Announcement

Collapse
No announcement yet.

Toe ring - metti of Goddess Lakshmi Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Toe ring - metti of Goddess Lakshmi Continues

    courtesy:http://www.srikainkaryasri.com/2017/...lya-vaibhavam/
    மஹா வாத்ஸல்ய வைபவம்———————————————————–
    தாயாரின் மெட்டி வைபவம்
    11. ஹே—பெரிய பிராட்டியே —
    உன் திருவடித் திருவாபரணமான 'மெட்டி"யின் வைபவத்தை, கேட்க, உன் பதியும்,
    உலகங்களுக்கு எல்லாம் பதியுமான எம்பெருமான், ஆவலாக இருக்கிறான்.
    திவ்ய தம்பதியராக வீற்றிருக்கும் இத் திருவோலக்கத்தில், அடியேனின்
    இந்த "மெட்டி " வைபவத்தை, ஆற அமரச் செவிமடுத்து அநுக்ரஹிக்கப்
    ப்ரார்த்திக்கிறேன்
    12. ஹே—பெரிய பிராட்டியே–
    நீ, மெட்டிக்கு மேன்மையைக் கொடுப்பவள். உன்னால், உன் திருவடியில்
    அணியப்பட்டதால், உன்னுடைய எல்லாத் திருவாபரணங்களையும்விட,
    மேன்மையைப் பெறுகிறது. அப்படிப்பட்ட, உன் திருவடியை அலங்கரிக்கிற
    'மெட்டி " என்கிற தேவிக்கு நமஸ்காரம். புந ; புந : நமஸ்காரம்.
    13. ஹே—மெட்டித் தேவியே —
    மஹாவித்வான்களும், விருப்பு வெறுப்பு இல்லாதவர்களும் பொறாமை
    இல்லாதவர்களும், உன்னைப்பற்றியதான அடியேனின் இந்த "வைபவ"
    க்ரந்தத்தைச் செவிசாத்தி அருள, நீ க்ருபை செய்ய உன்னையே
    ப்ரார்த்திக்கிறேன் .
    14. ஹே—மெட்டித்தேவியே—
    பெரிய பிராட்டியின் திருவடிவிரலில் பதிந்து, பிராட்டிக்கு ஆனந்தத்தைத்
    தருகிறாய். நீயும் ஆனந்தப்படுகிறாய். இந்த மகிழ்ச்சியில் ,ஒருதுளி
    அடியேனுக்குத் தந்து, கடாக்ஷிப்பாயாக !
    ——————————————————————-
    2. வடிவழகு
    ——————
    1.ஹே—மெட்டித் தேவியே—பெரியபிராட்டியின் திருவடி விரலில்,
    வளையம் போலச் சுற்றிக்கொண்டிருக்கிறாய்.
    அடியேனை அனுக்ரஹிப்பாயாக 1
    2.ஹே—மெட்டித்தேவியே —பெரிய பிராட்டியின் திருவடி விரலுக்குப்
    பாதுகாப்பாக இருக்கிறாய். அடியேனை அனுக்ரஹிப்பாயாக !
    3. ஹே—மெட்டித் தேவியே—பெரிய பிராட்டியின் திருவடி விரலில்,
    உன் உள்புறம் மிக வழுவழுப்பாக, திருவடிவிரலுக்குத் துன்பம்
    நேராதவண்ணம் மென்மையாக இருக்கிறாய். அடியேனை
    அனுக்ரஹிப்பாயாக !
    4. ஹே—மெட்டித் தேவியே —பெரிய பிராட்டியின் திருவடி விரலில்
    சுற்றிக் கொண்டு,வெளிப்புறத்தில், அடுத்த திருவிரல்களுக்கும்
    மென்மையாக இருக்கிறாய். அடியேனை அனுக்ரஹிப்பாயாக !
    5 பெரியபிராட்டியின் அணிகலனான மெட்டித் தேவியே —-
    பெரியபிராட்டியின் திருக்கை வளையல்கள், உன்னைப்போலத்
    திருவடிகளை அலங்கரித்துப் பாக்கியம் அடைய முடியவில்லையே
    என்று ஏங்குகின்றன.
    6. ஹே—மெட்டித் தேவியே—பெரியபிராட்டியார் அணிந்திருக்கும்,
    மேகலையும், தோள்வளையும் , ஒட்டியாணமும் சலங்கையும்
    நீ, சிறிய வடிவழகில் இருந்தாலும் உன் பெருமைக்குப் போட்டி
    போட இயலவில்லையே என்று தங்களுடைய பெரிய வடிவத்தை
    வெறுத்தாலும் பிராட்டியின் திருமேனி சம்பந்தத்தால் மகிழ்கின்றன .
    7. ஹே—மெட்டித் தேவியே—சிறிய வடிவத்தில், உனக்குள்ள
    பெருமையை சிந்தித்துத்தான் எம்பெருமான், சிறிய வடிவில்
    வாமனாவதாரம் எடுத்துப் பெருமை கொண்டானோ !
