக்க்கே கர்மபல அனுவர்த்தமாக சரீர சம்பந்தம் சம்பவிக்கும்
    அகரமா வச்யனான பரம புருஷனுக்கு சம்பவிக்க நியாயம் இல்லை
    ஆகவே ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா தான் என்னும் இடம் சித்தம் –
    சித்தாந்தம் –
    நிருபாதிக ஆனந்தம் உடைமை பரமாத்வுக்கு மட்டுமே –
    சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் அவன் என்று ஒத்தப் படுவதாலும்
    ஆனந்தமயம் -மய பிரத்யகம் விகாரம் அர்த்தம் ஆகையாலே
    விகாரம் அற்றவன் -பரமாத்வாவுக்கே
    அன்ன மய யஞ்ஞா -இங்கே மயம்-ப்ராசுர்யம் -மலிவு என்றே பொருள்
    அன்னம் மலிந்த வேள்வி
    இங்கும் ஆனந்தம் மலிந்த பரமாத்மா -என்பதால் விகார வாதம் அப்ரசித்தம் –
    அடுத்த படியாக
    யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நிபிபேதி குதச்சன-என்று
    வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாதபடி அப்ரமேயமான ஆனந்தம்
    உடையவனாக ஓதப்பட்ட பரமாத்மாவின் இடத்தில் அன்றோ
    மலிந்த ஆனந்தம் உடைமை தேறக் கடவது –
    மேலும் ஒரு வாதம்
    ஆனந்த பிராசுர்யம் -என்றால் துக்கம் சிறிது உண்டு என்றும் தோற்றும் இல்லையா
    எத்தைக் காட்டிலும் ஆதிக்யம் என்னும் பொழுது
    ஏவஞ்ச அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் -என்னப் படுகிற
    பர ப்ரஹ்மம் இடத்தில் ப்ரசுர்ய ஆனந்த சாலித்வம் என்று
    பரிஷ்கரிக்கப் பட்ட ஆனந்த மயத்வம் சொல்லுவதற்கு இல்லை என்பதாக –
    இதுவும் பிசகு –
    அந்த ஆனந்த ப்ரசுர்யத்தை விவரிக்கப் புகுந்த
    சைஷா ஆனந்தச்ய மீமாம்சா பவதி -இத்யாதி ஆனந்த மீமாம்சையில்
    தே ஏ சதம் பிரஜாபதிர் ஆனந்தா -என்னும் அளவாக பிரஸ்தாபிக்கப் பட்ட
    சதுர்முக பரிந்த சகல ஜீவர்கள் ஆனந்தத்தைக் காட்டிலும்
    நூறு மடங்கு அதிகமாய் இருக்கை யாகிற ஆனந்தமய பிரசுர்யமே
    விவஷிதமாக விவரித்து இருக்கையாலே
    துக்க சம்பந்தம் பிரசங்கிக்க விரகு இல்லை-
    தயாளு
    அடியார் துக்கம் கண்டு தானும் துக்கிப்பது தயாளுத்வம்
    இப்படி துக்கம் உண்டு என்றால் ஆனந்த மயத்வம் கொள்ள இடம் இல்லையே என்ற சங்கை தோன்ற
    இந்த அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்த்ரத்தில்
    விகார சப்தான் நேதி சேனன ப்ராசுர்யாத் –
    இதற்க்கு
    ஸ்ரீ பாஷ்யத்தில்
    அபஹதபாப்மா -விஜரோ விம்ருத்யுர் விசோக- ஸ்ருதி வாக்யத்தை எடுத்துக் காட்டி
    பாபம் செய்தாலும் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சம் உண்டாக பெறாதவன்
    அதே போலே சோகம் உண்டானாலும் அதன் பலனான ஹேய ஸ்பர்சம் உண்டாகப் பெறாதவன்
    குணங்களில் சிறந்ததான சோகம் என்பதே ஆகும்
    —————————————————————————————
    7-அந்தரதிகரணம் –
    அந்தஸ் தத்தர்மோ பதேசாத் –1-1-21-
    இதில் மேல் உள்ள -பேத வ்யபேதேசாச்ச அந்ய-என்கிற சூத்ரத்தில் இருந்து அந்ய பதம் தருவித்திக் கொண்டு
    அந்த -ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உறையும் புருஷன்
