Dasavataram - Part3 - Varaha
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
वराहावतारः
धर्मस्वरूपो हि महावराहो स्वदंष्ट्रलग्नां उद्धृत्य भूमिं |
हिरन्यबुद्ध्या तृष्णाम्बुमग्नां न्यवेशयत् भक्तिजले पुनःताम् ||
தர்மஸ்வரூபோ ஹி மஹாவராஹோ
ஸ்வதம்ஷ்ட்ரலக்னாம் உத்த்ருத்ய பூமிம்
ஹிரண்யபுத்த்யா த்ருஷ்ணாம்புமக்னம்
ந்யவேசயத் பக்திஜலே புன: தாம்
மஹாவராஹம் தர்மஸ்வரூபம். கெட்ட புத்தியால் ஆசை என்னும் கடலில் மூழ்கிக்கிடந்த உலகை விவேகம் என்னும் கோரைப்பற்களில் மூலம் எடுத்து மறுபடியும் பக்தி என்ற ஜலத்தின் மேல் வைத்தது
ஹிரண்யாக்ஷன் பூமியை கடலுக்குள் ஒளித்து வைக்க அதை பகவான் வராஹ ரூபம் கொண்டு அவனைக் கொன்று மீட்டு மறுபடியும் ஜகத்தின் மேல் மிதக்க விட்டார் என்பது வராஹாவதாரத்தின் சாராம்சம்.
ஹிரண்யம் என்றால் பொன்.இது பொன்னாசை முதலிய ஆசைகளைக்குறிக்கும் ஹிரண்யாக்ஷன் என்னும் சொல் பொன்னாசையைக்குறிக்கும். ஹிரண்யே அக்ஷிணீ யஸ்ய ஸ: ஹிரண்யாக்ஷ:, பொன்னின் மேல் கண் உடைய என்று பொருள்.
அதாவது பொன் முதலிய விஷயசுகத்தின் மேல் ஆசை. இந்த ஹிரண்ய புத்தி பகவத்புத்திக்கு எதிரி. விஷயசுகமாகிற கடலில் பணத்தாசையால் மூழ்கின புத்தியை விவேகத்தின் மூலம் மறுபடியும் தர்மத்தின் மேல் வைப்பதுதான் வராஹாவதாரம்.
மஹாவராஹத்திற்கு வ்ருஷாகபி என்ற பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காண்கிறோம். வ்ருஷ என்றால் ' "தர்மம். கபி என்ற சொல், குரங்கோடு வராஹத்தையும் குறிக்கும். அதனால் வ்ருஷாகபி என்பது தர்மஸ்வரூபமான வராஹப்பெருமான்.
பாகவதம் வராஹப்பெருமானை யக்ஞவராஹம் என்கிறது. கீதையிலும் 'ஸர்வகதம் பிரம்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம்' சர்வவ்யாபியான பிரம்மம் யக்ஞத்தில் நிலை பெற்றிருக்கிறது, ' அஹம் க்ரது: அஹம் யக்ஞ: "நானே யக்ஞம்,' என்று காண்கிறோம். ஹிரன்யகசிபு நாராயணன் யக்ஞத்தில் இருக்கிறான் என்று எல்லா யக்ஞத்தையும் நிறுத்திவிட்டான் என்பது ப்ரகஹ்லாத சரித்ரம்.
வராஹவதாரத்தின் மகிமை வராஹபுராணத்தில் சொல்லப்படுகிறது.
sThithe manasi susvasThe Sareere sathi yo naraH
Dhaathusaamye sThithe smarthaa viSvaroopam cha maam ajam
thathasTham mriyamaaNam thu kaashTapaashaaNa sannibham
aham smraami madhbhaktham nayaami paramam gathim
இதன் பொருள் என்னவென்றால் வராஹப்பெருமான் சொல்கிறார்.
"எவனொருவன் என்னை எப்போதும் உடல் நலமாக இருக்கும்போது நினைக்கிறானோ அவனுக்கு கடைசி காலத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்தாலும் நான் அவனை நினைக்கிறேன் அவனுக்கு நல்ல கதி கொடுக்கிறேன்" என்பது.
கீதையிலும்
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத்பரா:
அனந்யேநைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ரருத்யுஸம்ஸார ஸாகராத்
என்று காண்கிறோம்.
இதன் பொருள்
"எவனொருவன் எல்லா கர்மங்களையும் எனக்கே அர்ப்பணித்து என்னையே நினைக்கிறானோ அவனை இந்த சம்சாரமாகிற சமுத்திரத்தில் இருந்து நான் தூக்கிவிடுகிறேன்."
இதுதான் வராஹவதாரத்தின் உட்பொருள்.
ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபு இருவரும் சகோதரர்கள். அடுத்த அவதாரம் ஹிரண்யகசிபுவை அழிக்க எடுத்த் நரசிம்ஹாவதாரம். ஹிரண்யகசிபு என்றால் என்ன அர்த்தம்?
கசிபு என் உணவு மற்றும் உடையைக் குறிக்கும் சொல். அதாவது உலகப்பற்று ( materialism ) . உலகப்பற்று விஷயசுகம் இது இரண்டும் இரட்டைப்பிறவி போல் பிரிக்க இயலாதது.
நாராயணனின் த்வார பாலகர்களான ஜெயவிஜயர்கள் மூன்று பிறவிகளில் ஹிரண்யாக்ஷன்-ஹிரண்ய கசிபு , ராவணன்- கும்பகர்ணன், சிசுபாலன் – தந்தவக்ரன் என்று தோன்றினர் என்று அறிவோம்
. இதில் பின்னிரண்டு இரட்டைகளை பகவான் ராமன் கிருஷ்ணன் என்ற அவதாரங்களில் முறையே அழித்தார். ஆனால் ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு இவர்களுக்காக தனித் தனியே வராஹன் நரசிம்ஹன் என்ற இரண்டு அவதாரங்களைஎடுக்க வேண்டியதாயிற்று,
இது ஏன் என்று ஆராய்ந்தோமானால், காமக்ரோதாதிகளான ஆறு குணங்களின் உருவகமே இந்த ஆறு அசுரப் பிறவிகள். சிசுபாலன் தந்தவக்ரன் இவர்கள் அசுரர்கள் அல்லவென்றாலும் அசுரகுணங்களை கொண்டவர்கள்)
ஹிரண்யாக்ஷன் – மதம் , ஹிரண்யகசிபு –குரோதம், ராவணன் – காமம், கும்பகர்ணன் – மோகம், சிசுபாலன் – மாத்சர்யம் (பொறாமை) , தந்தவக்கிரன்- லோபம். இவைகளில் மதம் குரோதம் இரண்டையும் ஒரே அவதாரத்தில் அழிக்கவில்லை என்பது இவை இரண்டும் மற்ற வைகளை விட பலம் வாய்ந்தவை என்று பொருள்.