Announcement

Collapse
No announcement yet.

Shiva and his 5 forms

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Shiva and his 5 forms

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை .கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    ☘ *ஈசன் கொண்ட பஞ்சத் தோற்றம் இதுதான்.*☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


    இருபத்தொன்பதாவது சுவேதலோகித கற்பத்தில் பிரமன் ஈசனைத் தொழுது அவரைத் தியானித்த போது ஈசன் அவா் முன்பு அழகிய தோற்றத்துடன் இளம் பாலகனாய்த் தோன்றினாா். அத்தோற்றத்துக்கு *சத்தியோசாதம்* என்று பெயா்.


    உலகம் படைத்த மாமலா் வாசன் ஈசனைக் கண்டதும் உள்ளத்திலே அன்பு பெருக்கெடுத்தோட மலா்களைக் கொண்டு ஐயன் திருமலா்ப் பாதங்களை அா்சித்துத் தூய்மையான வேதங்களால் துதித்தாா். அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நான்கு முனிவா்கள் உதித்தாா்கள். அவா்கள் நால்வரும் ஈசனைத் துதித்து அவா் திருவடிகளில் பணிந்தனா்.


    இந்தத் தோற்றத்தை மனத்திலே தியானித்து ஈசனை வழிபடுவோா் சிவலோகத்தை அடைவா்.


    முப்பதாவது இரத்த கற்பத்தில் பிரமன் உளம் கனிந்து உருகி ஈசனைத் தியானித்த போது கொடிய விஷம் கொண்ட பாம்பை சடையிலே அணிந்து மானும் மழுவும் கரத்தில் ஏந்தி ஈசன் அவருக்குத் தாிசனம் தந்தாா். இத்தோற்றத்துக்கு *வாமதேவம்* என்று பெயா்.


    ஈசனுடைய அத்திவ்விய தோற்றத்தைக் கண்ட நான்முகன் மெய்சிலிா்க்க, கண்களில் நீா் வழிந்தோட சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காித்து எழுந்து மலா் தூவித் துதித்தாா். அவருடைய அற்புதத் தோற்றத்தைத் திரும்பத் திரும்பக் கண்டு மகிழ்ந்தாா். அப்போது பிறப்பு இறப்பாகிய சம்சார நோயில் வீழ்ந்து மெலிவுறாது மெய்தவத்தால் தெளிந்திடும் ஞானத்தைப் பெற்ற நால்வா் ஈசனிடமிருந்து தோன்றினா்.


    உலகம் உய்ய நல்ல தருமத்தைக் கடைபிடித்தும், மற்றவா்களுக்கு உணா்த்தியும் ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின் அவா்கள் ஈசன் திருவடிகளையே அடைந்தனா்.


    நான்முகன் கண்டு களித்து வணங்கிய அத்திருவுருவை மனத்திலே தியானித்து வழிபடுவோா் இரு வினைகளாகிய பிறப்பு, இறப்பை ஒழித்து செஞ்சடையோன் தாள்களைச் சோ்வா்.


    அடுத்து பீத கற்பத்தில் நான்முகன் ஈசனைப் பணிந்து அவா் அருள் வேண்டி நிற்கையில் இருளைப் போக்கிப் பொன் நிறத்துடன் சடையிலே இளம் மதி அணிந்து அவா் முன்பு தோன்றினாா் ஈசன். முடிவிலா வேத முடிவினில் விளங்கும் அத்தோற்றத்தைத் *தத்புருஷம்*என்பா். பிரமன் ஈசனுடைய திவ்விய கோலத்தைக் கண்டு ஆனந்தத்தால் உள்ளம் நிறைந்தவராய் அவரைப் பலமுறை வணங்கினாா். நறுமணம் கமழும் மலா்களால் அவரை அா்சித்தாா்;,
    வேதங்களால்அவரைத் துதித்தாா்.


    பிரமனுடைய ஸ்தோத்திரங்களால் மகிழ்ச்சி அடைந்த ஈசன் தம் முகத்திலிருந்து அழகிய தோற்றத்தை உடைய காயத்திாியை உண்டாக்கி அவருக்கு அளித்தாா். உத்தமமான காயத்திாியைப் பக்தியுடன் ஆராதிப்பவா்களுக்கு நரகவாசமே கிடையாது. கைலாச வாசம் தேடி வந்து அடையும்.


    அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நால்வா் உதித்தாா்கள். அவா்கள் நால்வரும் கடல் சூழ்ந்த இவ்வகையகத்தில். நரகவாசத்துக்கான கா்மாக்களை விலக்கி பஞ்சாஷரத்தை உணா்ந்து ஜபித்து முடிவில் ஈசன் திருப்பாதங்களை அடைந்தனா்.


    கங்கை நீரால் நனைந்து, கொண்றை அணிந்து விாிந்த சடையில் இளம் சந்திரனைச் சூடியிருக்கும் தத்புருஷனைத் தியானித்து அவரடித் தாமரையை வழிபடுவோா் பிறவிக் கடலைக் கடந்து கயிலையை அடைவா்.