    8. பகவானை, மங்கலம் பகவான் விஷ்ணு : , மங்கலம் மதுஸு தன :
    மங்கலம் புண்டரீகாக்ஷோ மங்கலம் கருடத்வஜ –என்று ஸ்தோத்ரம்
    செய்கிறோம்.பகவானுக்கு இந்த நிலை, பிராட்டியின் சம்பந்தத்தாலே
    அமைந்தது. அப்படிப்பட்ட மங்கல மஹாதேவியான பிராட்டிக்குத்
    திருவடியில் ஆபரணமாக ஆகி ஹே—மெட்டியே –நீயும் மங்கல
    வடிவாக ஆனாய் !
    9. ஹே—மெட்டித்தேவியே —எல்லா திருவாபரணங்களும் பிராட்டியின்
    சிரஸ் , திருநெற்றி, திருச்செவி , திருமூக்கு, திருக் கழுத்து, திருத்தோள்
    இவைகளை அலங்கரித்துப் பெருமை பெறுகின்றன. ஆனால் நீயோ,
    பரம பக்தனைப்போல, பிராட்டியின் திருவடியைத் தஞ்சம் அடைந்து,
    சின்னஞ்சிறு வடிவில், கற்பனைக்கே எட்டாத பெருமையைப் பெறுகிறாய்
    10. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் அப்ராக்ருதத் திருமேனியில்,
    நீயும் அவருக்குத் திருவாபரணமாக ஆகி, அப்ராக்ருத வடிவமெடுத்தாய் !
    11. பிராட்டி "ஹார்த மூர்த்தி"–த்யானம் செய்பவர்களின் சிறிய ஹ்ருதயத்தில்,
    பகவானுடன் ஸேவை சாதிக்கும் "அந்தர்யாமி " என்கிற திருவடிவை உடையவள்.
    அந்த மிகச் சிறிய திருவடிவிலும், திருவடியில் திருவிரலுக்கு ஏற்றாற்போல்
    மிகமிகச் சிறிய வடிவெடுத்து அலங்கரிக்கிறாய்–உனக்கு நமஸ்காரம்
    12. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் திருக்கரத்தில் உள்ள "கணையாழி"யும்
    (மோதிரம் ) வடிவில் உன்னைப்போலச் சிறுத்து இருந்தாலும், திருவடியை
    அலங்கரிக்க இயலவில்லையே என்று தாபப்படுகிறது
    13. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் திருவடி "ப்ரணவ" ரூபத்தில் உள்ளது.
    ப்ரணவத்தில் , "ம்" என்கிற அக்ஷரத்துக்கு , புள்ளியைப் போலத் திலகமாக
    ஸேவை சாதிக்கிறாய். உனக்கு நமஸ்காரம்.
    14. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் திருமேனியில், திருமுடியைக்
    க்ரீடம் வளைத்து இருந்தாலும், திருக்கழுத்தை அட்டிகை வளைத்து இருந்தாலும்,
    திருவடிகளைச் சலங்கையும் கொலுசும் வளைத்து இருந்தாலும், அவை, எவ்வளவு
    பெரியவையாக இருந்தாலும், திருவடியில் அடக்கமாக இருக்கும் உன் வடிவழகு
    பக்தர்களின் மனத்தில் பதிந்துவிட்டது.
    ————————————————————————————————————————————————–
    3. த்யானம்
    ————-
    1. ஹே—மெட்டித் தேவியே—
    பிராட்டியை "பூ: பாதௌ யஸ்ய நாபி: " என்று கொண்டாடும்போது,
    ஆகாசம், பிராட்டியின் திருநாபியாகத் த்யானிக்கப்படுகிறது.
    அப்படிஎன்றால், நீ, "பூ: பாதௌ ' . பிராட்டியின் திருவடி இவ்வுலகமாகும்போது,
    அதில் உன்னைப் புண்யபூமியான இடமாகத் த்யானிக்க ஏதுவாக இருக்கிறாய்.
    2. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி "திவ்ய பூஷா" –நித்யசூரிகளே
    திருவாபரணங்களாகத் தோன்றி ஸேவை சாதிப்பவள்.
    "த்ரிபாத்த்வம் ச …….பூஷணாஸ்த்ராதி ரூபேண ஜகதந்திர்கத …." என்று
    ச்ருதப்ரகாசிகா வர்ணிப்பது, பிராட்டிக்கும் உரியது. ஆதலால், உன்னையும்
    " நித்ய சூரிகளே திருவாபரணம் என்பதாக த்யாநிக்கிறேன்
    3. ஹே—மெட்டித் தேவியே—"சாகா விபாக சதுரே தவ சாதுராத்ம்யே "
    என்று பரமாசார்யன் , வரதராஜ பஞ்சாசத்தில் அருளியபடி, எம்பெருமான்
    வ்யூஹத்தில் வாஸுதேவ , ஸங்கர்ஷண , ப்ரத்யும்ந , அநிருத்தன் என்று
    பிரித்துக்கொண்டபோது, பிராட்டியும் தன்னை, பத்னிலக்ஷ்மிஎன்றும் ,
    கீர்த்தி என்றும் , ஜயா என்றும், மாயா என்றும் நான்காகப் பிரித்துக்கொண்டாள்
    ஆனால், ஹே–மெட்டித் தேவியே—நீயோ அவ்விதமான எவ்விதப் பிரித்தலும்
    இன்றி ."மெட்டி " என்பதாகவே திருவடிகளில் த்யானம் செய்ய அருள்கிறாய்.