    அந்ய -ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரம புருஷன்
    தத்தர்மோ பதேசாத் -அந்த பரம புருஷனுக்கு உள்ள அசாதாராணமான தர்மங்களை ஓதி இருப்பதனாலே –
    சாந்தோக்யம் -அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
    அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
    தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
    ஸூ பால உபநிஷத் –ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண –
    புருஷ சூக்தம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி –
    இவற்றால் ஆதித்ய மண்டலத்தின் உள்ளுறையும் புருஷன் பரம புருஷன் என்று நிர்ணயிக்கப் படுகிறது –
    சாரீர சப்தம் பரம புருஷனுக்கு சம்பவிக்காதே பூர்வ பாஷம்
    சித்தாந்தம் -தஹர வித்யா பிரகரணம் -ந ஸூ கருத்தும் ந துஷ்க்ருதம் சர்வே பாபமா நோ நோ நிவர்த்தந்தே அபஹதபாப்மா
    ஹ்யேஷ ப்ரஹ்ம லோக -என்று சொன்னதையே இங்கு -ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித -என்பதால் கர்மம் சம்பந்தம் இல்லாத
    வியக்தியே ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ளதாக ஸ்பஷ்டம்
    ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் -என்கிற படி ஸ்வ இச்சியினால் பரிக்ரஹிக்கப் பட்ட அப்ராக்ருதமான சரீஎரம் உடையவன் என்றதாயிற்று
    சாது பரித்ரானம் ஏவ உத்தேச்யம் -ஆநு ஷங்கி கஸ்து துஷ்க்ருதாம் வி நாச -சங்கல்ப மாத்ரேணாபி ததுபபத்தே –
    மழுங்காத வை நுதிய –தொழும் காதல் களிறு அளிப்பான் —-இத்யாதி கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் உடைய இந்த ஸ்ரீ ஸூக்திகள்-
    அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்யச் சரீரம் யா –ஆதித்ய மாந்தரோ யமயதி -என்றும்
    யஸ் சர்வேஷூ தேஷு திஷ்டன் -என்றும் அனைவரையும் நியமிப்பவனாக சொல்லி இருப்பதால்
    இது ஆத்மாவைக் குறிக்காது பரம புருஷனை தான் குறிக்கும் என்றதாயிற்று
    ————————-
    ஜ்யோதிர் அதிகரண சித்தாந்தம்
    சாந்தோக்யம் -அத யத்த பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே -என்ற இடத்துக்கு முன்னர் -பாதோச்ய சர்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி
    -என்பதால் பர ப்ரஹ்மமே இந்த ஜ்யோதிஸ் ஆகும் –
    சாந்தோக்யத்தில் காயத்ரீ வா இதம் சர்வம் —என்று பிரஸ்தாபித்து -ததேதத் ருசாப் யுக்தம் -என்றதால் -பூதம் பிருத்வி சரீரம் ஹிருதயம்
    நான்கையும் நான்கு பாதங்களாக உடையவாக சொல்லிருப்பதால் காயத்ரீக்கு சமானமான பர ப்ரஹ்மமே சொல்லப் பட்டது –
    நான்கு பாதங்கள் என்பதாலே சாம்யம்
    இதே போலே -தேவா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே -என்று தொடங்கி சைஷா விராட் -என்று –
    அக்னி சூர்ய ஜல சந்திர வாயு வாக் சஷூஸ் ச்ரோத்ர மனஸ் பிராணன்கள் ஆகிற பத்து வஸ்துக்களின் –
    பத்து அஷரங்கள் கொண்ட சந்தஸ்க்கு வாசகமான விராட் சப்த பிரயோகம் போலே –
    திவா பரோ ஜ்யோதி -தயு லோகத்துக்கு அப்பால் பட்டது த்யுலோக சம்பந்தியும் ஒன்றாக இருக்கக் கூடுமோ -என்னில்
