Announcement

Collapse
No announcement yet.

சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

    சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன்,உபகோஸலர் - 6


    ‘க’– பிரம்மம், ‘க்க’-பிரம்மம் என்பதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை.
    அவற்றிற்கான விளக்கம் அக்கினி தேவதை உரைப்பதை அவர் மேலும் கேட்டார்.
    ‘க’ என்னும் அக்ஷரமும் ‘க்க’ என்னும் அக்ஷரமும் ஒரே பொருளைக் குறிப்பதாகும்
    என்று அக்கினி தேவதை மேலும் விளக்கியது. ‘க’ என்னும் அக்ஷரம் சுகத்தையும்,
    ‘க்க’ என்னும் அக்ஷரம் ஆகாசத்தையும் குறிக்கும். சுகத்துக்கு ஆதியும் அந்தமும் உண்டு.
    பிரம்மத்துக்கு ஆதியும் அந்தமும் இல்லை. ஆகாசம் அசேதனப் பொருள். பிரம்மமோ
    சேதனப் பொருள். எனவே அவ்வக்ஷரங்கள் எப்படி பிரம்மம் ஆகும் என்று எண்ணிப் பார்த்தார்.
    ஆழ்ந்த தியானத்திலிருந்து அவற்றிற்கு விளக்கம் காண முயன்றபொழுது அவற்றிற்குரிய
    விளக்கம் அவருடைய உள்ளத்தில் உதித்தது. புலன்களின் மூலம் எட்டும் விஷய சுகம்
    சாசுவதமானதன்று. ஹிருதய குகையில் விளங்கும் ஆசுகம் அழியாதது.
    அதுவே பிரம்ம சுகம் ஆகிறது. அக்கினி உபதேசித்த சுகம் ஹிருதயகுகையில் விளங்கும்
    சுகத்தைக் குறிக்கவேண்டும், வெளியிலுள்ள ஆகாசம் ஜட ஆகாசமாகிறது.
    எனவே அது பிரம்மத்தைக் குறிக்காது. ‘சிதாகாசம்’ என்னும் ஆனந்தமயமான ஆகாசம்
    நம்முள் இருக்கிறது. ஆகாசம் என்ற சொல் அதையே குறிக்கவேண்டும்.
    இங்ஙனம் அக்கினியின் உபதேசத்துக்கு உபகோஸலர் பொருள் கண்டார்.
    மேலும் அவர் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். அப்பொழுது இன்னும் சில
    அரிய கருத்துக்கள் அவருக்குத் தெளிவாயின. வெட்டவெளியைப் பிளவுபடுத்த முடியாது.
    ஓர் அறைக்கு உள்ளிருக்கும் வெட்டவெளியும் அறைக்கு வெளியில் இருக்கும் வெட்டவெளியும்
    அறையின் சுவரினுள் இருக்கும் வெட்டவெளியும் ஒன்றேயாம்.
    இங்ஙனம் ஹிருதய குகையில் இருக்கும் பிரம்மமும் பிரபஞ்சத்திலிருக்கும் பிரம்மமும்
    ஒன்றேயாகும். பிரம்மசுகத்தைப் புறஉலகப் பொருள்கள் எதனிடத்திருந்தும் பெறமுடியாது.
    பிரம்மம் ஒன்றினிடத்து இருந்தே பிரம்ம சுகத்தைப் பெறமுடியும். அப்பிரம்ம சுகம்
    பிரம்மத்தை அறிகின்றவர்களுக்கே உரியதாகும்.


    ஸத்தியாகாமர் தன்னுடைய யாத்திரையை முடித்துக்கொண்டு ஆச்ரமத்திற்குத் திரும்பினார்.
    அக்கினியிலிருந்து அவருக்குக் கிடைத்த பிரம்ம தேஜஸ் விளங்குவதைக் கண்டார்.
    அக்கினியிலிருந்து அவருக்குக் கிடைத்த உபதேசத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.
    ஸத்தியகாமர் மேலும் அதை அவருக்குத் தெளிவுபடுத்தினார். இங்ஙனம் உபகோஸலருக்கு
    ஸத்தியகாமர் ஞானவாழ்வை நல்கினார். உபகோஸலரும் ஸத்தியகாமரை
    குருவாகக் கொண்டு ஞானத்தை அடையப்பெற்றவரானார்.


    [இந்த ஞானியரின் வரலாறும் உபதேசங்களும் சாந்தோக்கிய உபநிஷதத்தில் உள்ளவை]


    concluded.


    Thanks to Sri Swamiji for this wonderful article.
Working...
X