    4. எம்பெருமான், வ்யூஹாந்தரங்களில், தன்னை வாஸுதேவன் என்கிற
    வ்யூஹத்தில், கேசவன் ,நாராயணன் ,மாதவன் என்று ிரித்துக்கொண்டபோது,
    பிராட்டியும் , 'ஸ்ரீ : ', "வாகீச்வரி ", "காந்தி ", என்று பிரித்து, பகவான்
    கூ டவே இருக்கிறாள்.
    ஆனால், ஹே—மெட்டித்தேவியே —நீ, மெட்டி என்கிற அடையாளத்தில்
    பிராட்டியின் திருவடிகளில், எவ்வித வேறு திருநாமமும் இல்லாமல்,
    த்யாநிக்கத் தகுந்தவளாக இருக்கிறாய்.
    5. எம்பெருமான் ,தன்னை, வ்யூஹாந்தரங்களில், 'ஸங்கர்ஷணன் " என்கிற
    வ்யூஹத்தில், கோவிந்தன், விஷ்ணு, மதுஸுதனன் , என்று பிரித்துக்
    கொள்ளும்போது , பிராட்டியும் "க்ரியா ", "சாந்தி :","விபூதி : " என்று
    தன்னைப் பிரித்துக்கொண்டு, எம்பெருமானுடன் கூடவே உறைகிறாள்.
    ஹே—மெட்டித் தேவியே—-நீ அடியார்கள் மனத்தில், என்றும் பிராட்டியின்
    திருவடியில்,"மெட்டி " என்கிற திருநாமத்துடனேயே த்யானிக்க உதவியாக
    இருக்கிறாய்.
    6. எம்பெருமான் வ்யூஹாந்தரங்களில், தன்னை "ப்ரத்யும்நன் " என்கிற
    வ்யூஹத்தில் த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் , என்று
    பிரித்துக்கொள்ளும்போது பிராட்டியும்
    தன்னை, "இச்சா ", "ப்ரீதி : " , "ரதி : " , என்று பிரித்துக்கொண்டு
    எம்பெருமானை
    விட்டு, எப்போதும் பிரியாமல் இருக்கிறாள்.ஆனால், மெட்டித் தேவியான
    நீயோ,
    வேறு எந்தத் திருநாமமும் இன்றி, "மெட்டி " என்கிற திருநாமத்துடன்,
    பிராட்டியின்
    திருவடியில் த்யானிக்க அநுகூலையாக இருக்கிறாய்.
    7. எம்பெருமான் வ்யூஹாந்தரங்களில், தன்னை, "அநிருத்தன் " என்கிற
    வ்யூஹத்தில்,
    ஹ்ருஷீகேசன் , பத்மநாபன், தாமோதரன், என்று பிரித்துக்கொள்ளும்போது,
    பிராட்டியும் தன்னை, "மாயா " , "தீ : ", "மஹிமா " என்கிற
    திருநாமங்களில் பிரிந்து,
    பகவானுடன் உறைகிறாள் . ஆனால்,ஹே , மெட்டித்தேவியே—உன்
    சௌலப்யம்தான் என்னே ! நீ, அதே திருநாமத்துடன், அடியோங்கள்
    த்யானிக்க அருள்கிறாய்
    8. பிராட்டி, "பல்லவாங்க்ரி " –தளிர் போன்ற மெல்லிய திருப்பாதங்கள்
    உள்ளவள் என்று,
    சஹஸ்ரநாமம் சொல்கிறது. அந்தத் தளிரில், இது தாயாரின் திருவடி என்று
    "இலச்சினை" செய்யும் ஹே —மெட்டித்தேவியே —உன்னைத்
    த்யாநிக்கிறோம்
    9. பிராட்டி, "ஸமாதி பூ : " என்று கொண்டாடப்படுகிறாள். த்யானத்தில்
    தோன்றுபவள்,
    பிராட்டி. அப்படித் த்யானம் செய்பவர்களின் மனதில், ஹே—மெட்டியே
    -பிராட்டியின்
    திருவடியை அலங்கரிக்கும் நீயே முதலில் தோன்றுகிறாய்.
    10.பிராட்டியை "கல்யா " என்று சஹஸ்ரநாமம் புகழ்கிறது. த்யாநிக்கத் தக்கவள்
    பிராட்டி. பிராட்டியைத் த்யாநிப்பது என்றால்,ஹே–
    மெட்டித்தேவியே–நீயே
    முதலாவதாக த்யாநிப்பதற்கு ஸேவை சாதிக்கிறாய். உனக்கு நமஸ்காரம்

    To be continued
Working...
X