    -மரத்தின் நுனியில் பறவை -நுனிக்கு அப்பால் பறவை இரண்டும் சொல்வது போலே
    ——————————————————————
    8-ஆகாசாதி கரணம்
    ஆகாசஸ் தல் லிங்காத்–1-1-23-
    இதிலும் பேத வ்யபதேச்ச அந்ய -இருந்து அந்ய சப்தம் தருவித்துக் கொள்ள வேண்டும்
    சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே -என்கிற இடத்தில் ஆகாச சப்தத்தினால் சொல்லப் படுபவன்
    அந்ய -பூத ஆகாசத்தில் காட்டிலும் வேறு பட்டவன் -ஏன் என்னில்
    தல் லிங்காத் -அசாதாரணமான லிங்கம் ஸ்ருதமாய் இருப்பதினால் என்றவாறு
    சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே ஆகாசம் பிரத்யச்தம் யந்தி ஆகாசோ ஹ்யேவ ஏப்யோ ஜ்யாயாத் ஆகாச பராயணம் -என்று
    ஆகாசம் சர்வ பூத உத்பத்தி லய காரனத்வமும் சர்வ ஸ்மாத் ஜ்யேஷ்டத்வமும் பராயணத்வம் சொல்லப் படுகின்றன
    நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே –விஸ்வத பரமம் நித்யம் விச்வம் நாராயணம் ஹரிம் -நாராயணம் மஹாஜ் ஞேயம்
    விச்ச்வாத்மானம் பராயணம் –என்பதால் பரம புருஷனையே குறிக்கும்
    ————————————-
    இந்திர பிராண அதிகரணம்
    பிராணஸ் தத் அநு கமாத் -1-1-29-
    பிராண சப்தம் இந்த்ரனுக்கும் உப லஷணம்
    கௌஷீ தகி உபநிஷத் – பிராணோச்மி பிரஜ்ஞாத்மா தம் மாம் ஆயுரம்ருதம் இதி உபாஸ்வ -என்று
    தன்னையே உபாசிக்க ப்ரதர்னனுக்கு உபதேசித்து
    ச ஏஷ பிரஜ்ஞாத்மா ஆனந்தோ ஜரோம்ருத -ச ன் சாதுநா கர்மணா பூயான்னோ எவாசாதுனா கர்மணா கநீயான் -என்றவை
    பர ப்ரஹ்மம் இடமே சம்பவிக்கும்
    தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் -என்றும்
    யமாத்மா நமந்தரோ யமயதி -என்றும் அந்தர்யாமி ப்ராஹ்மண ஸ்ருதியின் படி இந்திர பிராண சாரீரகனான பரமாத்மாகவே இருக்கத் தக்கது
    ———————————————————-
    தேவதாதிகரணம் –
    பரம புருஷன் உபாசனத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர் போலே அதிகாரம் தடை அற்றது என்கிறது
    தத் உபர்யபி பாதராயணஸ் சம்பவத் –1-3-25
    அர்த்தித்வ சாமர்த்தியங்கள் -வேணும் என்னும் அபேஷையும் அதற்கு உண்ட ஆற்றலும்
    இதில் ஸூத்ரனுக்கு அதிகாரம் உண்டோ என்னும் சங்கை தீர்க்க
    அபசூத்ராதிகரணம் -பிறந்தது
    சு கஸ்ய தத நாதர ச்ரவணாத் ததாத்ரவணாத் ஸூ ச்யதே ஹி –1-3-33-
    தஸ்மாத் சூத்ரோ யஜ்ஞ்ஞே அனவகல்ப்த-என்று யஜ்ஞ்ஞாத்தில் ஸூத்ரனுக்கு அதிகாரம் இல்லை என்றது வேதம் –
    ஆனால் கர்ம அனுஷ்டானங்கள் ஸ்ரவண மானச உபாசனங்கள் உண்டே -அது இல்லை என்று மறுக்கப் படுகிறது இந்த அதிகரணத்தில் –
    அபேஷை இருந்தாலும் சாமர்த்தியம் இல்லாததால் -என்கிறது
    சு கஸ்ய ஸூ ச்யதே ஹி-
    இந்த ஜ்ஞானஸ்ருதி என்னும் சத்ரியனுக்கு சோகம் உள்ளமை ஸூ சிதமாகிறது -எதனால் என்னில்
    தத நாதர ச்ரவணாத் -தத் அநாதர ச்ரவணாத் -அந்த ஹம்ச பஷியின் இழிவுரையைக் கேட்டதனால்
    ததாத்ரவணாத்-அப்பொழுதே ரைக்ருவர் இடம் விரைந்தோடி வருகையால்
    ஆக ஸூ த்ரனுக்கு ப்ரஹ்ம விதியை அதிகாரம் இல்லை என்று முடிந்தது
