Announcement

Collapse
No announcement yet.

சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன&

    சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஸத்தியகாமன் - 3

    பசுக்கள் ஆயிரமாகப் பெருகியது உண்மைதானா என்று கணக்கிட்டுப் பார்த்ததில்
    அது முற்றிலும் உண்மை என்று அவனுக்குப் புலப்பட்டது. அவனுடைய ஸத்தியத்தையும்,
    கடும் தவத்தையும், குரு பக்தியையும் கண்ட வாயுபகவான் அவனுக்கு மேலும் பிரம்மத்தைப்
    பற்றிய ஞானத்தை உபதேசிக்க முன்வந்தது. ஸத்தியகாமன் வாயுபகவான் உபதேசத்தை ஏற்கச்
    சம்மதித்தான். “நான்கு திசைகளிலும் பிரம்மம் ஒன்றே பரந்து இருக்கிறது. எத்திக்கும் உள்ள
    பிரம்மத்தை தியானிக்க வேண்டும். பிரம்மத்தைப் பேரொளி வடிவமாகத் தியானிக்கும்போது
    தியானிப்பவனுடைய அறிவு பிரகாசமுடையதாகிறது. பிரம்மத்தினுடைய பேரியல்பில் பிரகாசம்
    ஒருபகுதி என்றும் இப்பகுதிக்குப் ‘பிரகாசவான்’ என்ற பெயரும் உண்டு” என்று வாயுபகவான்
    உபதேசித்தது. பிரம்மத்தைப் பற்றிய விளக்கத்தில் இது கால்பங்கு என்றும் மேலும்
    அக்கினியிடமிருந்து ஸத்திய காமனுக்கு உபதேசம் கிடைக்கும் என்றும் வாயுபகவான் கூறிற்று.


    மறுநாள் காலையில் ஸத்தியகாமன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கெளதமருடைய
    ஆசிரமத்திற்குப் புறப்படான். அவன் உள்ளத்தில் ஆனந்தம் ததும்பிக்கொண்டிருந்தது.
    முந்திய நாள் வாயுபகவானிடம் இருந்து கிடைத்த உபதேசம் அவனுடைய வாழ்க்கையில்
    பெரும் மாறுதலை உண்டாக்கியிருந்தது. சூரியன், அடர்ந்த காடு, மலர்களும், பழங்களும்
    நிறைந்த கொடிகள், சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டு ஓடும் தெளிந்த நீரோடை–
    இயற்கையிலுள்ள இக்காட்சிகள் தெய்வத்தன்மையை ஸத்தியகாமனுக்கு வெளிப்படுத்திக்
    கொண்டிருந்தன. அவன் உள்ளத்தில் சொல்லொணாத ஆனந்த ஊற்று கிளம்புவதை உணர்ந்தான்.
    இதற்கு முன்பு இத்தகைய ஆனந்தத்தை அவன் அனுபவித்து கிடையாது. அவன் ஆசிரமத்தை
    அடைவதற்குமுன் இரவு நேரம் வந்துவிட்டது. பசுக்களை ஒழுங்குபடுத்தி ஓர் இடத்தில்
    இருத்திவிட்டு யாகத்துக்கு நெருப்பை மூட்டினான். ஹோமாக்னிக்குமுன் தியானத்தில்
    அமர்ந்தான். ஹோமாக்னி பேசுவது போன்ற குரல் அவன் காதில் விழுந்தது.


    அப்பொழுது அப்பேச்சிலிருந்து அவனுக்குக் கிடைத்த உபதேசமாவது:
    “இப்பூவுலகிலும் இதற்கு மேலுள்ள சொர்க்க லோகத்திலும் இவ்விரண்டிற்குமிடையிலுள்ள
    இடைவெளியெங்கும், இப்பூவுலகத்திற்குக் கீழும் ஆகிய எல்லாஇடங்களிலும் பிரம்மமே
    நிறைந்திருக்கிறது. எல்லையிலடங்காத அனந்த சொரூபமாக இருக்கும் பிரம்மத்தைத்
    தியானம் செய்தல் வேண்டும். பிரம்மத்தின் தன்மைகளுள் இவ்வானந்தம் ஒருபகுதி.
    பிரம்மத்தின் இப்பகுதி “அனந்தவான்” என்று அழைக்கப்படுகிறது”. இங்ஙனம் பிரம்மத்தின்
    பிரகாசமே எங்கும் நிறைந்திருக்கிறதென்றும் அதன் மகிமைக்கு ஓர் எல்லையில்லை
    என்றும் ஸத்தியகாமனுக்கு உபதேசிக்கப்பட்டதும் அவன் முகத்தில் பிரம்ம தேஜஸ் திகழ்ந்தது.
    அவன் எங்கும் பிரம்மத்தின் மஹிமையையே உணரலானான்.


    அடுத்தநாள் தன்குருவின் ஆசிரமத்தை நோக்கி ஸத்தியகாமன் தன் பிரயாணத்தைத்
    தொடங்கினான். ஆனால் அன்றும் அவன் ஆசிரமத்தை அடைவதற்குமுன் இருள் சூழ்ந்துவிட்டது.
    முன்னாள் இரவு போன்று பசுக்கூட்டம் தங்க இடம் அமைத்துவிட்டு நெருப்பை மூட்டி
    தியானத்தில் அமர்ந்தான். அப்பொழுது ஓர் அன்னப்பறவை அவன் இருந்த இடத்திற்கு
    மேலே பறந்து செல்வதைப் பார்த்தான். ஆதித்யன் அவ்வன்னப்பறையின் வேடம் பூண்டு
    ஓர் அரிய விஷயத்தை உபதேசிக்க அங்கு வந்திருப்பதாக அவன் உள்ளத்தில்
    ஓர் உணர்ச்சி உண்டாயிற்று.


    அப்பறவை அவனுக்கு உபதேசித்ததாவது– “பிரம்மத்தின் ஒளியே அக்னிவடிவமாகப்
    பூமியிலும், சூரிய சந்திர வடிவங்களாகச் சொர்க்கத்திலும், மின்னலின் வடிவமாகச்
    சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வெளியிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
    பிரம்மத்தின் ஜோதி வடிவை இங்ஙனம் தியானித்துப் பழக வேண்டும். பிரம்மத்தின்
    ஜோதிமயமான இப்பகுதி ‘ஜோதிஷ்மான்’ என அழைக்கப்படுகிறது.”


    continue..........
Working...
X