Announcement

Collapse
No announcement yet.

Toe ring - metti of Goddess Lakshmi Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Toe ring - metti of Goddess Lakshmi Continues

    courtesy:http://www.srikainkaryasri.com/2017/...lya-vaibhavam/
    மஹா வாத்ஸல்ய வைபவம்———————————————————–
    தாயாரின் மெட்டி வைபவம்


    3. தைத்த்ரீயத்தில் ஒரு செய்தி—–
    கூர்மாவதாரம் செய்து, உலகைத் தாங்கி வருகின்ற பரமபுருஷனை
    ப்ரஹ்மா கேட்டாராம்
    " நான் இதுவரை ச்ருஷ்டித்தவைகளில் , உம்மைப்போல் யாரையும்
    சிருஷ்டிக்கவில்லையே –நீர் யார் ? "
    அதற்குப் பகவான்,
    நான் சிருஷ்டிக்கும் அப்பாற்பட்டவன் –உன்னையும் சகல சேதன ,
    அசேதனங்களையும் , ஸ்ருஷ்டித்தவன் — " என்றாராம்
    இதற்கு நிரூபணம் ஹே–மெட்டித் தேவியே—நீ ,எம்பெருமானின்
    திருமார்பில் நித்ய வாஸம் செய்யும் பிராட்டியின் திருவடிகளில்
    இருந்துகொண்டு , ப்ரஹ்மாவுக்குத் தர்சனம் தந்ததாலோ !
    4. ஹே–மெட்டித் தேவியே—தேவர்களும் ,அசுரர்களும் தங்களுடைய
    மணிமகுடங்களுடன் ,பிராட்டியைக் கீழே குனிந்து வணங்கும்போது,
    அவைகள் ஜ்வலித்து , உன்னுடைய காந்திக்கு ஹாரத்தி எடுப்பதுபோல
    இருக்கின்றன
    5. ஹே–மெட்டித் தேவியே—துர்வாசரின் சாபத்துக்கு இலக்கான இந்த்ரன் ,
    பிராட்டியிடம் ஓடிவந்து , தெண்டனிட்டபோது , உன்னையே முதலில்
    தர்ஸி த்தான். அவனுக்கு அருள் செய்ய ,பிராட்டிக்கு ,நீ , உன்
    குறிப்பால் ப்ரார்த்தித்தாய் –உனக்கு நமஸ்காரம்
    6. ருக்மிணி விவாஹத்தில் , அம்மி மிதிக்கும் சமயத்தில் , க்ருஷ்ணன் ,
    ருக்மிணியின் தாமரைமலரையொத்த திருவடியை, தன்னுடைய
    திருக் கரங்களால் பற்றி , அம்மியில் ஏற்றும்போது , ஹே–மெட்டித் தேவியே —
    க்ருஷ்ணனின் திருக்கரங்களின் ஸ்பர்சம் பட்டு , பரவசப்பட்டு,,ருக்மிணியையும்
    பரவசப் படுத்தினாய் –உனக்கு நமஸ்காரம்
    7. ஹே–மெட்டித் தேவியே–பத்து உபநிஷத்துக்களும் ,தங்கள் சிரஸ்ஸில்
    சூட்டிக்கொண்டுள்ள " ராக்கொடி "யைப் போல, பிராட்டியின் திருவடிகளில்
    தர்சனம் தருகிறாய் . உனக்கு நமஸ்காரம்
    8. ஹே–மெட்டித்தேவியே –நாராயணன் நம்பி செம்மையுடைய
    திருக்கையால் ஆண்டாளின் தாள் பற்றி,(பூதேவி )அம்மி மிதித்தபோது
    பகவானின் திருக்கரங்களின் ஸ்பர்சத்தால் பரவசமாகி, கோதாப்
    பிராட்டியையும் மெய்மறக்கச் செய்தாய் .உனக்கு நமஸ்காரம்
    9. ஹே–மெட்டித்தேவியே—பிராட்டி, ரத்ன பாதுகையை அணிந்திருக்கிறாள்
    அந்த ரத்ன பாதுகைக்கு திலகம் இருப்பதைப் போல, நீ தர்ஸனம்
    தருகிறாய்.உனக்கு நமஸ்காரம்
    10. ஹே–மெட்டித்தேவியே —செம்பஞ்சுக்குழம்பால் ஆன திருவடி
    இலச்சினையை உடையவள் பிராட்டி.நீ, அதற்கு அலங்காரமாகக்
    காக்ஷி கொடுக்கிறாய் உனக்கு நமஸ்காரம்
    11. ஹே–மெட்டித் தேவியே —பிராட்டி மங்கள தேவதா என்று
    சஹஸ்ரநாமம் புகழ்கிறது –நீ,மங்களத்துக்கு எடுத்துக் காட்டு
    உனக்கு நமஸ்காரம்
    ————————————————————————————————-
    10. கடாக்ஷமும் , அனுக்ரஹமும்
    ———————————————–
    1. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியை , "புண்ய நிலயா " என்று
    சஹஸ்ரநாமம் புகழ்கிறது. புனிதமான இடத்தில் மட்டுமே
    நிலைத்திருப்பவள், தாயார். அந்தப் புனிதத்தை தாயாருக்குக்
    காட்டிக்கொடுப்பவள் ,நீயே . அடியேனின் ஹ்ருதயம் புனிதம்