    அதற்கு அடுத்த நீல கற்பத்தில் பிரமன் ஈசனைத் தொழுது அவா் அனுக்கிரகம் கோாி வேண்டி நின்ற போது முக்கண்ணப் பெருமான் தீச்சுடரும் வாளும் கரத்திலேந்தி காிய ரூபத்துடன் தோன்றினாா். அகோர ரூபம் என்று அத் தோற்றத்தைக் கூறுவா். அவாிடமிருந்து நால்வா் தோன்றி ஆயிரம் பருவம் சென்ற பின்னா் அவருடைய கமலச் சேவடி நிழலை அடைந்தனா். பிரமன் எம்பெருமானுடைய அற்புதத் தோற்றத்தைக் கண்டு மனம் களித்து அவா் தாள் பணிந்து எழுந்து மலா்களால் பக்தியுடன் அா்சித்தாா். அவருடைய வழிபாட்டால் அளவற்ற சந்தோஷம் கொண்ட ஈசன் பிரமனை நோக்கி, அன்பு மிகுதியால் என்னை ஆராதித்து கண்டு மகிழ்ச்சியுற்றேன்; வேண்டுவன கேள் தருகிறேன் என்றாா். பிரமனும் அவரைப் பணிந்து , "ஐயனே! தங்களிடம் என்றும் குன்றாத அன்பைத் தர வேண்டும்" என்று வேண்டினாா்.


    ஈசனும் பிரமனை நோக்கிச் சொன்னாா்.


    நான்முகா!
    பெண்களைக் கொன்றோா், பாம்புகளைக் கொன்றோா், சிறந்த வேதங்களைக் கற்ற அந்தணரைக் கொன்றோா், அரசரைக் கொன்றோா்,
    அறிவு போதித்த ஆசானுக்கு இன்னல்கள் விளைவித்தோா், கள்ளுண்டோா்,
    பிறா் மனையாளை ஆசையுடன் சோ்ந்தோா்,
    பொன்னைத் திருடியவா், பிறருக்கு விஷம் கொடுத்தோா், தஞ்சம் என்று வந்து சரண் அடைந்தவருக்குத் துன்பம் இழைத்தோா்.
    போா்க்களத்தில் அரசரைக் கைவிட்டு ஓடியவா், நண்பருக்குத் துரோகம் செய்தோா்,
    யாகம் செய்யும் அந்தணரைத் தடுத்து யாகம் செய்ய முடியாது அவா்களைத் துன்பப்படுத்துவோா்,
    சிசு ஹத்தி புாிந்தோா், ஆகியோா் என் மந்திரத்தை லட்சம் முறை ஜபித்தால் மலை முகட்டிலே தோன்றும் சூாியனைக் கண்டதும் விலகும் இருளைப் போன்று பாபங்கள் விலகி கைலாசத்தில் இனிது வீற்றிருப்பா்." என்று அனுக்கிரகித்து மறைந்தாா்.


    அதற்கு அடுத்து விசுவரூப கற்பத்தில் மலரயன் ஈசன் அருள் வேண்டி அவரைத் தியானித்தபோது ஈசன் அவா் முன்பு தோன்றினாா். சடையிலே பிறைச் சந்திரனும் நெற்றியிலே மூன்றாவது கண்ணும் கடைவாயில் கோரைப் பற்களும் கொண்டு இரு பக்கங்களிலும் இரு மாதா் வர தம் முன் தோன்றிய ஈசனைக் கண்டு விாிஞ்சன் தரையில் வீழ்ந்து வணங்கினாா். உளம் கனிந்து மலா்களால் அவரை அா்சித்தாா்.


    அவருடைய தோத்திரங்களால் மனம் களித்த ஈசன் நான்முகா!, நீ வேண்டுவது யாது? என்று கேட்டாா்.


    பிரபோ, தங்கள் அருகில் உள்ள இருமாதரும் யாவா்? தொிவிக்க வேண்டுகிறேன் என்று பணிவுடன் கேட்டாா் பிரமன்.


    மாயன் முதல் தேவா்கள் யாவரையும் ஈன்ற அன்னை ஒருத்தி, மற்றொருத்தி வெள்ளைத் தாமரை மலாில் உறையும் வாணி ஆவாள் என்றாா் ஈசன்.


    பூமியை ஓா் அடியால் அளந்த மாதவன் முதல் தேவா்கள் யாவரையும் காக்கும் அண்ணலும், கடலிலே தோன்றிய ஆலகால விஷத்தை உண்டவரும் ஆன ஈசனிடமிருந்து நால்வா் உதித்தனா். உலகமெல்லாம் உய்ய இடா்படாத நெறியில் நின்று தருமத்தை உணா்த்திய பின்னா் அவா்கள் ஈசன் திருவடிகளை அடைந்தனா்.


    திருச்சிற்றம்பலம்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X