    வாக்ய அந்வயாதிகரணம்
    ப்ருஹதாரனண்யத்தில் மைத்ரேயி ப்ராஹ்மணம் -யாஜ்ஞ வல்க்யர் மைத்ரேயி இடம் ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்ய
    -ஆத்மா சப்தம் பரமாத்மாவே -கார்ய காரண பாவம் உண்டு என்பதாலும் முக்தி தசையில் சாம்யாபத்தி என்பதாலும்
    -சரீராத்மா -அந்தராத்மா பாவத்தாலும் என்று காட்ட மேலே மூன்று சூத்ரங்கள்
    ————————
    முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம்
    முதல் அதிகரணம் -சர்வத்ர பிரசித்தி அதிகரணம்
    பரம புருஷன் உபாசகர் சரீரத்தின் உள்ளே இருந்தாலும் கரும பலன்களை அனுபவிக்காது –
    இரண்டாம் அதிகரணம் -அத்த்ரதிகரணம் —
    அத்தா சராசரக் ரஹணாத்–1-2-9-
    அத்தா -போக்தா என்று ஓதப்பட்டவன் -ச -அந்த பரம புருஷனே யாவன் –
    சராசரக் ரஹணாத்-சகல பிரபஞ்சமும் போஜ்ய வஸ்துவாக ஸ்ருதியில் க்ரஹிக்கப் படுவதால்
    யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யச்யோவ பசே சனம் க இத்தா வேத யத்ர ச
    உபாசகன் ரதி -சரீரம் முதலானவற்றை தேர் -சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பரம் –
    ————————————–
    அந்தர உபபத்தே –1-2-13-
    அந்தர -கண்களின் உள்ளே இருப்பவன்
    ச -அந்த பரம புருஷன்
    உபபத்தே -அங்குச் சொல்லப்படும் அபயத்வம் அம்ருதத்வம் -முதலானவை அப் பரம புருஷன் இடத்திலேயே பொருந்தக் கூடியவை யாதலால்
    ய ஏஷோஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏத தம்ருதம் ஏததபயம் ஏதத் ப்ரஹ்ம – என்பதில்
    அஷிணி புருஷோ த்ருச்யதே -கண்ணில் உள்ளவனாக ஒரு புருஷன் எற்படுகிறான்
    யச் சஷூஷி திஷ்டன் சஷூ ஷோந்தர-கண்ணில் உள்ளவனாகவும் நியாமகனாகவும் ஓதப்பட்ட பரம புருஷன் அந்த
    –ய ஏஷ –இத்யாதி வாக்யத்தினால் நினைப்பூட்டப் படுகிறான் ஆகவே அஷி புருஷன் பரம புருஷனாகவே இருக்கத் தக்கவன் –
    —————————————————-
    முதல் அத்யாயம் நான்காம் பாதம் -வாக்யான்வயதிகரணம்-நான்கு ஸூத்ரங்கள்
    வாக்ய அந்வயாத் -முதல் ஸூ த்ரம்-இத்தால் ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -என்ற இடத்தில்
    ஆத்மா பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறது
    மேலே மூன்று ஸூத்ரங்களாலே ஆச்மரதத்ய மதம் -ஔடுலோமி மதம் காசக்ருத்சன மதங்கள் காட்டப்படுகின்றன
    இதில் முதல் ஸூத்ரத்தாலே -பிரதிஜ்ஞா சித்தேர் லிங்க மாச்மரத்த்ய -ஆச்மரத்த்ய மதம் -கார்ய காரண பாவம் ஸ்ருதியில் சொல்லப் பட்டு
    இருக்கையாலே அவற்றுக்குள் பேதம் உண்டு என்றவாறு -இவ்வபேதத்தை தெரிவிக்க பரமாத்மா ஜீவாத்மாக்களுக்கு ஐகய உக்தி உள்ளது என்கிறார் –
    உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் யௌடுலொமி –முக்தி தசையில் ஜீவாத்மா பரமாத்மா அபெதித்து அவலம்பித்து ஔடுலொமி நிர்வஹித்தார்
    அவஸ்திதே ரிதி காசக்ருத்சன -அந்தராத்மாவாக இருப்பதாலும் சரீர பரிந்த வாசகத்வம் சித்தம் ஆகையாலும் ஆத்மா சப்தத்தை
    பரமாத்மா பர்யந்த வாசாகமாக நிர்வஹிப்பது உசிதம் என்கிறார் -காசக்ருத்ச்னர்
Working...
X