    என்பதை ,சமர்ப்பித்து , பிராட்டி அடியேனின் ஹ்ருதயத்தில்
    நிலைத்திருக்கும்படி கடாக்ஷிப்பாயாக
    2. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி அடியேனின் அளவில்லாப்
    பாவங்களை மன்னித்து, அடியேனைக் கடாக்ஷிக்குமாறு ,
    பிராட்டிக்கு முகக் குறிப்பால் சொல்வாயாக !
    3.ஹே—மெட்டித் தேவியே—மலரைச் சிறப்பித்துசொல்லுகிற
    கவி , அதன் நறுமணத்தைச் சொல்லாமல் ,சொல்வதைப்
    போல , பிராட்டி அணிந்திருக்கும் மெட்டியான உன்
    திருநாமத்தைச் சொன்னவுடன் , மலரின் வாசனை மகிழ்ச்சி
    அளிப்பதைப் போல, உன் திரண்ட அனுக்ரஹம் அடியேனுக்குக்
    கிடைத்து ,க்ருதார்த்தனாக்குகிறது
    4.ஹே—மெட்டித் தேவியே எட்டுத் திசைகளுக்கும் பாலகர்களான
    இந்த்ரன் , அக்னி , ,யமன் நிர்ருதி, வருணன், வாயு , குபேரன் ,
    ஈசானன் , ஆகியவர்கள் பிராட்டிக்கு , ஸுப்ரபாதம்
    சொல்வதற்காக ,சந்நிதிக்குப் போகும்போது, முதலில் உன்னை
    தரிசித்த பிறகே ,பிராட்டியின் கடாக்ஷத்தைப் பெறுகிறார்கள்
    5. ஹே–மெட்டித் தேவியே–நவக்ரஹங்களான சூர்யன் ,புதன் ,
    சந்த்ரன் , அங்காரகன் ,ராஹு , கேது , ப்ருஹஸ்பதி ,
    சுக்ரன் ,சனி , இவர்கள் , பிராட்டியின் கைங்கர்யத்தில்
    மிகவும் பற்றுதலுடன் ,பிராட்டியின் திருவடித் தாமரையை
    சேவிக்க முற்படும்போது, முதலில் உன்னை சேவித்தபிறகே
    ,திருவடிகளை சேவிக்கிறார்கள்
    6. ஹே—மெட்டித்தேவியே –ஸப்தரிஷிகளும் ,தேவ கங்கையில் நீராடி
    ஸந்த்யாவந்தனாதிகளை முடித்து , பாரிஜாதம் முதலிய
    தேவமரத்துப்புஷ்பங்களைக் கொய்து , பிராட்டியை சேவிக்க
    வந்து . முதலில் உன் மீதுதான் மலர்களைத் தூவுகிறார்கள்
    7. ஹே—மெட்டித்தேவியே—-பிராட்டி "சரண்யா " என்று புகழப்படுகிறாள்
    சரணாகதி அடைந்தவர்களைக் காக்கிறாள் . ,இப்படி , பிராட்டியின்
    திருவடிகளைச் சரணாகதி செய்பவர்களுக்கு, ஞான ஒளியாக
    நீ, அனுக்ரஹிக்கிறாய்
    8. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, "ஸுதரா "–எளிதில்
    ஆச்ரயிக்கத்தக்கவளாக இருக்கிறாள் என்பதற்கு , நீ,
    மிகவும் அனுகூலையாக இருக்கிறாய்
    ——————————————————————————————-
    11. பலச்ருதி
    ———————
    1. ஹே–மெட்டித் தேவியே —உன்னை அந்தரங்க சுத்தியுடன்
    துதிக்கும்போது , சொற்கள் செய்யுளாக இல்லாவிட்டாலும்
    ச்லோகமாக இல்லாவிட்டாலும், உன் வாத்ஸல்யம்
    தங்குதடையின்றி அடியோங்களை நோக்கி ஓடிவரும்
    2. உன் வாத்ஸல்யம் மாத்ரமல்ல, எந்தத் திருவடியை அகலகில்லேன்
    என்று அனவரதமும் அணிசெய்கிறாயோ அந்தப் பிராட்டியின்
    வாத்ஸல்யமும் மழைபோல அடியோங்கள் மீது பொழியும்
    3. உங்கள் இருவரின் வாத்ஸல்யம் மாத்ரமல்ல, உன்னை அணியாகக்
    கொண்ட பிராட்டியை, எப்போதும் வக்ஷஸ்தலத்தில் வைத்து
    சந்தோஷிக்கும் திருமகள் கேள்வனின் வாத்ஸல்யமும்
    சரமழையைப் போல அடியோங்கள் மீது பொழியும்
    4. அடியோங்களுக்கு, இப்படி மஹா வாத்ஸல்யத்தை அருளும்போது,
    வேண்டுவார் வேண்டுவனவும் அருளி, முடிவில் வானுலகும்
    அருளி, அடியோங்கள் தொண்டர்குலம் தழைக்கவும்
    அருளுவாயாக
    கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலினே
    ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :
    ————————–ஸர்வம் ஸ்ரீ ஹயக்ரீவ ப்ரீயதாம் ————
Working...
X